13 March 2017

என்று தீரும் இந்த சேலை மோகம் :)

இதுதான் உண்மையான காரணமா :)
                ''இளம்மனைவிக்கு முதல் பரிசா  பெரும்பாலான கணவன்கள்  மோதிரம்தான்  போட்டு விடுறாங்க ,ஏன் ?''
                ''குட்டுபட்டாலும் மோதிரக் கையால் படலாம்னுதான் !''

என்று தீரும் இந்த சேலை மோகம் :)
          ''என்னங்க ,ஆன் லைன்லே  நான் ஆர்டர் செய்த சேலை வந்திருக்கு ,அதை ஏன் இவ்வளவு ஆச்சரியமாப் பார்க்கிறீங்க ?''

           ''ஏழு கடை ஏறி இறங்கி ,நூறு சேலைத் தடவி ,கசக்கி ,விரலாலே கீறிப் பார்த்து வாங்கிறது தானே உன் வழக்கம் ?நீ எப்படி ஆர்டர்  பண்ணினே ?''
மருமகன் அப்பாவின்னா இப்படியும் ஏமாற்றலாமா :)                   
           ''ஏம்மா ,மாப்பிள்ளைக்கு  நான் போட்டது பித்தளை மோதிரம்னு  ,இன்னுமா  அவர் கண்டு பிடிக்கலே ?''
            '' அவர்தான்  உலோகம் தெரியாத ஆளாயிருக்காரே !''

ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா :)
               ''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டா  பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குமாம் ...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
               ''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ  நினைக்கிறதையே  கண்டுபிடிக்க  முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது  ?''

நடிகர்கள் சொல்வதும் 'டூப்பு 'தானா :)
              ''அந்த நடிகர், அடுத்த படத்தில் நடிப்பதற்கு  உயிரோட இருப்பாரான்னு தெரியலியா ,ஏன் ?''
              ''இப்ப நடிக்கிற படத்திலேயே 'உயிரைக் கொடுத்து ' நடிச்சுகிட்டு இருக்காராமே !''

யாருக்கு பதவி கிடைக்கும் :)
'லக்கும் 'இருந்து  ...
பல்லக்கும்  தூக்கத் தெரிஞ்சா போதும் ..
பதவி கிடைத்து விடும் அரசியலில் !

35 comments:

  1. சொந்த செலவில் சூனியம்!

    ஒரு வாரமா அல்லது மாசமா கணினியில் அலசியிருப்பாங்க!


    உலோகம் தெரியாத ஆள்! :)))

    பூனைக்கு நினைக்கும் சக்தி உண்டா?


    ஹா.... ஹா.... ஹா...

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. இது தவிர்க்க முடியாத சூனியமாச்சே:)

      இருந்தாலும் நகத்தினால் கீறிப் பார்த்த அனுபவம் கிடைத்திருக்காதே :)

      இப்பவும் அப்படி இருக்காங்களா :)

      பூனையிடம்தான் கேட்கணும் :)

      ஒரு பேச்சுக்குக் கூட அப்படி சொல்லக்கூடாது தானே :)

      இன்றைக்கும் பொருந்தும்தானே :)

      Delete
  2. லக் பல்லக் வாவ்
    நகைப்பணி தொடர்க
    தம

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் பல்லாக்கில் ஏற நினைத்தால் தூக்குவது யாரோ :)

      Delete
  3. சீக்கிரம் மோதுவோம்ன்னு சொல்லாமல் சொல்வதோ...?!

    இப்பல்லாம் ஆன் லைன்லே பர்ச்சேஸ் பண்ணறதுதான் பேசனாம்... பக்கத்து வீட்டு பார்வதி சொன்னாள்...!

    அவரோட மனைவின்னு ரெண்டு பேரு வீட்டுக்கு வெளியே நிக்கிறாங்க...!

    பூனை... குட்டி... வேற வெளியே வந்துடுச்சா...?!

    அந்தப் படத்தைப் பார்த்து நாம உயிரோடு இருப்போமா...? திகில் படமாம்... உயிரோடு விளையாடு...!

    ஒருத்தரோட சாவிலதான் இன்னொருத்தருக்கு வாழ்வு கிடைக்குதாம்...! ஒருத்தர் உள்ளே போனாத்தானே ஒருத்தர் வெளியே தலைகாட்ட முடியும்...! டி...டி.வி. பார்க்க முடியும்...! என்ன இதைப் பாத்தே தினருறீங்க...! இன்னும் எவ்வளவோ இருக்கு...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. பெரிய தர்ம யுத்தமோ:)

      பேஷனுக்கு தண்டம் அழணுமா:)

      அவரா ,இரண்டு பேருக்கு மோதிரம் போட்டிருக்கிறார் :)

      குட்டி வந்தாலும் புத்தி எப்படின்னு தெரியலையே :)

      தூக்கு கயிறோடு அவர் விளையாடியிருப்பாரோ :)

      நல்ல வாழ்வுதான் ,சிறையிலாவது முதல் வகுப்பு கிடைக்குமா :)

      Delete
  4. ரசித்தேன் ஜி...

    இன்றைய எனது பதிவில் ஸ்ரீராம் அவர்களுக்கு சொன்ன மறுமொழி உங்களுக்கும் தான் ஜி...

    நீங்கள் அது போல் செய்தால் இந்நேரம் உங்களின் பக்கப்பார்வை இரண்டு மடங்காகி இருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இதற்கு முன் சொன்ன பதிவில் "முப்பெரும் சாதனை" எல்லாம் முப்பெரும் வேதனை" என்று எப்போது தான் நீங்கள் புரிந்து கொள்ளப் போகிறீர்களா ஜி...?

      Delete
    2. நேற்றைய பதிவில் இருந்தே உங்கள் ஆலோசனைப் படி செய்து விட்டேன் ,இரண்டு மடங்கு ஆகுமான்னு அறிய காத்திருக்கிறேன் ஜி :)

      Delete
    3. இரண்டாயிரம் பதிவுகளுக்கு மேலும் தினசரி தொடர்ந்து போடுவது சாதனை இல்லையா ஜி ?
      ஐந்தாண்டுகளில் 666666 பக்கப் பார்வைகளைப் பெற்றது சாதனை இல்லையா ?
      இதற்கு உறுதுணையாய் இருப்பது தமிழ்மணம் திரட்டி தானே ?
      கைவிடப்பட்ட நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ் மணத்தால் வருவதல்ல சாதனை என்று சொல்ல வருகிறீர்களா ஜி :)

      Delete
  5. நெக்'லஸ் போட்டால் கழுத்தை நெறிப்பார்களோ ?

    ReplyDelete
    Replies
    1. ஒட்டியாணம் போட்டுப் பாருங்கள் ,ஒட்டி உறவாடலாம் :)

      Delete
  6. Replies
    1. சேலைக் கலர் சூபர்தானே ஜி :)

      Delete
  7. Replies
    1. பதவியை தேடிப் போவதும் அருமைதானா :)

      Delete
  8. ர்சித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நடிகரின் கட் அவுட்டுக்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ரசிகன் பாலாபிஷேகம் செய்வதை ரசிக்க முடியுதா ஜி :)

      Delete
  9. Replies
    1. அருமை ,ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா பாடலும்தானே :)

      Delete
  10. சூப்பர் ஜி இரசித்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மோதிர பலன் தெரிந்ததா :)

      Delete
  11. அனைத்தும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மோதிரமுமா :)

      Delete
  12. எந்த மோதிரம் தங்கமா வைரமா கல் வைத்ததா வேறா எதால் குட்டுப்பட்டால் வலிக்காது
    ஆன் லைனில் வாங்குவதே பெருமை. எது வந்தாலும் அவர்கள் லக்
    உலோகம் தெரிந்தவர் போட்ட மோதிரமா முதல் ஜோக்கில்
    நீ நினைப்பதே தெரியாமல் முழிக்கிறேன் பிறகல்லவா பூனை நினைப்பது பற்றிச் சொல்ல
    அது போகட்டும் ப்ளாகில் முதல் இடம் வருவது லக்கா
    உயிரைக் கொடுத்து விட்டால் சம்பளம் வாங்குவது எப்படி

    ReplyDelete
    Replies
    1. பித்தளை மாற்று தங்க மோதிரம் என்றால் வலிக்காது :)
      இப்படியொரு வரட்டுக் கௌரவமா :)
      உரசிப் பார்த்தால் இந்த மோதிரத்தில் ஒன்றும் தீராதோ :)
      பூனைக்கு எப்படி எலி சிக்கும் என்ற நினைப்புத்தானே இருக்கும் :)
      உழைப்பு இருந்தால் லக்கும் வரும் :)
      அதைதான் முதலில் வாங்கிகிட்டாரே:)

      Delete
  13. //இளம் மனைவிக்கு முதல் பரிசா.....//

    அண்மையில் என் கிழட்டு மனைவிக்கு நான் மோதிரம் பரிசளித்தேன்ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. இப்போதான் உங்களுக்கு வாலிபம் திரும்பி இருக்கு ஜி :)

      Delete
  14. ஆதி வாசிகளாக மாறாத வரைக்கம் இந்த சேலை மோகம் தீராது என்றே தோன்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. இள வயதில் சுடிதார் மோகம் ,பிறகு காலம் முழுதும் சேலை மோகம் தானே :)

      Delete
  15. படத்தைப் பார்த்தாலே சேலை வாங்கத் தோன்றுமோ :)

    ReplyDelete
  16. 'லக்கும்', 'பல்லக்கும்'
    அரசியலில்
    இரண்டு கண்களோ?

    ReplyDelete
    Replies
    1. அந்த குருட்டுக் கண்கள் அவர்களுக்கே சொந்தம் :)

      Delete
  17. aaha!...'குட்டுபட்டாலும் மோதிரக் கையால் படலாம்னுதான் !''
    ---நீ எப்படி ஆர்டர் பண்ணினே ?''sarry...
    __ உலோகம் தெரியாத ஆளாயிருக்காரே !''.....
    ரசித்தேன் சகோதரா...
    தமிழ் மணம் 13
    https://kovaikkavi.wordpress.com/


    ReplyDelete
    Replies
    1. மூன்றுநாள் தாமதம் என்றாலும் த ம பதிமூன்றுக்கு நன்றி :)

      Delete