31 May 2017

பெண்ணைப் பற்றி தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)

பாசம் பொங்கி வழிய காரணம் இதுதானா :)             
                  ''உங்க அப்பா அம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு ,உடனே பார்க்கணும் போல இருக்கு ,போகலாமா ?''
               '' காலேஜ்  ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிற என் தங்கச்சி ,லீவிலே வீட்டுக்கு வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

துவட்டிக்க துண்டு தருவதை விட்டுட்டு ... :)             
            '' மழையிலே நனைஞ்சு வந்திருக்கேன் , கையிலே எதுக்கு தாயத்து கட்டுறே ?''

            ''நீங்க நனைஞ்சது 'பேய் 'மழையிலாச்சே !''

 பீப்பீ கோஷ்டி வரலேன்னு BPஏறுதா :)              
             ''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ  கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''
             ''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ   (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''

பெண்ணைப் பற்றி  தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)
           ''பொண்ணுக்கு  காது மந்தம்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
            ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''
சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
          ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்து பார்த்தாலும் நிலா தெரியுமே ?''

வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!
உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461747செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)       

35 comments:

  1. ஹாய், ஹல்லோ, வணக்கம் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு குட் மார்னிங் ,உங்களுக்கு குட் நைட் ஆகப் போகிறது ,அப்படித்தானே ஜி :)

      Delete
    2. ஆமா ஜீ நம்ம நேரம் 8.30 இப்போ... ஆனா வெயில் சுட்டெரிக்குது :)

      Delete
    3. நான் இரவு எட்டரைன்னு நினைச்சிட்டேன் ஜி :)

      Delete
  2. தரகர் எந்தக் காலத்துல உண்மை சொல்லியிருக்கார் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தரகர் பெருமானேன்னு பாடத் தோன்றுதே ஜி :)

      Delete
  3. சீனப் பெருஞ்சுவர், தங்கச்சி ஜோக், பேய் மழை எல்லாமே செம செம :)

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை, உங்களுக்கு ,சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கத் தோன்றவில்லை :)

      Delete
  4. தத்துவமும் சூப்பர் ஜீ... இதோ ஓட்டு போடறேன். லிங் தந்ததுக்கு நன்றி ஜீ :)

    அப்புறம் டைம் கெடைச்சா நம்ம வீட்டுப் பக்கம் கொஞ்சம் வந்து போங்க ஜீ :) ( வடை பாயாசம்லாம் கெடைக்கும் :) )

    ReplyDelete
    Replies
    1. வடை பாயசம்னு சொன்ன பிறகும் வராமல் இருப்பேனா,வந்துட்டன் ஜி :)

      Delete
  5. கொழுந்தியாள் கோகிலா ஏற்கனவே அத்தானுக்கு போன் செய்தது அக்காவுக்கு தெரியாதோ ?

    ReplyDelete
    Replies
    1. அக்காவுக்கு தெரியாமல் என்றால் அது கொக்கு மாக்கு கோகிலாதான்:)

      Delete
  6. கடசித் தத்துவம் சூப்பர்ர்... எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொன்னவரின் இதயமே புற்று நோயால் பாதிக்கப் பட்டதே :)

      Delete
  7. வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால்...!
    முயற்சி வேண்டும் தான் - ஆனால்
    முயற்சியோடு பயிற்சியும் வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. முயற்சியே பயிற்சியும் ஆகிவிடும் :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு சொன்னது சரிதானே :)

      Delete
  9. Replies
    1. பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்ஸையும் தானே :)

      Delete
  10. உங்க பாசம் பிடிக்குது ஜி்...

    ReplyDelete
    Replies
    1. நான் பாசம் வைக்கத்தான் ஆள் இல்லாம போச்சே ஜி :)

      Delete
  11. இப்பத்திய பசங்க தரகருக்குலாம் வேலை வைக்க மாட்டாங்கண்ணே

    ReplyDelete
    Replies
    1. பிறகெப்படி தரகருக்கு பிழைப்பு ஓடுது :)

      Delete
  12. இன்றைக்கு கொஞ்சம் பரவாயில்லை !

    ReplyDelete
    Replies
    1. போக போகத்தான் உங்களுக்கும் பிடிக்கும் :)

      Delete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. குறுஞ் செய்தியை யாரிடமும் கூறும் செய்தியாக்கிவிட வேண்டாம் என்று கொழுந்தியாவிடம் இருந்து வந்ததே...!

    எதுக்கும் கட்டுப்பட மாட்டேன்...!

    அதுக்கு ஏன் ஒங்களுக்கு பி.பி. ஏறுது?!

    எள்ளுன்னா லொள்ளுன்னு நிப்பான்னு சொன்னமாதிரி எ காதுல விழுந்திச்சு...!

    அப்பளத்த பாத்திட்டு நிலாங்கிறியே... கண்ண மொதல்ல பாரு...!

    ‘உயர்ந்த மனிதன்’ பேரை எடுக்க வேண்டும்...!

    த.ம.12

    ReplyDelete
    Replies
    1. குறஞ் செய்தியை படித்ததில் இருந்தே மனசு குறு குறுன்னுதே:)

      கட்டுக்கு கட்டு பட்டால் அது பேயில்லை :)

      பீப்பி இல்லைன்னா தாலி கழுத்திலே ஏறாதா என்ன :)

      உங்க காதுமா :)

      இல்லை அப்பளத்தை உடைத்து பாரு :)

      அதுக்கு கருவிலே திரு இருக்கணும் :)

      Delete
  15. கல்யாணம் ஆனவங்க அத்தனைப் பேரும் உண்மை சொன்னவங்களா ? எனக்கு உண்மை தெரிஞ்சாகணுமே

    ReplyDelete
    Replies
    1. உண்மையை எதை போட்டு மறைக்க முடியும் :)

      Delete
  16. மச்சானுக்கு மச்சினி மேலே !
    தாயத்தின் மகிமையில் சளி பிடிக்கும்
    இது முன்பே வந்த பீப்பியோ

    அதுதான் உதட்டசைவுக்கு பதில் போல் செய்கிறாள்

    இங்கிருந்து நிலா தெரியும் ஆனால் சீனப் பெருஞ்சுவர் தெரியுமா
    ஊர்க்குருவி உயரத்துக்குப் போகலாமே

    ReplyDelete
    Replies
    1. ஒரு கிக்குதானா :)
      அது வேற இருக்கா :)
      நாயனச் சத்தம் கேட்ட மாதிரி இருக்கா :)
      உதட்டசைவைப் பார்த்து யூகிக்க முடியுமா :)
      நிலவின் உயரம் சென்று பார்த்தால் தெரியும் :)
      போகலாம் ,பருந்து ஆகாதே :)

      Delete
  17. அனைத்தும் வாசித்து ரசித்தேன் சகோதரா
    நன்று
    tamil manam- 14
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. காதணிகளும் நன்றுதானே :)

      Delete