29 May 2017

மங்கையின் இருவிழிப் பார்வை அப்படி :)

 குடிச்சா மட்டும்  ழகரம்  எப்படி சரியா வருது :)
              ''வாழைப்பழம் அழுகி, கொழகொழத்து, கீழே விழுந்தது ' ன்னு மனைவியிடம் ஏண்டா சொன்னோம்னு ஆயிடுச்சா ,ஏன் ? ''
              ''நான் குடித்து இருப்பதைக் கண்டுபிடித்து விட்டாளே !''
            
'மூஷிக வாகனன் ' கோவிச்சுக்குவாரே :)
             ''என் பைக்லே ' பிள்ளையார் துணை 'ன்னு  போட்டுக்கக் கூடாதா ,ஏன் ?''

              ''பிள்ளையாரே எலி வாகனத்தில் போகும் போது உனக்கு பைக்கா  ?''
இந்த 'கோச் 'சடையானால்  உலக கோப்பை வருமா :)
           ''உங்க கபடி 'கோச் 'சை ரஜினி ரசிகர்னு எப்படி சொல்றே ?''
            ''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''

பதிலைக் கேட்டு  ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா :)
              ''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
              ''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
              ''அதிலேயே எழுதி இருக்கும் !''

மங்கையின் இருவிழிப் பார்வை அப்படி :)
என்னவள் ...
கலங்கரை விளக்கின்  கீழே நின்று ...
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள்  வருகிறதே எப்படி வரும் என்று ?



இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461550செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

37 comments:

  1. நல்லவேளை சாக்கடையான் அப்படினு பெயர் வச்சுக்கிறலை....

    ReplyDelete
    Replies
    1. அட அப்படி வச்சுகிட்டா நாறவா போவுது :)

      Delete
  2. https://whyevolutionistrue.files.wordpress.com/2016/01/rjlfna6edvom68880o1d.jpg?w=1000

    ReplyDelete
    Replies
    1. எதிரி யாருன்னு தெரிஞ்சிக்காம குறி வைத்து என்ன ஆகப் போகிறது ,நேற்றைய என் நிலைமையைப் பார்த்தீங்களா :)

      Delete
    2. பகவான் ஜீ மேடைக்கு வாங்கோ... மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊ.. தங்கூஊ தங்கூஊஉ இருந்தாலும் நீங்க ஸ்பீட் எடுத்திடக்குடா சொல்லிட்டேன்ன்:) மேலே அந்த ஆயுதம் அது அங்கயே இருக்கட்டும்...ஹா ஹா ஹா..

      http://i.myniceprofile.com/1274/127478.gif

      Delete
    3. ///நேற்றைய என் நிலைமையைப் பார்த்தீங்களா :)//

      ஹா ஹா ஹா எப்பூடி இருந்த நீங்க இப்பூடி ஆகிட்டீங்களே?:) ஹா ஹா ஹா.. ஒரு நாளுக்கு தலைப்பாகையைக் கட்டி அஜீஸ் பண்ணிக்கோங்க:).. நான் கரீட்டாக் கொண்டு வந்து திருப்பி தந்திடுறேன்ன்:).. ஆனா டக்குப் பக்கெனப் பறிச்சிடக்குடா கர்ர்ர்ர்ர்ர்:).

      Delete
    4. நம்பி ஒப்படைச்சிட்டேன் ,சேதமில்லாம கொடுத்திடணும்:)

      Delete
    5. ஹா ஹா ஹா இப்போ கழட்ட மனமில்லாமல் கிடக்கூஊஊஊஊ( ஹையோ இது அதிராவின் மைண்ட் வொயிஸ்).. ஹா:).

      நீங்க உங்கட நட்புக்களுக்குச் சொல்லி அனுப்பியது போதாது பகவான் ஜீ கர்:) பாருங்கோ 14 ஐத்தாண்ட மாட்டுதாமே:(. ஹா ஹா ஹா ச்சும்மா சொன்னேன்ன்.. மிக்க சந்தோசம்.. நாளைக்கு மகுடம் உங்களுக்குத்தேன்ன்:).

      Delete
    6. #நீங்க உங்கட நட்புக்களுக்குச் சொல்லி அனுப்பியது போதாது பகவான் ஜீ கர்:) பாருங்கோ 14 ஐத்தாண்ட மாட்டுதாமே:(.#
      இதற்கு பதிலை பொதுவெளியில் கூற முடியவில்லை ,உங்க ரெயில்(?) அட்ரஸ் தர மாட்டேங் கிறீங்களே:)

      Delete
  3. இருவிழிப்பார்வை குறித்து
    கவித்துவமான வரிகள்
    மனம் கவர்ந்தது
    கோச் சடையானும்...
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இதுவும் இருவிழிக் கவிதைதானே :)

      Delete
  4. மாணவனின் பதிலையும் மங்கையின் விழி ஒளியையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட மாணவனும் ,மங்கையும் இருக்க சாத்தியமா ஜி :)

      Delete
  5. அருமை அய்யா
    தொடர்க

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு மாணவனை நீங்க பார்த்ததுண்டா ஜி :)

      Delete
  6. Replies
    1. குடிகாரன் பேச்சை மட்டும் ரசிக்க முடியாதே ஜி :)

      Delete
  7. ரெக்கார்ட் நோட் செம. புதுசு

    ReplyDelete
    Replies
    1. பயபிள்ள ரெக்கார்ட் பிரேக் பண்றதில் கெட்டிக்காரன் :)

      Delete
  8. //''பிள்ளையாரே எலி வாகனத்தில் போகும் போது உனக்கு பைக்கா ?''//

    ஒரு பகுத்தறிவாளனின் கேள்வி!!!

    ReplyDelete
    Replies
    1. யாராவது ஒரு ஆன்மீகவாதி பதில் சொல்வாரா :)

      Delete
    2. ஹா ஹா ஹா பிள்ளையார் இப்போ பிளேனில சுத்துவதாகக் கேய்வி:) எந்த காலத்தில இருக்கிறீங்க நீங்க?:))

      Delete
    3. பிள்ளையாரை கடத்துபவர்கள் வேண்டுமானால் பிளேனில் ஏற்றியிருப்பார்கள் :)

      Delete
  9. ஒரு பைக்கில் 6 உருப்படிகள். உருப்பட்ட மாதிரிதான்!!

    ReplyDelete
    Replies
    1. யாரு கண்டா ,அடுத்ததும் வயிற்றில் இருக்கக்கூடும்:)

      Delete
  10. வாலையின் கண்ணிலிருந்து
    காளைக்கு ஒளிவீச்சா?
    நம்ம முடியலை!

    ReplyDelete
    Replies
    1. நம்ப முடியலைன்னா, உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு அர்த்தம் :)

      Delete
  11. குடி குடியைத்தானே கெடுக்கும்... சிறப்பு ‘ழ’கரத்தைக் கெடுக்காமல் சிறப்பு செய்யுமுல்ல...!

    இவர் பேருதான் ஆறுமுகம்...!

    கபடி கோச்சடையான் கோச்சை... ‘காலா’ வாடா உன்னை காலால் மிதிக்கிறேன்’ என்கிறானாமே...!

    சார்... நோட் திஸ் பாயிண்ட்... நோட்ல பெயர் எழுத மறந்திட்டேன்...!

    கலங்கரை விளக்கு வழியைத்தானே காட்டும்... ஓ... இது என்ன விழியைக் காட்டுகிறேதே...! வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பேன் என்பது இதுதானோ...?!

    த.ம. 11







    ReplyDelete
    Replies
    1. ழ கரம் வென்ற குடிகாரர்கள் வாழ்க ,வாழ்க :)

      போலீசிடம் சிக்கினால் எந்த முகத்தோடு நிற்பாரோ :)

      விளையாட்டு வினையாகி விடும் என்று அவரிடம் சொல்லி வைங்க :)

      பிறகெப்படி அதை உன்னுடையது என்று சொல்றே :)

      காத்திருப்பின் வலி,விழியிலிருந்து ஒளியாய் பாய்கிறதோ :)

      Delete
  12. மாணவர்கள் சுட்டிதான் என்பதை நிருபிக்கும் ஜோக்

    ReplyDelete
    Replies
    1. தங்க கட்டிதான்,நீங்கதான் மெச்சிக்கணும் :)

      Delete
  13. கடல்பயணம் செய்த து இல்லை.எனவே கலங்கரைவிளக்கம ஜோக்கை ஆர்வமாக ரசித்தேன்.- இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
    Replies
    1. கவலையை விடுங்க ,நானும் மும்பை அஜந்தா பார்க்க மட்டுமே கடலில் பயணம் செய்துள்ளேன் :)

      Delete
  14. ஒளி விழி மங்கை ஆஹா.....

    ழகரம், கோச்சடையான், மூஷிக வாகனம், மயங்கி விழுந்த ஆசிரியர்... ஹஹஹ..ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. கலங்காரிகை விளக்கம் எனலாமா :)

      Delete
  15. மங்கையின் இருவிழிப் பார்வை.....அதிசியம்தான்.....

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஏழு அதிசயம் அவளிடம் இருக்கு :)

      Delete