23 March 2017

குடும்ப 'குத்து விளக்கு ' இப்படி படுத்தலாமா :)

படித்ததில் இடித்தது :)
             ''தனுஷ் வழக்கு ,கிருஷ்ணமூர்த்தி வழக்குன்னு சொல்றாங்களே ,என்ன பிரச்சினை ?''
                ''உயிரோடு இருக்கிற  கதிரேசன் மீனாட்சியை   தன் அப்பா அம்மா இல்லைன்னு சொல்றார் தனுஷ் ....செத்துப் போன சோபன்பாபு ஜெயலலிதாவை  தன் அப்பா அம்மான்னு சொல்றார் கிருஷ்ணமூர்த்தி !''
           இடித்த செய்திகள்  ...'காணாமல் எங்கள் மகன்தான் தனுஷ்' என்கிறார்கள் கதிரேசன் மீனாட்சி தம்பதியர் !
           சோபன்பாபு ஜெயலலிதாதான் என் பெற்றோர்  என்கிறார்     ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி !            

இப்படியா பயந்து சாவது :)
             ''பக்கத்து நாட்டு அரசன் சேனையுடன் வருகிறானா ?என்ன செய்வதென்றே புரியவில்லையே ?''
              ''பதறாதீர்கள் மன்னா ,உங்கள் நட்புறவை நாடி ...உங்களுக்கு விருப்பமான சேனையுடன் வருகிறார் என்பதை சொல்ல வந்தேன் ,அதற்குள் ...!''

குடும்ப 'குத்து விளக்கு 'இப்படி படுத்தலாமா :)
            '' உன் பெண்டாட்டியை , குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது தப்பா போச்சா .ஏண்டா ?''
            ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்திப் படுத்த முடியாது போலிருக்கே !''

தலைநகரிலுமா அந்தரங்க லீலைகள் :)
          ''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
           ''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''

ஆபீஸில் 'நீளும் 'கை ,வீட்டில் ...:)
          ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
           ''கை நீட்டுற வேலை எல்லாம்  ஆபீஸோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்:)
வர வேண்டிய பருவத்தில் 
வரவில்லை என்றால் ...கஷ்டம் !
வருவதும் மணநேரம் வரும் முன்பே 
வராவிட்டாலும் ...கஷ்டம் !
வந்துக் கொண்டே இருந்தாலும் 
தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
வருவது நிற்கவில்லையே என்று 
பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம் அல்லவா அது  ! 

25 comments:


  1. எப்படியெல்லாம் விளம்பரம் / ஆதாயம் தேட முயல்கிறார்கள்!

    பக்கத்து நாட்டு மன்னன் சேனையுடன் வந்தால் வாங்கி கறி செய்துவிட வேண்டியதுதானே? பாவம் அவர் அரண்மனையில் அதைச் சமைக்க ஆலிலை போல!

    பேச்சுலேயே குத்துகிறாளோ!

    வயலண்ட்டான ஆள் போல!

    ஆபீஸ்ல காய் நீட்டின கைல வைப்பாங்க... வீட்டுல கைநீட்டினா முதுகுல 'வை(ஃ)ப்'பாங்க..

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. * //ஆபீஸ்ல காய் நீட்டின//

      ஆபீஸ்ல கைநீட்டினா

      Delete
    2. இவர்களை நம்பவும் முடியவில்லை ,நம்பாமலும் இருக்க முடியவில்லை :)

      சேனையை விரும்பாதவரும் உண்டோ :)

      பேசாமலும் குத்துவதாக கேள்வி :)

      இல்லைன்னா தலைவராக இருப்பாரா :)

      ஃவைப் வைப்பதே சரி :)

      Delete
  2. ‘தந்தை முகம் தாயின் முகம் கண்டறியோமே
    மனம் தாழ்த்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
    எங்களுக்கோர் அன்பு செய்ய யாருமில்லையே
    அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...’ யாருன்னுதான் தெரியலை....!

    அதானே... கிண்டி கிழங்கெடுத்திட மாட்டேன்...!

    இந்தக் குத்து குத்துறாளே...!

    ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?’ வெல்ல விட மாட்டீங்களே...!

    அதானே... வீட்டுல மனைவிதானே கைநீட்டுவாள்...!

    ‘காலங்களில் அவள் வசந்தம்...!’ அட கஷ்ட காலமே...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. அவரவருக்கே வெளிச்சம் :)

      அதான் பழக்கமான கலையாச்சே :)

      ஆனாலும் ஓடிப் போகத் தோணலையே:)

      லீலையை வீட்டோட வச்சுக்க முடியாதோ :)

      தாலி பாக்கியமாச்சே அது :)

      அந்த கஷ்டத்தை அனுபவித்தால் இப்படி பாட வருமா :)

      Delete
  3. கிருஷ்ணமூர்த்தி பெற்றோர்களை மறக்காத உள்ளம் படைத்தவர் ஜி

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு இத்தனை வருடம் காத்திருக்கணுமா :)

      Delete
  4. ரசித்தேன். பல விதங்களில் விளம்பரம் தேடுபவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. விளம்பரம் உண்மையும் ஆகும் போலிருக்கே :)

      Delete
  5. தாய் தந்தையர் பற்றிய செய்திகளை நீதிபதிகள் மூலமும் மருத்துவர் மூலமும் அறிய வேண்டி உள்ளது தாய் என்பவள் நிஜம் தந்தை என்பவர் அறிமுகச் செய்தி.....!

    ReplyDelete
    Replies
    1. பிள்ளைக்கே அப்பன் யார்என்று தாய்க்குத்தான் தெரியும் என்பதால் தானே இப்படிச் சொல்கிறீர்கள் :)

      Delete
  6. நாட்டில் பல சேனைகள் இருக்கின்றன சிவசேனா ராமர் சேனா வாயு சேனா இத்தியாதி இத்தியாதி உண்ணும் சேனையும் உண்டு
    அந்தக் குத்து விளக்கை தேய்த்து கழுவினால் அலாவுதீன் விளக்காகிறதோ
    கஷ்டகாலங்கள்தான் பெண்ணுக்கு இது தெரியாமல் பேசாமல் பெண்ணாய்ப் பிறந்திருக்கலாம் என்று எழுதி இருந்தேனா

    ReplyDelete
    Replies
    1. சேனா என்றாலே வேணா என்றுதான் தோன்றுகிறது :)
      எல்லோருக்கும் அந்த அதிசயம் நடப்பதில்லையே :)
      அதுக்கு மாதவம் செய்து இருக்கணும் என்று பாரதி சொல்லியிருக்காரே :)

      Delete
  7. Replies
    1. வேதனையை சீதனம் என்று சொல்லி இருப்பதையுமா :)

      Delete
  8. நகைப்பணி தொடர்க
    ட்ராபிக் எப்படி இதில் ஆஜர் ஆனார் என்பதுதான் புரியல
    தமிழ் மணம்

    ReplyDelete
    Replies
    1. அவரே சொல்லியிருக்காரே ,உதவி கேட்டார்கள் செய்கிறேன் என்று :)

      Delete
  9. // ''அலாவுதீனின் அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்திப் படுத்த முடியாது போலிருக்கே !''//

    மனைவி அமைவதெல்லாம் சாத்தான் கொடுக்கும் வரமோ!!!

    ReplyDelete
    Replies
    1. இல்லை ,இறைவன் கெடுத்த வரம் :)

      Delete
  10. ஆட்டகை;கடிச்சு மாட்டைக் கடிச்சு இறைவன் கொடுத்து வரத்தையும் கடிச்சுட்டீங்களே சார்...
    தமிழ் மணம் - 10
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. அடியைத் தாங்குகிறவன் கடியைத் தாங்கிக்கக் கூடாதா :)

      Delete
  11. தாய் பொய் சொல்ல மாட்டாள்... இதில் மர்மம் ஏதோ இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அதுவும் இந்த விஷயத்தில்:)

      Delete
  12. "பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்" என
    தாங்கள் வடித்த பாவரிகள் அருமை!

    வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete
    Replies
    1. பாவரிகளா இவை ,கவிஞர்கள் படித்தால் நொந்து விடப் போகிறார்கள் :)

      Delete