6 April 2017

பெண்ணுக்கு உடையே பகையாகுமா :)

தண்ணியில்லாம மீனு வாழ முடியுமா :)
           ''நம்ம பையன் எந்நேரமும் தண்ணீயிலேயே இருக்கானே ,என்னங்க பண்றது ?''
           ''அவன் உன் வயிற்றில் வளரும் போது ,மீனை நிறைய சாப்பிடாதேன்னு சொன்னேன் ,அப்பவே கேட்டிருக்கணும் !''

பெண்ணுக்கு  உடையும்  பகையாகுமா :)
             ''ஒர்க் ஷாப்பில்  வேலைப் பார்க்கிறதிலே உனக்கு என்னடி கஷ்டம் ?''
             ''டிரஸ்ஸை  லூசா  போட்டுகிட்டா  மெஷினுக்கு பக்கத்தில் போக முடியலே ,டைட்டா போட்டுகிட்டா மேனேஜர்  பார்வையே சரியில்லையே !''
ஆபரண நகையினால் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக :)
         ''தலைவரே ,நானும் நகைங்களை பாங்கிலே வச்சுருக்கேன்னு  எந்த தைரியத்திலே சொல்றீங்க ?''
         ''அடமானத்திலே இருக்கா ,சேப்டி லாக்கர்லே இருக்கான்னு யாரும் கேட்க மாட்டாங்கிற தைரியத்திலேதான் !''

கந்து வட்டியால், நொந்து போய் ,லந்து பண்றாரோ :)
             ''அடகுக் கடைக்கே  வந்து ,'நீங்க எங்கே அடகு வைக்கிறீங்க 'ன்னு கேட்கிறது நியாயமா ?''
            ''நீங்க மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அநியாய வட்டி போடுறது  மட்டும் நியாயமா ?''

நாகரீகம் தெரிந்த காதலன் :)
காதலிக்கு ...
நாலு பேருக்கு நடுவில் பரிசளித்து விட்டு 
நன்றியினை மட்டும் 
நாலு சுவருக்கு நடுவில் பெற நினைப்பவன் !

26 comments:

  1. பெண்ணுக்கு உடையும் பகையாகலாம்

    மென்மைகள்
    போர்வைகளாக
    இருப்பதால் தான்
    அழிக்கப்படுகிறது கற்பு!
    வன்மைகள்
    போர்வைகளாக
    இருப்பதால் தான்
    காக்கப்படுகிறது கற்பு!

    ReplyDelete
    Replies
    1. கோர்வையாய் நீங்க சொன்னதே உண்மையா :)

      Delete
  2. தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்...!

    ஒன்றரைப் பார்வையாக்கும்... நீ ஒன்னும் தப்பா நெனச்சுக்காத கண்ணு...!

    பேங்கில வேலை பார்க்கிறவங்க... அதையும் மாத்தி கவரிங்கா வச்சுடுறாங்களாமாக்கும்... சாக்கிறதங்க...!

    நீங்க வாங்கிய கந்து வட்டிய கட்டத்தான் தின(ம்) கரன்(சி)... ரோஸ் காந்தி வர்றாராமே...! எதுக்குக் கவலைப் படுறீங்க...?!

    நாலு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல் இன்பக் காதல் அம்மம்மா என்னம்மா...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. உன்னைக் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை ,கடவுள் செய்த குற்றமடி :)

      இல்லை ,எழரைப் பார்வை :)

      எம்டனுக்கு எம்டனா இருக்காங்களோ :)

      தின(ம்) கரன்(சி)மழைக் கொட்டுதா :)

      வேடர்கள் சுற்றியிருந்தால் எப்படிய்யா வரும் காதல் :)

      Delete
  3. Replies
    1. 'அதை'யும் தானே ஜி:)

      Delete
  4. Replies
    1. ரசிக்காமல் இருக்க முடியாதே :)

      Delete
  5. அப்படீனாக்கா... "நன்றி"யை நாலுபேரை வச்சு பெறலாமா ஜி ?

    ReplyDelete
    Replies
    1. பெறக் கூடாது ,நாலு பேருக்கு நன்றி சொல்லலாம் :)

      Delete
  6. காலையிலயே கலவரமா!..
    சொல்ல வந்ததெல்லாம் மறந்து போச்சு!..

    ReplyDelete
    Replies
    1. நீங்களென்ன மந்திரியா ?ரைடு வந்துவிட்டார்கள் என்று கலவரம் அடைய :)

      Delete
  7. மீனை நிறைய சாப்பிடாதேன்னு சொன்னேன் ,அப்பவே கேட்டிருக்கணும் !''//

    மீன் நிறையச் சாப்பிட்டா இதய நோய் வராதாமே?!

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இதய நோய் வரக்கூடாதுன்னு இதயமே இல்லாமல் மீன் இனத்தையே அழிப்பது சரியா :)

      Delete
  8. உங்க பதிவுகள் பச்சை பசேல்னு இருக்குதுங்க! நான் படத்தை சொல்லவில்லை...

    இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,ஒரே நீல நிறமா இருக்குன்னு சொல்லாம போனீங்களே :)

      Delete
  9. உங்க பதிவுகள் பச்சை பசேல்னு இருக்குதுங்க! நான் படத்தை சொல்லவில்லை...

    இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பழமொழி நினைவுக்கு வருதே :)

      Delete
  10. ரசித்தோம் ஜி! அனைத்தையும்....பாவனா அழகாக இருக்கிறார்!!

    ReplyDelete
    Replies
    1. அந்த அழகுதான் அவருக்கு ஆபத்தைக் கொடுத்ததோ:)

      Delete
  11. ரசித்தேன் நன்று அனைத்தும்

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சியை அடகு எங்கே வைப்பார்கள் ,உங்களுக்குத் தெரியுமா ஜி :)

      Delete
  12. வயிற்றிலேயே நீரில் மிதந்தவந்தானே
    மேனேஜர் பார்வை மட்டுமா
    எப்படியோ நகை இருப்பதைச் சொல்லியாச்சு
    மனசாட்சியை எவ்வளவுக்கு அடமானம்வைத்தார்
    எப்படி

    ReplyDelete
    Replies
    1. அவன் மட்டுமா மிதந்து வந்தான் :)
      'மேல்' அதிகாரி என்ற மமதையில் அவர் பார்க்கிறாரே :)
      சேப்டியா இருக்குன்னு சொல்லியாச்சு :)
      ஆசைக்கு எது எல்லையோ ,அந்த அளவுக்கு :)
      நாலு சுவர்களுக்கு உள், காதலர்களுக்குள் எது நடக்கும் :)

      Delete
  13. அனைத்தும் அருமை நண்பரே
    ரசித்தேன்,சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. கோளாறு கண்ணிலா ,உடையிலா :)

      Delete