15 July 2014

லிப் ஸ்டிக் பூசினால் வெற்றி வாகை நிச்சயமா ?

''அழகிப் போட்டியிலே லிப்ஸ்டிக் பூசுன அந்த பொண்ணுதான் ஜெயிக்கும்னு முன்னாடியே தீர்க்கதரிசனமா ,எப்படி தலைவரே  உங்களாலே சொல்ல முடிந்தது ?''
''வாய்'மை'யே ஜெயிக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

அத்தை வீட்டு மொய்னாலும் அத்தாச்சி வேணும் !

''அட நீங்க என்னங்க ,மொய்யை எழுதிட்டு 

அக்னாலேஜ்மென்ட் கேக்குறீங்க ?''

''நாளைக்கு  நான் மொய் வைக்கலைன்னு யாரும்  

சொல்லக்கூடாதில்லே ?''


'சிரி'கவிதை!

பின்னல் சடைப் போட்டு ,பிச்சிப்பூ ?

எந்த விசேசம் என்றாலும் ...

பியூட்டி பார்லருக்கு சென்று 

ஆயிரம் ஆயிரமாய் செலவழித்து 

அழகழகாய் வலம்வரும் பெண்களைப் பார்க்கையில் 

அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு 

வருகிறது ...

பெண் தலைவிரிக் கோலம் தரித்திரம் !


36 comments:

  1. 3 மே ஸூப்பரப்பூ....

    ReplyDelete
    Replies
    1. மே 3 ல் என்ன விசேசம் ?
      நன்றி

      Delete
  2. அபத்தமாய் பாட்டி சொல் நினைவுக்கு .......ijoda!.....all are doing thalaiviti kolam thaanea!...
    Vetha.Elanagthilakam

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,எது வசதியோ ,அப்படி இருப்பதுதான் நல்லது !

      Delete
  3. அட! லிப்ஸ்டிக் என்பதற்கு ”வாய்மை” என்பது நல்ல தமிழ்ச் சொல்லாகத் (வாய் + மை) தெரிகிறதே!

    நீங்கள் கற்பனை செய்தபடி மொய்ப் பணத்திற்கு ACKNOWLEDGEMENT கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வங்கியில் கட்டச் சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை! நடக்கட்டும்.!

    பெண்களை கிண்டலடிக்கும் ஜோக்குகளையே அதிகம் கற்பனை செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    இந்த பதிவை தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. உதட்டுச் சாயம் என்பதை விட இது பொருத்தமா இருக்கா ?

      என்ன ,வீட்டிலே ஒரு விசேசம் இல்லையென்றாலும் வசூல் பண்றதுக்காகவே வசந்த விழா என்று வைக்கிறார்களே !

      sameside கோல் போட்டால் நல்லாவா இருக்கும் ?
      இணைத்து வோட்டு போட்டதற்கு மிக்க நன்றி !

      Delete
  4. வாய்'மை'யே ஜெயிக்கும் என்பதாலா
    லிப்ஸ்டிக் பூசுன
    மொய்யை எழுதிட்டு - அது
    எனக்குப் புரியல
    பெண் தலைவிரிக் கோலம்
    தரித்திரம் தானுங்க
    சிறந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. ACKNOWLEDGEMENTஎன்பதற்கு தமிழில் ஒப்புகைச் சீட்டு என்று அர்த்தம் ,இப்ப புரியும்னு நினைக்கிறேன் !
      பின்னல் சடைப் போட்டுக்க நேரம் இல்லாமேபோச்சே !
      நன்றி

      Delete
  5. மொய்க்கு அக்னாலேஜ்மென்ட் நல்ல ஐடியாவாக இருக்கே!!!!

    இப்போதெல்லாம் தலைவிரி கோலம் தானே பெண்களுக்கு அழகு. அப்படின்னு நான் சொல்லலை.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து வர்ற விசேசத்தில் அமுல் படுத்திடுங்க!
      அப்படின்னு நீங்க சொல்லலே சரி ,நான்ர் சொல்லி இருக்கிறேனே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. இதுக்கு நான் பெருமை பட்டுக்கலாம் ,கீழே ...செல்லப்பா ஸார் வேறு நான் தமிழ் அறிஞராகி வருவதாக சொல்றாரே !
      நன்றி

      Delete
  7. ஜட்ஜியின் கன்னத்தில் வாய்“மை“ இருந்ததோன்னு நெனச்சிட்டேன்....

    ReplyDelete
    Replies
    1. அப்படி வெளிப்படையா செய்ஞ்சா ,ஜெயிச்சது செல்லாதுன்னு எல்லோரும் போர்க்கொடி தூக்கிடுவாங்களே !
      நன்றி

      Delete
  8. பாஸ் எல்லா அழகிகளும் வாய்மை பூசிதானே கலந்துகிறாங்க???
    அதுஒரு மை இது ஒரு மொய் :)) சூப்பர் பாஸ்:)
    தம 3

    ReplyDelete
    Replies
    1. ஆனால் தலைவர் கண்ணுக்கு அந்த பச்சை லிப்ஸ்டிக் தானே கண்ணுலே பட்டிருக்கு ?
      உண்மையும் பொய்யும் கலந்த மாதிரி இருக்கா ?
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    தலைவா.
    எல்லாம் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பேனா முனைப் போராளியை படித்தால் ,நீங்க என்னையே மனசில் வச்சுகிட்டு எழுதுன மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  10. தரித்திரங்கள் இன்று அதிகமாகி விட்டன...!

    ReplyDelete
    Replies
    1. உலகம் பூரா இதுதானே சரித்திரம் படைச்சுகிட்டு இருக்கு ?
      நன்றி

      Delete
  11. தம-6.. வாழ்க தலைவரின் வாய்மை.

    அக்னாலேஜ்மென்ட் காட்டினா தான் சாப்பாடு போடப்படும்னு சொல்லிட்டாங்களோ?

    ReplyDelete
    Replies
    1. அதுலே உங்களுக்கு சந்தேகமே வேண்டாம் !
      இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே ,மொய்க்கு தகுந்த மாதிரி சாதா ,ஸ்பெசல் சாப்பாடும் போட்டுடலாம் !
      நன்றி

      Delete
  12. அந்த வாய் மை தான் சில ஆண்களை அவர்கள் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடும் ...இல்லையென்றால் ஆண்கள் வாய்மை பேச முடியாமல் வாயை அடைத்து விடும்! இல்லையா ஜி?!!!!

    சிரி ஜோக்.. செம...ஹாஹஹாஹா

    ஜி! ஆண்கள் புலம்புவது கேட்கவில்லையா....இந்த பார்லர் தான் தங்கள் மாதச் சம்பளத்தின் பெரும்பகுதியை விழுங்கி விடுகிறது என்று........அதற்கு எதிர் பதில்....ஆண்கள் மட்டும் என்னவாம்? அவங்க வேற விதமா செலவு செய்யறாங்க...வெளில தெரிஞ்சும்..தெரியாமலும்...அதுக்கு என்ன சொல்லறதாம்....ஜி ,,,வம்பு ...ஜி!!!!

    த.ம. 7 என்று நினைக்கின்றோம்.....வாய் மை க்காரி தமிழ்மணத்தில் cat walk செய்து மகுடம் ஏற்று ஜோக்காளிக்கு அந்த மகுடத்தைச் சூட்டியுள்ளாரோ?!!!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த வாய்மையிலும் இவ்வளவு ஆபத்து இருக்கா ?

      பெண்கள் பார்லர்லே தங்க நிறம் வர்றதுக்கு செலவு பண்றாங்க ,ஆண்கள் பார்லே தங்க நிற திரவத்திற்கு செலவு பண்றாங்க ..அதைதானே சொல்றீங்க ?ரெண்டுமே வெட்டி செலவுதானே ?
      ஏழாவது வோட்டு வாசகர் பரிந்துரைக்கு கொண்டு வரும் ,பத்தாவது வோட்டை தாண்டி அதிக வோட்டு பெறும் பதிவே ,மகுடம் சூடும் !வாய் மைக் காரிக்கு மகுடம் கிடைக்குமா ..பார்ப்போம் !
      நன்றி

      Delete
  13. ஜி! இரண்டு நாட்களாக ஒரு சில தளங்கள், அதில் ஜோக்காளியும் உண்டு....எங்கள் கணினியில் வருவதற்கு அடம் பிடித்தன....அதனால்தான் உங்களது இதற்கு முந்தைய பதிவிற்கு பின்னூட்டம் ஓட்டு இட முடியவில்லை.......இப்போது கூட இந்த பதிவிற்கு இட்ட பின்னூட்டம் 1/2 மணி நேரம் ஆயிற்று....5 தடவை ஏற்றி அது காக்கா உஷ் என்றாகி.....பின்னர்தான் ஏறியது! ஜி! தாமதத்திற்கு மன்னிக்கவும் ஜி!

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களை கூகுளும் சோதிக்கிறது ,நானும் இவ்வளவு நேரம் வேறொரு பிரௌசரில் மறுஉரையை எழுதி கொண்டிருந்தேன் ,திருப்தியாப் படலே,உங்களுக்கு பதில் சொல்லும் இந்த நேரத்தில் கூகுள் சரியாகி விட்டது .
      உங்கள் பொறுமைக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கமும் நன்றியும் !

      Delete
  14. வர வரத் தாங்கள் ஒரு தமிழறிஞராக மாறிக்கொண்டுவருவது தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு இப்போதுதான் தெரிகிறது .நண்பர் யாழ் பாவாணன் அவர்கள் ,ஜோக்காளியை அலசி ஆராய்ந்த பதிவிலேயே என்னை அறிஞர் ஆக்கிவிட்டாரே காண்க >>>>http://yppubs.blogspot.in/
      நன்றி

      Delete
  15. முதல் ஜோக் செம ப்ளேடு! :)))

    எல்லாம் ரொம்ப கரெக்டாய் செய்யும் வழக்கம் உள்ளவர் போல! ஒருவேளை கன்சியூமர் கோர்ட்டில் வேலை பார்ப்பவரோ!

    அப்படி வேற சொல்லியிருக்காங்களா பாட்டி? :)))


    ReplyDelete
    Replies
    1. இது பழைய பிளேடு,அதான் கூர் மழுங்கி போச்சு !

      இல்லை .இவர் RTI ஆக்டை வகுத்தவர் !

      பாட்டி அன்று சொன்னது அர்த்தமுள்ளது தானா ?
      நன்றி

      Delete
  16. மொய்க்கு அக்னாலேஜ்மெண்ட்!
    நடைமுறைக்கு வரும் காலம் வெகு விரைவில்!!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் இளங்கோ ஏற்கனவே சொல்லிவிட்டார். அவரை வழிமொழிந்ததாகக் கொள்ளுங்கள்.

      Delete
    2. அன்பாக செய்ய ஆரம்பித்த மொய் ,பெரிய வம்பாக முடியும் போலிருக்கே !
      நன்றி

      Delete
    3. அவர் சொன்னதும் நீங்க வழி மொழிந்ததையும் புரிந்து கொண்டேன் ,தவிர்க்க பார்க்கிறேன் !
      நன்றி

      Delete
  17. ஜோக்ஸ் இரண்டும் ரசிக்கவைத்தன! பாட்டி மொழியை கவிதையாக்கி தந்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் பாட்டி சொல்லை தட்டாதேன்னு சொன்னா யார் கேட்கிறா ?
      நன்றி

      Delete