8 March 2017

தள்ள வேண்டியதை தள்ளினா....:)

 இரண்டும் அருகில் இருக்கலாமா :)
             ''எதுக்கு ' சுகம்  கிளினிக்  போகும் வழி'ன்னு வச்சிருக்கிற போர்டை எடுக்கச் சொல்றீங்க ?''
              '' அதுக்கு பக்கத்திலே 'சுடுகாட்டுக்கு செல்லும் வழி'ன்னு  போர்டு இருக்கே !''

இந்த கட்சி கரையேறுமா :)          
         ''அந்த புதுக் கட்சியில் நிறைய பேர் சேர, என்ன காரணம் ?''

         ''முதலில் வரும் 234 பேர்களுக்கு MLA சீட் உறுதின்னு சொல்லி இருக்காங்களே !''

 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன் 'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
இப்படி  நடந்துக்கலாமா,அப்பன் ?
           ''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
          ''உங்க மகதான் ...அவ சம்பாத்தியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு , கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''

தள்ள வேண்டியதை தள்ளினா...:)
            ''புறம்போக்குப் பெட்டிக் கடைக்கு எப்படி கரெண்ட் கனெக்சன்  தந்தாங்க ?''
              ''அட நீங்க வேற ,தள்ள வேண்டியதை தள்ளினா தள்ளு வண்டிக்குக் கூட தருவாங்களே !''

ஐந்தறிவுக்கு உள்ள விசுவாசம் ஆறறிவுக்கு இல்லையே !
விசுவாசம் மிகுந்தது நாய் மட்டுமல்ல ...
கிளியும்தான் என்று நிரூபித்து உள்ளது ...
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடந்து இருக்கும் ஒரு கொலை சம்பவம் ...
நீலம்சர்மா என்னும் பெயர் கொண்ட பெண்மணி கொலை செய்யப் பட்டுள்ளார் 
வீட்டில் இருந்த நகை பணம் கொள்ளை போயுள்ளது ...
துப்பு கிடைத்த விதம் பற்றி கொலையான பெண்மணியின் கணவர் கூறியது ...
என் சகோதரி மகன் அசுதோஷ் சர்மாவை (30)வளர்ப்பு மகன் போல் பாவித்து வீட்டில் வளர்த்து வந்தேன் ...
என் மனைவி கொலை விசாரணைக்காக போலீசார் வரும்போது ...
என் மனைவி செல்லமாய் வளர்த்து வந்த கிளி ...
'ஆஷு,ஆஷு 'என்று கத்தியதுடன்..இயற்கைக்கு மாறாக விநோதமாக செய்கைகளுடன் சத்தம்போட்டது ...
இதை போலீசாரிடம் கூறினேன்...
அஷுதோசை விசாரித்ததில் குற்றத்தை அவன் ஒப்புக் கொண்டானாம்!
குற்றம் செய்து தப்ப நினைக்கையில் வீட்டு நாய் குறைத்ததாம் ...
அதையும் கொன்றிருக்கிறான் 'பசுத்தோல் போர்த்திய புலி 'அஷுதோஷ்!
ஐந்தறிவு ஜீவன்கள் கூட மனிதனுக்கு விசுவாசமாய் இருக்கின்றன ...
ஆறறிவு உள்ளவன்தான் வளர்ப்பு மகனாய் இருந்தாலும் ...
விசுவாசமின்றி கொலையும் செய்து ,கொள்ளையும் அடிக்கிறான் !



16 comments:

  1. 1) அப்பவே அப்பல்லோ (மன்னிக்க) அப்பாலே போ சாத்தானே ன்னு சொன்னா சர்தான்.
    2) எத்தன பேருக்கு டெப்'ஆசிட் உறுதி ன்னு தெரியலையே.
    3) இந்த ஆள, பெண்ண வச்சி சூதாடுன 'தருமன்' னு சொல்லலாம்.
    4) மின்(சார) (த்த) ஒழுங்கு (படுத்துற) ஆணையம் னு தப்பா புரிஞ்சி கிட்டா கம்பெனி ஜவாப்தாரி அல்ல. யப்பா ஆள வுடுங்க. இப்ப எடப்பாடி ஞாபகம் வந்தா! நாங்க ஜவாப்தாரி அல்ல.
    5) 5அறிவுக்கும் 6அறிவுக்கும் உள்ள 5 வித்யாசம்.
    1 தன் உணவை தானே தேடும்.
    2 தான் வசிக்கு மிடத்தை மாசு படுத்தாது.
    3 வகை வகையாக ஆடை தேடாது.
    4 தன்னை பரா மரிப்'பவர்'க்கு
    விசுவாசமாய் இருக்கும்.
    5 முதுகில் முட்டாது.

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொல்லமுடியும் ,இதுவும் உலக அளவில் விளம்பரம்தானே :)
      ஏதாவது ஒரு கட்சி டெபாசிட் தொகையை விட இரண்டு மடங்கு தந்தால் வாபஸ் வாங்கிக்க வேண்டியதுதான் :)
      மண்ணா போறவனுக்கு பெயர் தருமனாம் :)
      சேர்த்த பணத்தை இப்போ செல்வழிக்காம எப்போ பண்றதாம் :)
      கிளிகிளின்னு கிளிச்சீட்டீங்களே:)

      Delete
  2. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...!

    இந்தக் கட்சியில் சேர்பவர்கள் அனைவரும் மந்திரி உறுதி... வாங்கோ... வாங்கோ...! பன்னீர் தெளித்து வரவேற்க தயார்...!

    சரி இனி நின்னுக்கிட்டு சாப்பிடுறேன்...!

    எல்லாமே புறம்போக்குகள்தான்...!

    இதுக்குத்தான் பங்களாவில் கிளி வளர்க்கனுங்கிறது... இப்போ விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டிய அவசியம் வந்து இருக்காதில்ல...!

    ReplyDelete
    Replies
    1. படித்த மக்களின் சிந்தனைதான் எங்கோ போனது :)

      அது சரி ,ஜெயிக்கும் வரை எப்படி வேணும்னாலும் அள்ளிவிடலாம் :)

      அப்படின்னா படிபடிப்பா ஏறினாதானே சோறு கிடைக்கும் :)

      லஞ்சம் வாங்கிறவங்கதானே:)

      இனி வருத்தப்பட்டு என்ன செய்ய :)

      Delete
  3. ஆறறிவு செயல்படுவது என்றோ குறைந்து விட்டது ஜி...

    ReplyDelete
    Replies
    1. வருத்தமளிக்கிறது ,இதைப் போன்றே தமிழ்மணத் திரட்டியின் செயல்பாடும் :)

      Delete
  4. நண்பர் டி.டி சொஸ்வது சரி.

    ReplyDelete
    Replies
    1. இப்ப சொல்லுங்க ,நான் சொல்றதும் சரிதானே :)

      Delete
  5. சேர்த்தே வைத்திருக்கலாம் சுடுகாட்டுக்குப் போவதும் சுகம்தானே
    mla சீட்டுக்குப் போட்டியிட உரிமம் வழங்கப் படும் பிறகு மகனே உன் சமர்த்து
    அப்பனுக்கு இருக்கும் வரவைக் கெடுக்கலாமா
    வியாபாரம் பிரகாசிக்கச் செய்கிறார்கள்
    பத்திரிக்கையில் இந்தக் கிளி கதை படித்த நினவு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவன் சாவுக்கு போறதும் சுகம்தானா :)
      காசிருந்தால் ஜெயிப்பார் :)
      மாதாமாதம் கப்பம் கட்டினால் மகிழ்ச்சியா இருப்பாரே :)
      நல்லது செய்யட்டும் ,கையூட்டு வாங்கிக் கொள்ளாமல் :)
      மறக்க முடியாதே அந்த கிளியை :)

      Delete
  6. Replies
    1. கிளியின் விசுவாசமும் தானே :)

      Delete
  7. Replies
    1. இப்போ தள்ளு வண்டிகளும் பிரகாசமாகி விட்டன என்பது ஊருக்கே தெரியுமா :)

      Delete
  8. மக்களின் அறியாமையும் மறதியும்தான் அவர்களின் மூலதனம்

    ReplyDelete
    Replies
    1. நாம் வியாதியை வைத்துக் கொண்டு அவர்களை அரசியல்வியாதிகள் என்று சொல்லி பெருமைப் பட்டுக்கிறோம் :)

      Delete