21 July 2014

மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல்!

---------------------------------------------------------------------------------
கடிபட விரும்பும் நல்ல உள்ளம் !

''உங்க கடையிலே  வாங்கிய செருப்பு ,புது செருப்புங்கிற திருப்தியைத் தரலே !'' 
''பழகின செருப்பு மாதிரியே இருக்கா ?''
''இல்லே ,கொஞ்சம் கூட கடிக்க மாடேங்குதே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

காதல் கடிதங்களை அக்னியிலே போட்டு எரிச்சுடணும் !

''காதலிக்கிறப்போ நான் எழுதிய கடிதங்களை ,இப்போ நம்ம பையன் படிச்சிட்டான்னு எப்படி சொல்றே ?''
''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''


'சிரி'கவிதை!

மனைவி 'மை லார்ட் 'டிற்கும் மேல்!

வாய்தா ...
கோர்ட்டில் கேட்க முடிந்த வக்கீலாலும்
வீட்டில் மனைவியிடம் கேட்க முடிவதில்லை !



25 comments:

  1. 1. கடிக்கலேன்னாலும் குத்தமா.. ஐயா!..
    2. எல்லாம் ஒரு பரந்த மனசு தான்!..
    3. கேட்டும் கொடுக்கலேன்னா - கொடுமைதான்!..

    ReplyDelete
    Replies
    1. 1.புது செறுப்பு கடிக்கும்னு சொல்றதுக்கு அர்த்தமில்லாமே போயிடக்கூடாதே !
      2.அதுக்காக பையன் லவ் லெட்டரை படிக்கிற மாதிரியா வைக்கிறது ?
      3.கேட்பதே அசிங்கமாச்சே !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா..

    நகைச்சுவையை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கடித்தால் தான் புதுச் செருப்பு
    கடிதங்களை கிண்டல் பண்றானே
    மனைவியிடம் கேட்க முடிவதில்லை
    என்றெல்லாம் அளந்தாலும்
    நகைச்சுவை நன்று!

    ReplyDelete
  4. கடிக்காத செருப்பால கடைக்காரனை அடிக்காம விட்டானே..
    மொக்கைக்கு பிறந்தவன் இப்படித்தான் இருப்பான்..
    நீதிபதி வீட்லயே நீலம்பரி ஆட்சியாயிருக்கும்போது...
    வக்கீல் வீட்ல வனஜா ஆட்சி செய்யக்கூடாதா ?

    ReplyDelete
    Replies
    1. அடிக்கலை என்றாலும் கடிக்கவாவது செய்திருக்கலாம் !
      மினி மொக்கை ?
      யார் அந்த வனஜா ,நான் பார்க்கணுமே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. காசு போட்டு வாங்கின செருப்பே கடிக்கும் போது நான் கடிக்கக் கூடாதா ?
      நன்றி

      Delete
  6. ஹாஹாஹா....கோயில்ல திருடின செருப்பா இருக்குமோ?

    சிரி ஜோக்கு அருமை......

    சிரி கவிதை...ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் இருக்கும் ,அவசரத்திலே எடுத்ததுதானே ?
      நன்றி

      Delete
  7. புதுச் செருப்பு கடிக்கணும். புதுப் பெண்டாட்டி???

    ReplyDelete
    Replies
    1. அதையும் நீங்களே சொல்லிடுங்க ,நம்பி ஜி !
      நன்றி

      Delete
  8. //''மொக்கைன்னு தெரிஞ்சும் மோசம் போயிருக்கியே அம்மான்னு கிண்டல் பண்றானே !''//

    கழுத்தில் தாலி ஏறினதும் காதல் கடிதங்களை எரிச்சிருக்க வேண்டாமா?

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. அதானே ,இப்படி பையனே சொல்லும்படியா பெத்தவங்க நடந்துக்கிறது ?
      நன்றி

      Delete
  9. மூன்றுமே .ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  10. கடிக்காத செருப்பு கலக்கல்!

    ReplyDelete
    Replies
    1. கடி வாங்குவதில் சுகம் கண்டவராய் இருப்பார் போலிருக்கே !
      நன்றி

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. சந்தேகமே இல்லை, இரண்டாவது ஜோக் தங்களின் சொந்த அனுபவம் என்று நன்றாக விளங்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. இது சொந்த அனுபவமில்லை ,உங்களைப் போன்ற ஒருவரின் நொந்த அனுபவம் !
      நன்றி

      Delete
  13. உள்ளத்தில் நல்ல உள்ளம்

    ReplyDelete
    Replies
    1. உறங்கவே உறங்காதா ?
      நன்றி

      Delete