24 May 2017

மனைவி காதில் எப்படித்தான் விழுமோ :)

படித்ததில் இடித்தது :)
               ''மன்னர்கள் பாரி ,பேகன் ,சிபி ஆகியோர் இன்னைக்கு இல்லாம போனது நல்லதா போச்சா ,ஏன் ?''
                '' அவங்க பண்ண காரியத்துக்கு,' மீம்ஸ்' போட்டு  கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்களே !'' 
இடித்த செய்தி .....முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி! 
                                       மயிலுக்குப் போர்வையளித்த பேகன்!
                                       தன் தொடையை அறுத்து பருந்துக்கு அளித்த சிபி!

இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :)  
       ''அந்த டாஸ்மாக் கடை ஷட்டர் பாதி  மூடிய படியே இருக்குதே ,ஏன் ?''

       ''படிப் படியா  மூடுறதா இருக்காங்களாம் !''

 மனைவி காதில் எப்படித்தான் விழுமோ :)
        ''பையன்கிட்டே ,என்னைப் பற்றி என்ன சொல்லிக் கிட்டிருந்தீங்க  ?''
        ''பாம்புக் காதுன்னா என்னான்னு  கேட்டான் ...அதான் !''
வராக் கடன்  'மல்லையா 'க்களுக்கு மட்டும்தானா :)
        ''நான்தான் இந்த பாங்க் மேனேஜர் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
         ''வராக்கடன் கணக்கில் பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''

மாமூல் படுத்தும் பாடு :)
           ''கொள்ளைக் காரங்களுக்கு  போலீஸ்னா  பயம் இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''
          '' நம்ம ஏரியாவிலே எந்தெந்த  வீடு பூட்டிக் கிடக்குன்னு  போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்களாமே !''

அதிகாலையில்  எழுந்த  சந்தேகம் :)
விடியலுக்கு வரவேற்பா ...
இரவுக்கு வழியனுப்பா ...
அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460991 செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

47 comments:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வவ் ,எனக்கு தூக்கம் தூக்கமா வருது ,யாராவது 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஊஊன்னு வரலாமில்லே :)

    ReplyDelete
  2. வந்துட்டேன் வந்துட்டேன் :) :)

    ReplyDelete
    Replies
    1. இதோ வந்து விட்டார் ,முதலில் வந்து வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்ற அவருக்கு வாழ்த்துக்கள் !

      Delete
    2. ஆஆஆ தேங்கியூ ஜீ :)

      Delete
  3. அதிகாலை கீதம் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. கில்லர் ஜீக்கு ஒரு 'ஹாய்'

      Delete
    2. அது பூபாளராகம் என்றால் வரவேற்பு என்றுதானே அர்த்தம் :)

      Delete
  4. முதலில் ஓட்டு போடுறேன். அப்புறமா படிக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. லிங்க் வசதியாக இருக்கும் ,இல்லையென்றாலும் மறந்து விடாதீங்க ஜி :)

      Delete
  5. மன்னர்கள் மீம்ஸ் - அட ஆமால்ல

    பாம்புக் காது - ஹா ஹா

    வராக்கடன் - இது புதுசால்ல இதுக்கு? :)

    மாமூல் போலீஸ் - அடப்பாவிகளா?

    அதிகாலை சந்தேகம் - ச்சோ ச்சுவீட் :)

    மொத்ததுல கலக்கிட்டீங்க ஜீ

    ReplyDelete
    Replies
    1. தெர்மகோல் திட்டத்தை போல் இவையெல்லாமே கிண்டலுக்கு உள்ளாகி இருக்கும்தானே :)

      கண்ணுக்கு தெரியாத காது ரொம்ப ஷார்ப் தானே :)

      ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு பழசு :)

      எதுவாய் இருந்தாலும் அதிகாலை ஸ்வீட் தான் :)

      Delete
  6. அப்புறம் ஜீ, ரொம்ப நாளா கேட்கணும்னு நெனைச்சேன். உங்க பேருல இருக்குற KA அப்டீனா என்ன?

    ReplyDelete
    Replies
    1. k என்பது குடும்பப் பெயரின் முதல் எழுத்து ,a என்பது தந்தைப் பெயரின் முதல் எழுத்து :)
      அடுத்து ஒரு சந்தேகம் வருதா ஜி :)

      Delete
  7. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி!
    மயிலுக்குப் போர்வையளித்த பேகன்!
    தன் தொடையை அறுத்து பருந்துக்கு அளித்த சிபி!
    இந்தக் காலத்தில்
    இப்படி எவராச்சும் உதவும் உள்ளங்கள் இருப்பின்
    கடவுளே நேரில வந்து கைகுலுக்குவாரே!

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்தில் மட்டுமல்ல ,இதுவரையிலும் இல்லையே :)

      Delete
  8. டாஸ்மாக் ஜோக் அதிகம் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அரசு இந்த மாதிரி ஏமாற்றிவிடக் கூடும் என்று தெரிந்துதான் மக்கள் அடித்து நொறுக்குகிறார்களே:)

      Delete
  9. //நம்ம ஏரியாவிலே எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்க//

    திருடப் போறவனுக்குப் பாதுகாப்புத் தராம இருந்தா போதும்!!!

    ReplyDelete
    Replies
    1. திருடிக்கொண்டு போறதுக்கு கட்டைப் போடவில்லையே :)

      Delete
  10. Replies
    1. ஷட்டர் பாதி மூடிய டாஸ்மாக் கடையை ரசிக்க முடியுதா :)

      Delete
  11. அன்றைக்கு அவுங்க கொடுத்திட்டு போயிட்டாங்க... இன்றைக்கு நாம கஷ்டப்பட வேண்டியயிருக்கு...!

    அடி மேல் அடி வைத்தால்... அடியில் மட்டும் படட்டும் என்பதற்காகவா...?!

    ‘காது கொடுத்துக் கேட்டால் குவா குவா சத்தம்’ன்னு சொன்னேன்... அது தப்பா...?!

    பேங்கில் வேலை பார்ப்பவர் எல்லாம் ‘தனக்கு மிஞ்சிதானே தானம் தர்மம்’ன்னு அதுமாதிரிதான் வாங்கிட்டு... இப்ப பாருங்க எல்லா சீட்டும் காலியா இருக்கு...!

    போலீஸ் ஸ்டேசன் எல்லாம் போலி ஸ்டேசனாத்தானே இருக்கு...!

    ‘கத்தும் குயிலோசை எந்தன் காதில்விழ வேண்டும்...!’

    த.ம. 8




    ReplyDelete
    Replies
    1. என்னதான் ராஜான்னாலும் ஒரு அளவு வேணாம் :)

      அடியில் பட்டால் கதையே முடிஞ்சி போயிடுமே :)

      நீ அண்ணன் ஆகப் போறேன்னு நேரடியா சொல்லி இருக்கலாமே :)

      தாராளமா வாங்கிக்கோ ,கமிசனை வெட்டிட்டு :)

      இன்னிக்கு நடந்த கூத்து ,ராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறேன்னு ஏமாற்றியிருக்கான் :)

      கூவும் குயிலோசை வேண்டாமா :)

      Delete
  12. Replies
    1. படிப் படியா மூடும் லட்சணம் தெரியுதா ஜி :)

      Delete
  13. Replies
    1. மீம்ஸ் என்றால் என்ன அர்த்தம்னு கேட்கும் GMB அய்யாவுக்கு நீங்கள் விளக்கம் தந்தால் சரியாகயிருக்கும் சகோ :)

      Delete
  14. பாம்புக்கு காது இல்லேன்னா சொல்லிருப்பார்...????

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னு எப்படி சொல்வார் ,பாம்பு மாதிரி மனைவியின் மகுடிச் சத்தத்துக்கு இவரே ஆடுறாரே :)

      Delete
  15. நாந்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன் லாஸ்ட்டூஊஊஊஊஊ:)... ஆனா வோட்டில் லாஸ்ட் இல்லையாக்கும்:)..

    ////**யாராவது** 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஊஊன்னு வரலாமில்லே :)///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கின நீங்க தப்பு பண்ணிட்டீங்க பகவான் ஜீ.. சரி அடிச்சுக் கேட்டாலும் அது என்ன தப்பு எனச் சொல்லவே மாய்ட்டேன்ன்ன்ன்:).

    துண்டு போட்டு இடம் புய்ப்பதெல்லாம் ஓல்ட்டூ பாஷன் ஆம்ம்.. நீங்க உங்கட உந்தக் கறுப்புக் கண்ணாடியைப் போட்டு வையுங்கோ எனக்காக.. லேட்டா வந்தாலும் முதலாவதா கொமெண்ட் போட வசதி எல்லோ எனக்கு...:)

    ஏன் பகவான் ஜீ.. எங்கின போனாலும் வி ஐ பி க்களுக்கென.. றிசேவ் பண்ணி வைச்சிருப்பினம்.. இங்க மட்டும் ஏன்ன் நீங்க அப்பூடி எனக்கொரு முதலாம் இடம்:) றிசேவ்ல வைக்கக்கூடாது?:).. ஒண்ணும் அவசரமில்லை:) உங்கட கோபம் தணிஞ்சபின்பு வந்து பதில் போட்டால்ல்ல் போதும் ஹா ஹா ஹா:).

    ReplyDelete
    Replies
    1. சூடா பாலைக் குடிக்க வெச்சுட்டேன் போலிருக்கு ,மன்னியுங்க பூஜார் ,நாக்கு வெந்திருந்தால் :)

      #யாராவது 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஊஊன்னு வரலாமில்லே :)#
      நல்லாப் பாருங்க ,உங்களுக்காகத்தான் கண்ணாடியை கழட்டி இடம் போட்டிருந்தேன் ,நீங்கதான் மிஸ்ஸிங் :)

      Delete
  16. pஅடித்ததில் இடித்தது எதுவெனப் புரியவே இல்லை.. சரி விட்டிடுவோம்ம்..

    //இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :) // மூடலாமே... எப்பூடியாவது மூடினால் போதுமே..

    //அதிகாலையில் எழுந்த சந்தேகம் :)///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப முக்கியம்.. இதுக்குத்தான் சொல்றது அதிகாலையில் எழும்பாதீங்க என.. என் பேச்சை இங்கின ஆரு கேய்க்கிறா?:)..

    ReplyDelete
    Replies
    1. ராஜாக்கள் செய்தது டூ மச் தானே ,அதுதான் இடித்தது :)

      எங்கே மூடினாங்க ,அரைகுறையா ஷட்டரை இழுத்துட்டு வியாபாரம் அமோகமா நடக்குதே :)

      தினசரி உங்க அக்கப்போரை முடிக்கவே ஒரு மணி ஆயிடுது ,அப்புறம் எங்கே விடியவும் எழும்புறது :)

      Delete
  17. டாஸ்மாக் செம அஹஹ்ஹ்ஹ..அனைத்தும் ரசித்தோம் ஜி..

    ReplyDelete
    Replies
    1. டாஸ்மாக்,நெடுஞ்சாலையில் வேண்டாம்னு நடு ஊரிலே திறப்பது நியாயமா ஜி :)

      Delete
  18. அதிகாலை ராகம் அருமை!!

    கீதா: தம சுத்துது. ஒரு வேளை தேம்ஸ் குக்குப் போய்ட்டு வரும் போல....வ்யுந்துச்சானு தெரியல ஜாமீ....ஆஹா தேம்ஸ் காத்து எனக்கும் அடிச்சுருச்சு!!!

    ReplyDelete
    Replies
    1. ராகம் அருமைதான் ,ஆனால் எழத்தான் மனச்சில்லா:)

      பூசார் புண்ணியத்தால் பலருக்கும் தேம்ஸ் காற்று அடிக்கிது இல்லையா :)

      Delete
  19. படிப்படியா மூடுறதுன்னா இதுதானா
    மனைவிமார்கள் எல்லோருக்கும்
    பாம்புக் காதுதான்
    அதனால்தான் ஆண்கள் பல சமயங்களில்
    மௌனத்தால் ஜெயிக்கிறார்கள்
    மனம் கவர்ந்த நகைச்சுவைத் துணுக்குகள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. நிலைமையைப் பார்த்தா அப்படித்தான் தோணுது :)
      மௌனம் போல் இன்னொரு துருப்புச் சீட்டு இல்லவே இல்லை :)

      Delete
  20. டாஸ்மாக்கும் வாராக் கடனும் நல்லா இருந்துச்சு. (16)

    ReplyDelete
    Replies
    1. (16) ஆஹா ,இந்த பதினாறும் நல்லாயிருக்கே, மேடம் :)

      Delete
  21. அதிகாலையில் எழுந்த சந்தேகம் ஜோக்காங்க ? கவிதை மாதிரி இருக்குதே !

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் கேட்டுக்குங்க .... கவிஞரே சொல்லிட்டார் ,இனி நானும் ஒரு கவிஞன் ,கவிஞன் :)

      Delete
  22. இந்த மீம்ஸ் என்றால் என்ன அர்த்தம்
    உடையுங்கள் முழுவதும் மூடப்படும்
    பாம்புக்கு காது உண்டா, படத்தில் இருக்கும் பட்டன் காது போலா
    வராக் கடன் என்று தெரிந்தா மல்லையாவுக்குக் கொடுத்தார்கள்
    சில இடங்களில் திருட்டில் கால்காரருக்கும் பங்கு உண்டாமே
    அதிகாலை நேரத்தில் பறவைகளின் ஓசை கேட்கிறதா

    ReplyDelete
    Replies
    1. பிரபலமான ஒரு விஷயத்தைப் படம்போட்டுக் கலாய்ப்பதே மீம்ஸ் என்படுவது :)
      இன்றைய ட்ரென்ட் இதுதான் :)
      இந்த கேள்வியை பாம்பை அறுத்து சாப்பிடும் சைனாக்காரரிடம் கேட்கணும் :)
      தள்ளுபடி ஆகும் என்றுதானே பாதி பேர் லோனே வாங்குகிறார்கள் :)
      கறுப்பாடுகள் இல்லாத இடமும் உண்டா :)
      பதிவர்களுக்கு கேட்க பெரும்பாலும் வாய்ப்பில்லை:)

      Delete
  23. அனைத்தும் சுவை தேன்!

    ReplyDelete
    Replies
    1. சுவை(த்)தேன் என்று எடுத்துக்கலாமா அய்யா:)

      Delete