30 November 2012

தின 'சிரி ' ஜோக்!!!,மனைவிக்கு தெரியாமல்

"ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது !,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
"எதை ?"
"பேங்க்பாலன்ஸ்சை தான் !அதை  மறைக்க  ஸ்லிப்பை கிழிச்சு போடறாங்களே! "

29 November 2012

'சிரி'கவிதை! அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் !


மாறும் உலகில் மாறாது இருப்பது .......
கரப்பான் பூச்சியும் ,
அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் அருவருப்பும் !

தின 'சிரி ' ஜோக்!!! தணிக்கையா ? தனி கையா ?


"வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,
தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"

"தனியா கையை நீட்டி பண்றாங்களோ என்னவோ ?"

28 November 2012

'சிரி'கவிதை! திருமண அகழி !


மதில்மேல் பூனையைவிட 
அகழியில் விழுந்த பூனை male !

தின 'சிரி 'ஜோக்!!! இதுவும் பழிக்கு பழியா ?

''usa முன்னாள் அதிபர் புஷ் 'தன் நாய்க்கு இந்தியான்னு பேர் 
வைச்சு இருந்தாராமே?

''நம்ம ஊர்லே பாதி நாய்களை ,ஜிம்மி ஜிம்மின்னு சொல்றது 
அவருக்கு தெரிஞ்சு இருக்கும்!ஜிம்மி கார்ட்டரும் usa 
முன்னாள் அதிபரோட பேர் ஆச்சே!''