11 July 2014

காதலுக்கும் ,கள்ளக் காதலுக்கும் உள்ள வித்தியாசம் !

என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?
------------------------------------------------------------
இன்னைக்கி என்னோட 'ஜோக்'கான சில கமெண்ட்களை ரசிக்க முடிகிறதா என்று சொல்லுங்களேன் !

1.நம்ம மதுரைத் தமிழன் அவர்களின் வலைப் பூவில் பார்த்ததும் ,படித்ததும் ....


இதற்கு நான் போட்ட கமெண்ட்..அப்பனையும் அண்ணனையும்பற்றி  விசாரித்து  செய்தால், அது காதல் !புருசனையும் ,பிள்ளையையும் பற்றி விசாரித்து செய்தால் ,அது  கள்ளக் காதல் !இந்த தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கலே போலிருக்கே !
------------------------------------------------------------------------------------------------------------
2.நம்ம யாழ் பாவாணன் அவர்கள் 'ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்'என்ற தலைப்பில் எழுதி இருந்தார் ,எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்களுக்கு  வேண்டுகோள் விடுத்து இருந்தார் ....அதற்கு என் கமெண்ட் இதோ ....


சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர் பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் அய்யா !நீங்கள் சொல்வது சரிதான் ,இப்படி பலியாகும் முன்னர் திருத்த வேண்டாமா?
------------------------------------------------------------------------------------------------------------

3..நம்ம பதிவர் பரிதி முத்துராஜன் ஜி அருமையான தகவலை G+ ல் அனுப்பி இருந்தார்,அது .... 

இதுக்கு என் கமெண்ட் இது ...

Bagawanjee KA
12:21 PM
 
Edit
அதைப் பிடித்து என்னாயா செய்யப் போறீங்க ?
  -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  ரசித்தீர்களா ?இப்போ தட்டி விடுங்க உங்க கமெண்ட்டை !
'ஜோக்'கா கமெண்ட் போடத் தூண்டிய மதுரைத் தமிழன் ,யாழ் பாவாணன் ,பரிதி முத்து ராஜன்  ஆகியோருக்கு  நன்றி !

46 comments:

  1. மூன்றாவது ஸூப்பர் பகவான்ஜி தேவையில்லாத வேலைதான்.

    ReplyDelete
    Replies
    1. அந்த சைட்டில்,தேமுதிக தற்கொலைப் படையினர் , இது போல் பல ரசிக்கும் படியான தகவல்களை போட்டுள்ளனர் !
      நன்றி

      Delete
  2. இரண்டாம் கருத்தைப் படித்ததும்
    விழுந்து விழுந்து சிரித்தேன்
    மூன்றாம் கருத்தைப் படித்ததும்
    தள்ளாடித் தள்ளாடிச் சிரித்தேன்
    இந்த
    முதலாம் கருத்தைப் படித்ததும்
    கள்ளக் காதலோ களவில்லாக் காதலோ
    எனக்கு வரவில்லையே எனச் சிரித்தேன்
    எல்லாமே சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலைதளம்தானே இப்படி சிரிக்க வைக்க காரணம் ?

      அவர்கள் உங்களை என்ன செய்தார்கள் ,நீங்க ஏன் தள்ளாடனும்?

      காதல் வரவில்லை என்றாலும் சிரிப்பு வந்ததே ,சந்தோசம் !
      நன்றி

      Delete
  3. ஒரே ஒரு எழுத்து
    அர்த்தத்தையே அனர்த்தம் ஆக்கிவிட்டதே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. போற போக்கைப் பார்த்தால் ,நீங்கள் அனர்த்தம் என்று சொன்னதைதான் அவர்கள் பிடிப்பார்கள் போலிருக்கிறதே!
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா...

    நகைச்சுவை நன்று வாழ்த்துக்கள் ஜி..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நன்றியை என்னை சிரிக்க ,சிந்திக்க வைத்த மேற்படி பதிவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்!
      நன்றி

      Delete
  5. Replies
    1. நாலாவது வோட் என்று தவறாக பதிவு செய்ததால் டெலிட் செய்து விட்டீர்களா ?

      Delete
  6. வணக்கம்
    த.ம2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. முள்ளை முள்ளால் எடுத்தவிதம்
    பிடித்திருந்தது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஓ...இப்படியும் சொல்லலாமா ?
      நன்றி

      Delete
  8. ஹா... ஹா...

    என்னவொரு கவனிப்பு ஜி...!

    ReplyDelete
    Replies
    1. கவனிப்பு இல்லை என்றால் ஜோக்காளியால் இத்தனை நாளாய் இங்கே குப்பைக் கொட்ட முடியாதே ஜி !
      நன்றி

      Delete
  9. எனக்கு ஒரு சந்தேகம் புருஷனையும் பிள்ளைகளையும் விசாரித்து கொண்டு காதல் செய்தால் கள்ளக்காதல் என்கிறீர்களே அப்ப்டியானால் இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்/


    இங்கே அமெரிக்காவில் விவாகரத்து ஆகி குழந்தைகளோட பல பெண்கள் சிங்கிள் அம்மாவாக இருப்பதுண்டு அந்த பெண்னை விரும்பும் ஆண் அவள் முதல் புருஷனையும் அவளின் குழந்தைகளையும் விசாரித்து காதல் செய்தால் அது என்ன கள்ளக்காதலா?

    நிச்சயம் இல்லைதானே அப்ப அதுவும் நல்ல காதல்தானே?

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் அது நல்ல காதல் ,இங்கே அது கள்ளக் காதல் !
      கல்யாணம் செய்து கொண்டால் நல்ல காதல் ஆகக் கூடும் !
      நன்றி

      Delete
    2. மதுரைத் தமிழா.....பகவான் ஜி சொன்னது டைவர்ஸுக்கு முன்......நீங்க சொல்றது டைவர்சுக்குப் பின்.....நாங்க சொல்றது சரிதானே! இல்லையா?

      Delete
    3. நம்ம ஊர்லே ஒருவனுக்கு ஒருத்தி என்பதால் ,காதல் என்றாலே கல்யாணத்திற்கு முன் செய்யப் படுவது என்றுதானே அர்த்தம் ?
      உங்கள் விளக்கம் சரியானது துளசிதரன் ஜி !
      நன்றி

      Delete
  10. தமிழ்நாட்டில் தமிழை எவ்வாறு கொள்கிறார்கள் என்பதற்கு அந்த மூன்றாவது செய்தியே உதாரணம்.
    சில காலங்களுக்கு முன்பு, ஒரு ஜாதிக்காட்சி, எங்கும் தமிழ் இருக்கவேண்டும் என்று சொல்லி, பேருந்து நிலையங்களிலும் மற்ற இடங்களிலும் தப்புத்தப்பாக தமிழில் ஊர் பெயரை எழுதி தமிழை கொலை செய்தார்கள்.

    ReplyDelete
    Replies
    1. #கொள்கிறார்கள்#
      #ஜாதிக்காட்சி#
      அவர்கள்தான் தமிழைக் கொலை செய்தார்கள் என்றால் நீங்களுமா சொக்கன் ஜி ?
      நன்றி

      Delete
  11. சின்ன எழுத்துப்பிழை செய்யும் பெரிய மாற்றங்கள்.
    உங்க கமெண்ட்ஸ் பற்றிதான் எல்லோருக்குமே தெரியுமே... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த எழுத்துப் பிழையால் தலைஎழுத்தே மாறி விடும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  12. Replies
    1. மீண்டும் நன்றி

      Delete
  13. அய்யோ.....இங்க பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் நடக்குதே!.....

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,மயிர்ப் பிளக்கிற ஆராய்ச்சின்னு சொல்லாம விட்டீங்களே !
      நன்றி

      Delete
  14. ஹாஹாஹாஹாஹ....உங்க கமென்ட்ஸ்.....செய்திகளும்....எழுத்துப் பிழைனால வரக் கூடிய பிரச்சினைகள் அதிகம் தான்.....அர்த்தமே மாறுவதால்.....நம்ம தமிழ் நாட்டுல தமிழன், தமிழ் அப்படின்னு மார்தட்டி பேசுவாங்க...ஆனா தமிழ ரொம்ப கொலை பண்ணுறாங்க.....என்ன சொல்ல......நல்ல அனலைசிஸ் ஜி!!!!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி பதிவை தொடரலாம் என்கிறீர்களா ,துளசி தரன் ஜி ?
      நன்றி

      Delete
  15. அடடா! இது அலைப்பேசியில் தட்டச்சு செய்ததால் வந்த பிழையாகும். எழுத்துக்கள் சிறியதாக இருந்ததால் கவனிக்காமல் கருத்திட்டு விட்டேன் . மன்னித்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. விடுங்க ஜி ,இதுக்கு போய் மன்னிப்பு என்றெல்லாம் பெரிய வார்த்தை சொல்லிக்கிட்டு ...நான் என்ன நக்கீரனா ,சொக்கனைப் பார்த்து 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல ?
      நன்றி

      Delete
  16. அத்தனையும் அட்டகாசம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்க யோகன் ஜி ,ஊக்கம் தருகிறது உங்கள் கமெண்ட்!
      நன்றி

      Delete
  17. தேமுதிக புரட்சிப்படை ஒரு புரட்சியே செய்வாங்க போலிருக்கே! ஹாஹா செம காமெடி!

    ReplyDelete
    Replies
    1. புரட்சிப் படை என்றால் சும்மாவா ?
      நன்றி

      Delete
  18. தேமுதிக புரட்சிப்படை ஒரு புரட்சியே செய்வாங்க போலிருக்கே! ஹாஹா செம காமெடி!

    ReplyDelete
    Replies
    1. இன்னொன்றும் படித்தேன் ...மாத விலக்கு அமுலாகும் வரை அவர்கள் தலைவர் ஓயமாட்டராம்,அதுவம் செம காமெடியாய் இருந்தது !
      நன்றி

      Delete
  19. என்னய்யா இது, நீர் ஒரு vegetarian எழுத்தாளர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்; இப்போதோ non-veg சமாச்சாரமாகவே எழுத ஆரம்பித்துவிட்டீரே! நெடி தாளவில்லை போங்கள்! ...

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி என்றாலே காமெடிதானே,காம நெடியா வருகிறது ?
      சரி சரி ,மதுரைத் தமிழனின் படத்தைப் பார்த்துட்டு பயந்துட்டீங்க போலிருக்கு ,எதுக்கும் மந்திரித்த தாயத்து ஒண்ணு வாங்கி கட்டிக்குங்க (அமெரிக்காவில் கிடைக்குமா ?)
      நன்றி

      Delete
  20. அனைத்தும் நகைச்சுவை அதுதான் பகவான்ஜி!

    ReplyDelete
    Replies
    1. நீங்களாவது வந்து என்னைக் காப்பாற்றினீர்களே,நன்றி !

      Delete
  21. வணக்கம்
    அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி


    வாழ்த்துக்கள்

    பார்வையிடஇதோ முகவரி-வலைச்சரம்


    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete
  22. Replies
    1. பதிவுகளுக்கு நான் போட்ட கமெண்ட்டுக்களை தானே ?
      நன்றி

      Delete