23 May 2017

மச்சம் இருப்பதைச் சொன்னது ஆபத்தா போச்சே :)

இந்த கால பசங்க இப்படித்தான் :)   
          ''அலார்ம் செட் பண்ணிட்டு தூங்கிற பையனை எதுக்கு  திட்டுறீங்க? ''
          ''அட நீ வேற ,பகல் 12 மணியை செட் பண்ணிட்டு தூங்குறானே !''

மச்சம் இருப்பதைச் சொன்னது ஆபத்தா போச்சே :)
         ''வீட்டிலே திருடு போனதுக்கும் ,உங்க  மனைவியோட டைவர்ஸ் நோட்டீசுக்கும் என்ன சம்பந்தம் ?''

          ''வேலைக்காரியை சந்தேகப் பட்ட போலீஸ்கிட்டே , மறைவாக இருக்கிற  மச்ச அடையாளத்தை  சொன்னதுதான் வில்லங்கமாயிடுச்சு !''
பையன் சரியா படிக்கலைன்னா இப்படியுமா :)
            ''தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு ஒரு பேச்சுக்குக் கூட  உங்களாலே சொல்ல முடியலியா ,ஏன் ?''
           ''10ம் வகுப்பிலே மூணு வருசமா  இருக்கிற உங்க  பையனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''

காட்டின் நடுவே 'வன 'மூர்த்தி :)
          '' முதலாளி ,கார் ஸ்டேரிங் 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கச் சொல்றீங்களே ,ஏன் ?''
           ''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு இல்லே சொல்லி இருக்கணும் ?''

சுயநல வேண்டுதல் :)
என் உறவுகளுக்கும் வேண்டும் ...என் பொருளாதார வலிமை !
வேண்டிக் கொண்ட அய்யாவுக்கு பரந்த மனமில்லை ..
யாரும் கேட்டு வர மாட்டார்கள்  என்ற நல்லெண்ணம் தான் !

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460869செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

49 comments:


  1. ஹலோ கால் செண்டரில் இரவு நேரம் பணி புரிபவர் இப்படிதான் அலாரம் செய்வார் ஜி

    ReplyDelete
    Replies
    1. இன்னும் படிச்சே முடியலியே ,ராத்திரி பூரா ஸ்மார்ட் போனை மியுட்டில் போட்டு நொண்டிக் கொண்டே இருந்தால் விளங்குமா :)

      Delete
  2. Replies
    1. TM 2 ஆ ஆ ,என் இரண்டு கண்ணாலுமே நம்ப முடியலே ஜி :)

      Delete
    2. இந்த வோட்டுக்குக் காரணம் நாந்தேன்:)...(என் தொல்லைதான்:)) எனக்கு நன்றி வாணாம்... அதுக்குப் பதில் 4 வோட்டா திருப்பிப் போட்டிடுங்கோ பகவான் ஜீ( யாருடைய கையைக் காலைப் பிடிச்சாவது).

      Delete
    3. தேம்ஸ் நதியோர வோட்டுக்கு பின் ,ஹட்சன் நதியோர வோட்டு வேட்டையா,சபாஷ் !
      கவலையை விடுங்க 29ம் தேதி மகுடம் உங்களுக்கே ,நீங்க அனுப்பின பவுண்ஸ்சை வைத்து ,வைரம் பதிக்க அட்வான்ஸ் கொடுத்தாச்சு :)

      Delete
    4. இப்பவே shy shy ஆஆ வருதே.. மகுடத்தை நினைச்சே:)..
      http://3.bp.blogspot.com/_fTybFBGkvhw/TUVqQwvoQhI/AAAAAAAAAAg/lcZaMglZgxo/s1600/50008887_1255804308_koshki_Z.jpg

      Delete
    5. அதிரா நீங்க இங்கே வந்த ஒரு நிமிஷம் முன்னால்தான், நம்ம ராஜீவன் ராமலிங்கம் ஜி இங்கே வந்துட்டு போனார் ,உங்களிடம் அவருக்கு ஒரு உதவி தேவைப் படுகிறதாம் ....நமக்கு ரொம்ப வேண்டியவர் அவர் ,அவருக்கு ஹெல்ப் பண்ணுங்கோ .....அவர் கோரிக்கையை ரிட்டர்ன்னா கீழே எழுதிக் கொடுத்திருக்கார் பாருங்கோ :)

      Delete
    6. பகவான் ஜீ எனக்கு நீங்க மகுடம் வாங்கித்தராட்டிலும் பறவாயில்லை.. என்னை விடுங்கோ மீ காசிக்குப் போறேன்ன்ன்ன்.. என்னை ஆரும் தேட வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்..

      http://images.scribblelive.com/2015/8/15/15fa8741-8db5-4e33-90d2-baa1dd9c92ae_1000.jpg

      Delete
    7. #http://images.scribblelive.com/2015/8/15/15fa8741-8db5-4e33-90d2-baa1dd9c92ae_1000.jpg#
      படத்தைப் பார்த்தா காசிக்கு போற மாதிரி தெரியலே ,காசி சொம்பை தூக்கப் போற மாதிரியிருக்கே :)

      Delete
    8. ஹ்ஹ அதிரா காசிக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போறீங்க அப்புறம் எதுக்கு உங்களைத் தேடனுமாம் ஹிஹிஹீ...

      கீதா

      Delete
    9. இப்படித்தான் சொல்வாங்க ,இன்னும் கால்மணி நேரத்திலே பாருங்கோ ..மீ தான் 1ஸ்ட்டட்ட்ட்டட்ட்ட்டூஊஊஊஊ ன்னு இங்கே வருவாங்க :)

      Delete

  3. 10 ஆம் வகுப்பு மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. இந்நேரம் இவன் கல்லூரியில் சேர்ந்திருக்க வேண்டும் ,இனியாவது தூக்கம் கலையுமான்னு தெரியலே :)

      Delete
  4. மச்ச விவகாரம் பெரிய விவகாரம்
    அதைப்போய் போலீஸ் கிட்ட சொன்னா
    அவங்களும் சீரியஸா செக் பண்ண
    ஆரம்பிச்சுடுவாங்களே

    ReplyDelete
    Replies
    1. உள்ள இடத்தை விட்டு இல்லாத இடத்திலும் அவர்கள் தேடுவார்களே :)

      Delete
  5. வந்துட்டன் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. அதானே ,இன்னும் காணாமேன்னு தேடிட்டு இருந்தேன் :)

      Delete
  6. பகல் 12 மணிய செட் பண்ணினானா? என்னோட தம்பி போல இருக்கானே? :)

    ReplyDelete
    Replies
    1. உங்களை மாதிரி வேலைக்கு போக செட் பண்ணினா பரவாயில்லையே:)

      Delete
  7. மச்ச ஜோக் - ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. தெரியாத உறவை தெளிய வைத்ததா :)

      Delete
  8. தொடர்ந்து 12 மணிக்கே வந்துட்டு இருந்தேன் பாஸ். யாரோ 'கண்ணூறு' பண்ணிட்டாங்க. யாருன்னுதான் தெரியல :) :)

    ReplyDelete
    Replies
    1. இந்த கண்ணூறு எடுத்து விடணும்னா ,உடனே நம்ம அதிராவை காண்டாக்ட் பண்ணுங்க ..தேசிக்காயோ ,பேதிக்காயோ எதையோ ஒண்ணைக் கட்டி விடுவாங்க :)

      Delete
    2. நம்ம பக்கத்து நாட்டுலதானே இருக்காங்க... அட்ரெஸ் வாங்கி குடுத்தீங்கன்னா போய் பாத்துட்டு வந்துடுவேன் :)

      அப்புறம் எவ்ளோ செலவாகும்னும் கேட்டுச் சொல்லுங்க :)

      Delete
    3. அவங்க மெயில் அட்ரசே தர மாட்டேங்கிறாங்க , கர்கர் ,...வீட்டு அட்ரசா, எங்கே போறது ?
      உங்க கோரிக்கையை அவங்ககிட்டே சொல்லிட்டேன் ,டீல் பண்ணிக்குங்கோ ஜி :)

      Delete
  9. முதல் ஜோக்! சிரிப்பு வந்தது. நல்ல பையன் ஜி அவன். அலாரமாவது வைத்து விட்டுத் தூங்குகிறான். எங்கள் வீட்டில் அது கூடாக கிடையாதே! மச்சத்தால் வந்த ஆபத்து! மச்சம் இருப்பவருக்குத்தான் அதிருஷ்டம். பார்ப்பவருக்கு அல்ல!

    ReplyDelete
    Replies
    1. பகல் 12 மணிக்கு எழவுமா அலார்ம் :)
      அதிர்ஷ்டம்னு சொல்றீங்க ,இப்போ அதுதானே ஆபத்தைக் கொண்டுவருது :)

      Delete
  10. மச்சம் பல மச்சான்களை கவிழ்த்தி இருக்கு ஜி

    ReplyDelete
    Replies
    1. மாயா மச்சிந்திரா மச்சம் பார்க்க வந்தீரான்னு பாடும்போதே எனக்கு சந்தேகமா இருந்தது ஜி :)

      Delete
  11. 3 வது வோட் நான் போட்டது... கொமெண்ட் வரிசையில எண்ணி வோட் வரிசையைப் பார்த்திடாதீங்க பகவான் ஜீ:).

    மனைவியைச் சந்தேகப் பட்டிருந்தாக்கூடப் பேசாமல் இருந்திருப்பாராக்கும்:), இது வேலைக்காரப்பொண்ணைச் சந்தேகப்பட்டது பொறுக்கமுடியாமல் பொயிங்கிட்டார்ர்ர் ஹா ஹா ஹா... ஆத்திரக்காரருக்கு புத்தி மத்திமம்:) இனி வேலைக்குத் தாத்தாதான் நியமனம் ஆவார்.

    ReplyDelete
    Replies
    1. சுயநல வேண்டுதல் .... ஹா ஹா ஹா.
      எல்லோரும் நல்லா இருக்கணும் ஜாமீஈஈஈஈ.... நானும்தேன்ன்ன்ன்.....:)... பகவான் ஜீ க்கு மகுடம் கிடைக்கோணும் வைரவா... நேக்கும்தேன்ன்ன்ன்:).

      Delete
    2. #மனைவியைச் சந்தேகப் பட்டிருந்தாக்கூடப்#
      அட நீங்க வேற ,குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கிடுவீங்க போலிருக்கே :)

      Delete
    3. சரியா வேண்டிக்குங்க ,வைரம் பதித்த மகுடம் :)

      Delete
  12. விழிக்க வேண்டும் என்றால் அட் லீஸ்ட் அலார்ம் வைத்தாவது எழத் தோன்றுகிறதே
    மறைந்திருக்கும் மச்ச அடையாளதை யாராவது கேட்டார்களா நுணலும் தன் வாயால் கெடும்
    பத்தம்வகுப்பில் மூன்று ஆண்டுகள் தூக்கமா
    ஹர்ட் என்னும் வார்த்தையை காடா இருக்குது சொல்லிக் கேட்டிருக்கிறேன்
    நல்லெண்ணத்துக்கு இப்படியும் அர்த்தம் செய்யலாமா

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா ,சாப்பிடாம தூங்கி கிட்டே இருப்பான் :)

      அதே நினைப்பில் இருந்தால் வாயில் அதுதானே முதலில் வரும் :)

      இவனுக்காகத் தான் இந்த வருடம் பேட்டர்ன் மாறுதாமே:)

      அதென்னமோ தெரியலே ,சிலருக்கு 'ஹ' வாயில் நுழைவதேயில்லை:)

      சரி ,அப்படியாவது நல்லது நடக்கட்டுமே :)

      Delete
  13. ‘பகலில் ஓர் இரவு...’ திரைப்படம் பார்க்கப் போகனுமாம்...!

    ‘பாஞ்சாலி அது மச்சமா... வச்சுக்கோ...!’

    அவன் பெரிய புத்திசாலியாகனுமாம்... அதுனால பத்தாம் வகுப்பையே டிகிரி போல படிக்கிறானாம்...!

    போங்கடா நீங்களும்... ஒங்க பேச்சும்...!

    கேட்டாலும்... கொடுத்திட்டுத்தான் மறுவேலை...!

    த.ம. 11



    ReplyDelete
    Replies
    1. பகலில் ஓர் இரவு,நிலவு போய் இரவா ,உறவுன்னு சொல்லாம போனீங்களே :)

      வச்சுக்கோன்னு சொல்றீங்களே ,அதுதான் மிச்சமா :)

      இன்னும் நாலு வருஷம் கூட படிக்கட்டும் :)

      வேலையும் வேணாமா :)

      என்ன இப்படிச் சொல்றீங்க ,கொடுத்து கொடுத்து சிவந்த கரமாச்சே :)

      Delete
  14. மச்சம் இருப்பதைச் சொன்னது ஆபத்தா போச்சே :)//

    ஒரு தடவை ‘மன்னாப்பு’ வழங்கியிருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. மன்னாப்பா,ஆப்பு வச்சதே சரி :)

      Delete
  15. Replies
    1. மச்சங்களை இல்லைதானே :)

      Delete
  16. இந்த கால பசங்க இப்படித்தானே :)

    ReplyDelete
  17. மச்சம் இருப்பதை பார்த்தா ஆபத்துன்னு புரிந்து போச்சு.....

    ReplyDelete
    Replies
    1. உங்க மச்சங்களை நீங்க பார்த்துகிட்டா என்ன ஆபத்து வரப் போவுது :)

      Delete
  18. மச்சம் அங்கிருந்தோ என்னவோ சொல்வாங்க மறந்து போச்சே

    ReplyDelete
    Replies
    1. நீங்க மறந்தது கூட நல்லதா போச்சு :)

      Delete
  19. முதல் ஜோக் ஹஹஹஹ்ஹ்..

    10 ஆம் வகுப்பையும் ரசித்தோம்....மூணு வருஷமாச்சே...பாவம் பையன்...

    அனைத்தும் ரசித்தோம்...ஜி

    ReplyDelete
    Replies
    1. திட்டமிட்டு தூங்கினாலும் தப்பா :)

      சந்தேகம் தெளிய இன்னும் எத்தனை வருஷமாகுமோ :)

      Delete