18 July 2014

கஞ்சிக்கு வழியில்லேன்னா காஞ்சிபுரம் பட்டுசேலைக்கு ஆசைப் படக்கூடாது !

''கஞ்சி இல்லேன்னா காஞ்சிபுரம் பட்டுசேலைக்கு ஆசைப் படக்கூடாது...சரிதான் ,காட்டன் புடவைக்கு கூட ஆசைப் படக்கூடாதா,ஏன் ?''
''கஞ்சி போடாத  காட்டன் புடவையை கட்டிக்கிட்டா நல்லா இருக்காதே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

தலைக்கு வந்தது தலை சாயத்தோட போச்சு !

''அவனை தலைமுடி விசயத்திலே ராசியில்லாதவன்னு ஏன் சொல்றே ?''
''வழுக்கை விழுந்ததுன்னு விக்கு வாங்கினான் ,இப்போ விக்கும் நரைச்சுப் போச்சாம் !''


'சிரி'கவிதை!

மலிவு விலை மருந்தகம் வந்தா தேவலை !

சர்க்கரை வியாதிக்காரனுக்கு எரிச்சல் தரும் விஷயம்  ...
ரேசன் கடையில் மாதம் முழுவதும்  சீனி மட்டும் ஸ்டாக் இருப்பது !

33 comments:

  1. அப்படினா எந்தபுடவை மீதுதான் ஆசைப்படுறது ?
    சிரிப்பு அருமை பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. அந்த கவலை உங்களுக்கு வேண்டாமே ,ஆயிரம் சேலைக்கு ஆசைப் பட 'அவுக ' இருக்காங்க தானே ?
      நன்றி

      Delete
  2. 1. சுடிதார் போட்டுக்க வேண்டியது தான்!..
    2. இந்த மாதிரி ஆகும் - ந்னு யார் கண்டது?..
    3. பாவம் - ரேசன் கடைக்காரர்!..

    ReplyDelete
    Replies
    1. 1.சுடிதார் இப்போ தேசிய உடையாகிப் போச்சே !
      2.விக்குக்கு டை அடிச்சா நல்லாவா இருக்கும் ?
      3.ரேசன் கடைக்காரரை பாவம்னு சொன்ன உங்க வாயிலே சீனிதான் அள்ளிப் போடணும் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா.
    மிக மிக இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி !

      Delete
  4. துரை அய்யாவை வழிமொழிகிறேன்:)))))

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு தந்த பதிலை நானும் மொழி உடைக்கிறேன் ,,,சாரி ..வழிமொழிகிறேன் )))
      நன்றி

      Delete
  5. கஞ்சி போடாத காட்டன் புடவையா
    விக்கும் நரைச்சுப் போச்சா
    சர்க்கரை வியாதிக்காரனுக்கு
    சீனி ஸ்டாக்கா
    இப்படியெல்லாம்
    எங்க தலையை உடைக்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. பாலு மகேந்திரா படங்களில் வந்த காட்டன் தேவதைகளை நினைத்துக் கொள்ளுங்கள் ,தலை வலி குறையும் !
      நன்றி

      Delete
  6. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாதுசா தின்ன பைசாவும் கொடுத்த மாதிரி இருக்கே ,நீங்க அறிமுகமும் செய்துவிட்டு தகவலும் தருவது !
      அறிமுகம் செய்ததற்கும் நன்றி ,தகவல் தந்ததற்கும் நன்றி !

      Delete
  7. Replies
    1. தங்களின் ரசனைக்கு என் நன்றி !

      Delete
  8. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. உங்களின் மகிழ்ச்சிக்கு என் நன்றி !

      Delete
  9. கஞ்சிக்கு வழியில்லன்னா, சேலையே கட்டக்கூடாதுன்னு சொல்லுவீங்க போல, அப்புறம் நாங்க எல்லாம் சண்டைக்கு வந்துடுவோம்...

    விக்கும் நரைச்சுப்போச்சா, அப்ப அதுக்கும் டை அடிக்க வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. சண்டையே எங்கே வச்சுக்குவோம் பாஸ் ?

      இந்த காரியம் பண்ற முதல் ஆள் என்று கின்னஸில் இடம் பெறலாமே ?
      நன்றி

      Delete
  10. எந்த ஆசையும் வேண்டாம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. சொன்னா யார் கேக்கிறா,அதுஅது பட்டுத்தான் தெளியட்டுமே ஜி !
      நன்றி

      Delete
  11. கஞ்சிக்கு வழியில்லாத போது காட்டன் சேலை - :))))) ஜீன்ஸுக்கு மாறிட வேண்டியது தான்!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜீன்சுக்கு மாறுவதே சரி ,கஞ்சியே வேண்டாம் ,சொல்லப்போனால் துவைக்கவே வேண்டாமே !
      நன்றி

      Delete
  12. கஞ்சி ஜோக் செம கலக்கல்! சர்க்கரை வியாதிக்காரனுக்கு நியாயமான கவலைதான்!

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் எரிச்சல் பட்டால் சர்க்கரை இவருக்கும் குறையாது ,கடையிலும் இருப்பு குறையாது !
      நன்றி

      Delete
  13. உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி ரூபன் ஜி !

    ReplyDelete
  14. காஞ்சிப்பட்டு, ஆரணிப்பட்டு, சாமுத்திரகாப்பட்டு, எல்லாம் அவள் கண்ணில் பட்டு , கஷ்டப்பட்டு துன்பப்பட்டு துயரப்பட்டு வாங்க வேண்டியதா போகப்போகுது?

    ReplyDelete
    Replies
    1. பட்டில் இத்தனை பட்டா ,பிட்டு பிட்டு வைச்சுடீட்ங்களே!
      நன்றி

      Delete
  15. கஞ்சிக்கே வழி இல்லாத போது...சேலைக்கு கஞ்சியா....

    சர்க்கரை வியாதிக்காரார் பாவம் ங்க

    ReplyDelete
    Replies
    1. கஞ்சி போடா காட்டன் காணச் சகிக்காதே?
      நன்றி

      Delete
  16. கஞ்சிக்கு வழி இல்லைன்னாலும் கொஞ்சி கேட்டா காஞ்சீபுரம் பட்டுச் சேலை என்ன, கான்சீபுரத்தையே வாங்கிக் கொடுத்துடலாம்! ஹிஹிஹி!

    விக்கி விக்கி அழுதுட்டானாமா? ஹிஹிஹி..

    வெளிமார்க்கெட்ல விக்கறவனுக்கும் எரிச்சல்தான்!

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு மிகப் பக்கத்தில் வந்து விட்டதே ,அந்த காஞ்சிபுரத்தையா ?

      விக்கி விக்கி அழுதாலும் அதைதானே தலையிலே போட்டுக்கணும் ?

      அவனுக்குப் போகத்தான் இங்கே ஸ்டாக் இருக்கு ?
      நன்றி

      Delete
  17. எதிர் காலத்தில் சேலைக்கே இடமில்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,சேலைவாரம் கொண்டாடும் நாள் வெகு தொலை தூரத்தில் இல்லையென்றே படுகிறது !
      நன்றி

      Delete