15 May 2017

மனைவியின் அர்ச்சனையால் வந்த கற்பனை :)

அய்யா  சென்னைப்பித்தன் பாணியில் ப க பு மொ:)           
               ''வாசுகியை வள்ளுவர் அதிகாரம் செய்திருந்தால் ,வாசுகி  என்ன சொல்லியிருப்பார் ?''
               '' உங்க  அதிகாரத்தை  குறளோடு வச்சுங்குங்கன்னு தான் !'' 

முட்டை வாங்க வேண்டியதே இல்லை :)                 
            ''உன் புதுப் பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலையிலே ஏண்டா அடிச்சுக்கிறே?''

            ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''

இப்படி ஆள்கிட்டே நெருங்கி பழகலாமா :)
            ''தரித்திரம் கூட தொற்று நோய் மாதிரிதானா ,ஏண்டா ?''
            ''என் தரித்திரம் எப்போ தீரும்னு கிளி ஜோசியம் பார்க்கப் போனேன் , கூண்டைத் திறந்ததும் கிளி பறந்து போயிடுச்சே !''

பழசை மறக்க நினைத்தாலும் ....:)
            ''டேய் மச்சி ,H B D ன்னு சுருக்கமா ,பேஸ் புக்கிலே பிறந்த நாள் வாழ்த்து அனுப்பாதேன்னு சொல்றீயே ,ஏன் ?''
             ''முந்தி நாம குடிச்ச 'எச்சி பீடி 'ஞாபகம் வருதே !''

மனைவியின் அர்ச்சனையால் வந்த கற்பனை :)
ஆயில் புல்லிங் செய்யும்போது   ..
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாய் மூடிக் கொண்டிருப்பதால் !

இந்த லிங்க் >>>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459902செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

40 comments:

  1. வாவ்வ்வ்வ்வ்வ்வ் மீ க்கே முதலிடம்... கில்லர்ஜி நித்திரைக்குளிசை எடுத்திட்டார்ர்ர்ர்:).. நில்லுங்க ..படிச்சிட்டு வோட்டும் போட்டிட்டு வாறேன்ன்:).

    ReplyDelete
    Replies
    1. ///செய்திருந்தால்///
      ஹா ஹா ஹா சொல்ல வந்தேன்ன் ஸ்பெல்லிங் மிசுரேக்கூ என.. அதுக்குள் திருத்திட்டீங்க:).

      கிளி ஜோசியம் உண்மைதான், பூவோடு சேர்ந்த நாரும் வாசம் வீசும் கதையேதான்:)..

      Delete
    2. அபச்சாரம் ,அபச்சாரம் என்று பூஜார் சொல்வதற்குள் தப்பித்தேன் :)

      இங்கே கதையே வேற ...நாரோட சேர்ந்தா பூவும் நாறும் :)

      Delete
    3. #ஒருநாளைக்கு 10 மணிக்கு, அடுத்த நாள் 12 மணிக்கு, திரும்ப பத்து மணிக்கு..#
      நேற்று நீங்க சொன்ன கணக்கு சரிதான் ,கில்லர்ஜி இன்னிக்கு ஆப்சென்ட் :)

      Delete
    4. ஹா ஹா ஹா ஆனா நாளைக்கு 12 க்கு.. அதனால 1ச்ட்டா வருவார் நாளைக்குப் பாருங்கோ:).... என்னமோ நடக்குதூஊ மர்மமாய் இருக்குதூஊ .... இது பிபிசி ல சிட்டுவேஷன் சோங் போகுது:).

      Delete
    5. BBC தமிழ் சேவையை நிறுத்தி விட்டார்களாமே ,சிட்டுவேஷன் சோங் மட்டும் வருதோ :)

      Delete
  2. அதானே? தோசைக் கல்லில் எப்படி ஆம்லெட் போட முடியும்..??

    ReplyDelete
    Replies
    1. முன்பே ஒரு ஆம்லேட் கல் வாங்கி வைத்திருக்கலாம் :)

      Delete
  3. ஓட்டு போட்டாச்சு ஜீ

    ReplyDelete
    Replies
    1. உங்க சமத்து எல்லோருக்கும் வராது ஜி :)

      Delete
  4. வள்ளுவர் - வாசுகி ஜோக் புன்னகைக்க வைக்கிறது.

    கிளி பறந்து போன ஜோக் பகீரென சிரிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவனார் வாசுகி போல் வாழ்ந்து என்று வாழ்த்துபவர்கள் இனி யோசிப்பார்களா :)

      கிளியின் தரித்திரம் தொலைந்தது :)

      Delete
  5. கிளி பறந்து போச்சு!:)

    வள்ளுவராக இருந்தாலும் மனைவியிடம் அதிகாரம் செல்லாது! ஹாஹா....

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு ,பறந்து போயிடுச்சோ :)

      இதைப் பற்றி வள்ளுவர் எழுதியிருக்காரான்னு தெரியலே :)

      Delete
  6. Replies
    1. வாசுகி அம்மையார் சொன்னதையும்தானே :)

      Delete
  7. அதிகாரத்தை ரசித்தேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதிக காரமாய் ஒன்றும் தோன்றவில்லைதானே:)

      Delete
  8. அதிகாரம் அங்கும் செல்லாதோ..

    ReplyDelete
    Replies
    1. டெல்லிக்கு ராஜான்னாலும் பெண்டாட்டிக்கு புருஷந்தானே:)

      Delete
  9. ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''//

    புதுப் பெண்டாட்டியைச் சமைக்க விடலாமா?!

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன செய்யணும்னு சொல்றீங்க :)

      Delete
  10. ஆம்லேட்டை தோசைக்கல்லுல ஊத்தக்கூடாதா?! அடடே இது தெரியாம போச்சே

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,மாமா தப்பித்தார் :)

      Delete
  11. ஆயில் புல்லிங்...அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவம் உங்களுக்கும் இருக்கும் போலிருக்கே :)

      Delete
  12. அதிகாரமெல்லாம் குறளோடு சரி!
    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. குறளிலே 133 அதிகாரம் ,வீட்டிலே அதிகாரம் என்றால் 144 (தடா)தான் :)

      Delete
  13. இல்லேன்னா... குரலே வெளியே வராது...!

    டூ லேட்...ஆமால்ல...!

    கிளிக்கு றெக்கை மொளச்சிடுச்சு... கூண்டை விட்டே பறந்து போயிடுச்சு... பேஸ்... பேஸ்... நல்ல காரியம் பண்ணிட்டீங்க...!

    இதுக்குத்தான் நான் யார்ட்டையும் எதுவும் சொல்றதே இல்லை....!

    சொல்லாதிங்க... வாயைத் திறந்து மூஞ்சியில...ஊத்திடப்போறாங்க...!

    த.ம. 12

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் மிரட்டலா :)

      இதெல்லாம் விசாரிச்சா தாலி கட்ட முடியும் :)

      நம்ம தரித்திரம்தான் தீராது ,கிளியாவது ...:)

      ஏன் வெளியே சொன்னா வெட்கக் கேடா :)

      பரவாயில்லை ,புல்லிங் ஆயில்தானே ,கில்லிங் ஆயில் இல்லையே :)

      Delete
  14. அனைத்து பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. தரித்திரம் கூட தொற்று நோய என்பதையும் ரசிக்க முடியுதா :)

      Delete
  15. ஜோசியம் சொல்லும் கிளிகளின் றெக்கைகள் வெட்டப்பட்டிருக்குமாமே
    பெண்களின் தொப்புளில் வயிறில் ஆம்லெட் வார்க்கிறார்களாமே
    ஆயில் புல்லிங் செய்யும் போது முகத்தை அஷ்ட கோணலாக்கினாலும்
    பகபுமொ என்றால் என்ன

    ReplyDelete
    Replies
    1. வெட்டிய ரெக்கை வளராதா என்ன :)
      சினிமாவில் அது சாத்தியம் ,நிஜத்தில் :)
      மாறி மாறி கன்னம் வீங்கினாலும் அழகுதானே :)
      பழைய கள்ளு புதிய மொந்தையில் :)

      Delete
  16. கிளி பறந்தது!

    ReplyDelete
    Replies
    1. இப்படி பறக்கும்னு ஜோசியமா பார்க்க முடியும் :)

      Delete
  17. அதிகாரம் ஹஹஹ ரசித்தோம்..

    கிளி பறந்துடுத்தெ!!! பறந்த கிளியையும் ரசித்தோம் சிவாஜி சொல்லுவது போல் நினைத்து...ஹஹஹ

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பாலூட்டி வளர்த்த கிளியே பறந்து விடும் ,இதைச் சொல்லவா வேண்டும் :)

      Delete
  18. படத்த பாரத்தாலே தெரியுதே..ஆனா யாரு மனைவின்னுதான் சொல்லல....

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் உங்களுக்கு சொல்லியாத் தெரியணும்:)

      Delete