28 March 2017

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா :)

கட்சிக்கு வேற சின்னமா கிடைக்கலே :)         
           ''விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி சின்னத்தால்  புகழ் பெறப் போகிறதா ,அவங்க  சின்னம்தான் என்ன ?''
           ''செருப்புதான் !''

வாஸ்து மீன் ' சாணக்கியா 'இன்னும் உயிரோட இருக்கா :)
                 ''கையிலே வேற ரிவால்வரோட , தொட்டியில் நீந்துற மீன்களை எல்லாம் உற்று உற்றுப் பார்க்கிறீங்களே ,ஏன் ?''
                 '' கிரிக்கெட் மேட்ச்சிலே இந்தியா ஜெயிக்கும்னு சொன்ன சாணக்கியா மீனைக் காட்டுங்க,சுட்டுத் தள்ளணும்!''

வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியுமா  :)
              ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
             ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

இது என்ன 36 ''24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு :)
                ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
                ''டியூப் லைட்டை இன்ச் டேப்பிலே அளந்துதான் வாங்குவான்னா நீங்களே பார்த்துக்குங்க !''  

காங்கிரஸ் கட்சி நினைவுக்கு வந்தால் 'ஜோக்காளி'பொறுப்பல்ல   : )
         சொற்கள் -பெண்பால் 
         செயல்கள் -ஆண்பால் ...
         இது இன்றைய இந்திய அரசியலுக்கும் பொருத்தமே ...
         காரணம் ,இது ஒரு இத்தாலியப் பழமொழி !

20 comments:

  1. இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் பண்டைகாலம் தொட்டே பந்தம் இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. அதைதான் ராஜீவ் காந்தி புதுப்பித்து விட்டாரோ :)

      Delete
  2. நல்ல சின்னம்.

    அது சாணக்யா மீன் ஆச்சே.. உங்கள் கண்ணில் படுமா!

    அதானே?

    அதுசரி!

    ம்ம்..

    ReplyDelete
    Replies
    1. இதையும் இரட்டைச் செருப்புன்னு சொல்லாம போனால் சரிதான் :)

      பெயர் வைத்தவனைப் போட்டுத் தள்ளிடலாமா :)

      வளைக்காப்பா வைக்கமுடியும் :)

      டேப் தேவையில்லைதானே :)

      இதையும் கின்னஸில் பதியச் சொல்லலாமா :)

      Delete
  3. செருப்பு சின்னம்.... :)

    அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் கமிஷன் எப்படி இதை அனுமதித்ததோ தெரியவில்லை :)

      Delete
  4. ‘ஒங்களுக்காக செருப்பா உழைக்கத் தயார்’ன்னுதானே சொன்னேன்... எதுக்காக செருப்ப கழட்டுறீங்க...?!
    ‘ஏன்டா... ஒங்களுக்கு அறிவே கிடையாதா...? நான் என்னக்கிடா பேசுனேன்...?!

    எனக்குக் கல்யாணத்தில எல்லாம் நம்பிக்கை இல்ல...! கொழந்தைன்னா எனக்கு கொள்ளப் பிரியம்...!

    டியூப் லைட்டோ... எதா இருந்தாலும்... ஆத்தில போட்டா அளந்துதானே போடனும்...!

    சொற்கள்-பெண்பால் ; செயல்கள்-ஆண்பால்...
    இத் தாலிப் பொண்ணு தாங்கோ... தமிழிசைப்பாடலைக் கேளுங்கோ... கேட்டுக்கிட்டே இருங்கோ...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. கடிக்கத்தானே தெரியும் ,பேசத் தெரியாதே செருப்புக்கு :)

      ஆறறிவு செய்யக் கூடிய காரியமா இது :)

      தத்து எடுத்துக்களாமே ,தப்பு பண்ணலாமா :)

      அளக்காம போட்டா ஆறு வேண்டாம்னா சொல்லப் போவுது :)

      தமிழிசை எப்படி கஜல் பாட்டோடு ஒத்துப் போகும் :)

      Delete
  5. செருப்புதாங்க உயர்ந்தது, இராமனின் செருப்புதான பரதத்தை ஆண்டது

    ReplyDelete
    Replies
    1. இந்த மக்களை ஆள இது போதும்னே இராமர் முடிவு செய்தது சரிதான் :)

      Delete
  6. Replies
    1. இன்ச் டேப்பையுமா :)

      Delete
  7. வணக்கம்
    ரசித்தேன்
    ஏழு ..தம

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலப் படம் என்றால் உங்களுக்கு பிடிக்கும் ,நான் போட்டிருக்கும் ஆங்கிலப் படம் எப்படி :)

      Delete
  8. வாஸ்து மீனும், ட்யூப்லைட்டும் கலலலல்..

    அனைத்தும் ரசித்தோம்..ஜி

    ReplyDelete
    Replies
    1. பைத்தியக்காரர்கள் காரியங்கள் யாவும் கலக்கலாய் தானே இருக்கு :)

      Delete
  9. அதெப்படி வயசுக் கோளாறுக்கு சந்தோசப் பட முடியும்.....??????????

    ReplyDelete
    Replies
    1. வயசோ மூவாறு ,வேணாம் தகராறு என்று பாட வேண்டியதுதான் :)

      Delete
  10. செருப்பினால் அல்ல அதனால் வாங்குமடியால் என்று தோன்று கிறது
    இந்தியா ஜெயித்ததில் கோபமா
    கர்ப்பம் தரிக்க கல்யாணம்தேவையா கோளாறு ஏதும் இல்லையே
    36” 24” 38” இதை அளக்க இன்ச் டேப் எதற்கு
    இத்தாலிய ப்ழமொழியா கில்லர்ஜியிடம் கேட்கவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வோட்டுக்கு காசு தரலைன்னு அடிக்கவும் கூடும் :)
      இது மீன் சொல்லியா தெரிஞ்சிக்கணும் :)

      தாலி இல்லாததே கோளாறு தானே :)

      கண்ணே போதுமா :)

      அதுவும் அவருக்குத் தெரியுமா :)

      Delete