30 July 2014

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

------------------------------------------------------------------------------------------------------------
 இவர் வேகம் யாருக்கு வரும் ?         

                    ''பரவாயில்லையே, ஒரு வார வேலையை  ஒரேநேரத்தில் செய்வீ ங்களா ,அப்படியென்ன செய்தீங்க ?''
                      
                     ''காலண்டர் தாளை  தினசரி கிழிக்கிறதுக்கு பதில் ,வாரம் ஒரு தடவைக் கிழிப்பேன் ! ''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

உபயம் எனும் பேரில் வரும் அபாயம் !

''கோவிலில் உள்ளஎல்லா உண்டியல்களுக்கும்  பூட்டு வாங்கித் தர்றேன்னு தலைவர் சொன்னாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''டூப்ளிகேட் சாவிகளை ரெடி பண்ணிக்கிட்டு கொடுத்து விடுவாறோங்கிற பயம்தான் !''



'சிரி'கவிதை! 

போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!

சொந்தக் காசிலே சூனியம் வச்சிக்கிறது ...
இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் !


23 comments:

  1. மொத்தமா கிழிச்சு வீசிட்டா ? அடுத்த வருசம் வந்து கிழிக்கலாமே...
    நம்பர் லாக் சிஸ்டத்ததை கேளுங்களேன்...
    கவிதை நம்புற மாதிரித்தான்... இ...ரு...க்...கூ......

    ReplyDelete
    Replies
    1. மொத்தமா கிழிக்கிறதுக்கு அவருக்கு சோம்பேறித் தனமாய் இருக்கும் போலிருக்கே !
      கேட்கலாம்னு போனா தலைவர் கதவைலாக் பண்ணிக்கிட்டு உள்ளே விட மறுக்கிறாரே !
      இப்போ மாதிரியாத்தான் இருக்கும் ,போக போக புரியும் !
      நன்றி

      Delete
  2. அடடா... ஒரு வாரத்து வேலைய முடிக்கிற சாமர்த்தியம் அசத்திடுச்சு போங்கோ... எந்தத் தலைவைர்யா கள்ளச்சாவி போட்டு, நம்பர் லாக்குல கஷ்டப்பட்டு திறப்பான்? அது அந்தக்காலம். இப்பல்லாம் உண்டியலையே வீட்டுக்கு தூக்கிட்டுப் போயி உடைச்சிடுவானுங்க. கிக்கிக்கி.....

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட சாம்ர்த்தியசாலிகளிடம் இருந்து ஒதுங்கிக்கிறது நல்லது !
      உண்டியலை தூக்குறதுக்கும் வாசல்கதவு சாவி தேவைப்படுமே !)))))
      நன்றி

      Delete
  3. ஹாஹாஹாஹா.......செம ஜோக்ஸ்......

    சிரி கவிதைதான் ஜி ஏன் ஜி சொந்தக் காசில சூனியம்னு.....நல்லா வாழ்ந்துட்டு போகட்டுமே...நல்ல உண்மையான காதலா இருந்தா....

    ReplyDelete
    Replies
    1. உண்மையான காதல்தான் என்றும் வாழும் என்பது தெரிததுதானே ?
      நன்றி

      Delete
  4. முதல் இரண்டு ஜோக்குகளும் நல்ல காமெடி.
    கவிதை -பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்துக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. அதானே ,திருமணம் என்றாலே இந்த விசயத்தில் ஒன்றுதானே ?
      நன்றி

      Delete
  5. அவர் சோம்பேறியா விவேகியா? :)))

    என்ன (அவ)நம்பிக்கை!

    ஹா ஹா

    தமிழ்மணம் பட்டையைக் காணோமே...


    ReplyDelete
    Replies
    1. வாரம் ஒருமுறை தேதி கிழிப்பவர் விவேகியாத்தான் இருக்கணும் !
      தமிழ்மணம் செர்வரில் இன்று காலையில் இருந்தே ஏதோ பிரச்சினை ,பிறகு சரியாகி உள்ளது ,உடான்ஸ் மாதிரி ஆகிவிடக்கூடாதுன்னு கூகுள் ஆண்டவரை வேண்டிக் கொள்வோம் !
      நன்றி

      Delete
  6. காசிலே சூனியமா
    கவிதையிலே இனிமையா
    பூட்டுத் தந்து
    உண்டியல்களுக்கு வேட்டு வைப்பாங்களா
    காலண்டர் தாளைக் கிழிக்கிறதுக்குக் கூட
    இத்தனை வேகமா
    அத்தனையும்
    நல்ல நகைச்சுவையே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவைக்கு நீங்கள் போட்ட கருத்துரையும் நல்ல சுவையே !
      நன்றி

      Delete
  7. மூன்றும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  8. போர்த்துக் கொண்டு படுத்தாலும் ....!இநத் வேகம் அவர்க்கு மட்டும்தான் வரும்.

    ReplyDelete
    Replies
    1. யார் அவர் ?எங்களுக்கும் அறிமுகப் படுத்துங்களேன் !
      நன்றி

      Delete
  9. கிழி கிழின்னு கிழிச்சுடார் போங்கோ:))))

    ReplyDelete
    Replies
    1. இதில் பெருமை வேறு பட்டுக்கிறார் !
      நன்றி

      Delete
  10. அவராவது பரவாயில்லை! சிலபேர் கிழிப்பதே இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. கிழிக்கக் கூட நேரம் இல்லாத மனிதர்களுக்கு ,குளிக்க கூட நேரமிருக்காதே ?
      நன்றி

      Delete
  11. அவர் வாரா வாராம் கிழிப்பதைவிட வருஷத்திற்கு ஒரு தடவை அப்படியே கிழித்து விடலாம்.

    தலைவர்ன்னாவே எல்லோரும் ஓடித்தான் போறீங்க!

    சூன்யத்தை வைப்பதற்கும் எடுப்பதற்கும் நிறையவே ந்ம்மூரில் ஆட்கள் இருக்கிறார்கள்.
    த.ம.8

    ReplyDelete