16 March 2017

புருசனை நல்லா புரிஞ்சுகிட்டு இருக்காங்க :)

சாப்பாட்டு உப்பினால் பலன் கிடைக்கலையோ :)              
                   '' நான்,  உப்புச் சோப்பை உடம்பிலே தேய்ச்சிக் குளிச்சா  நல்லதுன்னு  ஏன்  சொல்றே ?''
                     ''அப்போதாவது உங்களுக்கு சொரணை வருமான்னு பார்க்கத்தான் !''
ஜாக்கெட்டிலே மட்டும்தான் ஜன்னல்  இருக்கணுமா :)
           ''டைரக்டர் சார் ,ஹீரோயினுக்காக  வாங்கி  வந்த சேலையில் பெரிய ஓட்டை இருக்கே ,என்ன பண்றது ?''

         '' அந்த ஓட்டையில் தொப்புள் தெரியுற மாதிரி கட்டி விடுங்க  ஜன்னல் சாரின்னு சொல்லிக்கலாம் !''

 நோய் இருந்தா இங்கே வேலை நிச்சயம் :)
       ''அந்த ஸ்வீட் ஸ்டால்லே வேலைக்கு ஆள் எடுக்கிறாங்களாமே ,என்ன தகுதி வேணுமாம் ?''
        ''அவசியம் சர்க்கரை நோய் இருக்கணுமாம் !''

விரலில் மையைத் தவிர 'இது 'வும் உண்டு வாக்காளனுக்கு :)
       ''வாக்குச் 'சாவடி'ன்னு பெயர் வைத்தவன் தீர்க்கதரிசியா ,ஏன்?''
       ''நம்ம வாக்கை வாங்கிட்டு ,இந்த அரசியல்வாதிங்க நம்மையே 'சாவடி'க்கிறாங்களே !''

புருசனை நல்லா புரிஞ்சுகிட்டு இருக்காங்க :)
          ''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதே, ஆண்டியாப் போயிடப் போறார் !''
          ''அவரைப் பற்றி எனக்குத் தெரியாதா ? வேற 'ஆன்டி 'யை வேணா தேடிப் போவார் !''

'வாடா 'என்று உரிமையில் அழைப்பவள் உண்மையில் வாடாமலரா ?
      உன்னை மலர் என்று சொல்ல மனம் வரவில்லை ...
      வாடா மலர்கூட வாடி உதிர்வதால் !

22 comments:

  1. ஹலோ நான் ஆன்டியை தேடிப்போவது உங்களுக்கு எப்படி தெரிஞ்சுச்சு

    ReplyDelete
    Replies
    1. அந்த ஆன்டிதான் தமிழன் மாட்டிகிட்டார்னு ரகசியமா சொன்னாங்களே :)

      Delete
  2. நல்ல வேளை ஒட்டை சின்னதாக இருந்ததால் தொப்புள் தெரிகிறமாதிரிகட்ட சொன்னார் ஒட்டை மிகப் பபெரியதாக இருந்தால் தொப்புளை மறைத்து விட்டு உடம்பை காட்டும்படியாக கட்டஸ் சொல்லி இருப்பார் அந்த டைரக்டர்

    ReplyDelete
    Replies
    1. கட்டுறதுக்கு என்ன இருக்கும் ,கர்சீப் அளவுக்கு இருந்தால் ஒட்டியே விடலாமே :)

      Delete
  3. மறுபடியும் ஒரு உப்பு சோப்பா?!!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அது மேனிக்கு ,இது சொரனைக்கு :)

      Delete
  4. சூடு சொரணை எங்க பரம்பரைக்கே கிடையாது... இருந்திருந்தா உன்னைப் போயி கட்டியிருப்பேனா...?!

    சாரி... இனி கதவு சாரியா கட்டப் பாருங்க...!

    போறதுன்னு முடிவாயிடுச்சு... சீக்கிரமாப் போயிச் சேருவோம்...!

    செத்துப் போச்சு மொதலாளி... செத்துப் போச்சு... ஜனநாயகம்...!

    வேற ‘ஆன்டி’ வேறயா...? என்னத் திட்டாதே... இந்த ஆண்டிப் பண்டாரத்துக்கு... நான்தான் ‘அந்த ஆன்டி...!’

    சர்தான் போடா... உன்னை மாதிரி எத்தன பேரைப் பாத்து இருக்கேன்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரை நோய்தான் பரம்பரை ,உப்புமா :)

      ஏற்கனவே திறந்துதானே இருக்கு :)

      இருந்து என்னத்தைக் கண்டோம் :)

      ஜனங்களோட அதுவுமா செத்து போச்சு :)

      இது உள்குத்து வேலையாத் தெரியுதே :)

      வாடான்னு மட்டுமா சொல்லும் வாய் :)

      Delete
  5. உப்புச்சோப்பு விலை ஏறிடப்போகுது ஜி

    ReplyDelete
    Replies
    1. என்ன விலை ஏறினாலும் சொரணை இல்லாம வாங்கத்தானே போறாங்க :)

      Delete
  6. ரொம்பத் தான் 'வெவரம்' ஸ்வீட் ஸ்டால் ஓனருக்கு...!

    ReplyDelete
    Replies
    1. அவருக்கும் அந்த இனிய பாதிப்பு இருக்கே :)

      Delete
  7. அவசியம் சக்கரை நோய் ....
    நகைப்பணி தொடர்க

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நோய்க்கு ஒரு அரிய வாய்ப்பு:)

      Delete
  8. உப்புசோப் உடலுக்கு நல்லது நான் அதைத்தான் உபயோகிக்கிறேன்யாராவதுநடிகை சொல்ல வேண்டும்
    விவரமான டைரெக்டர்
    ஸ்வீட் தின்னாதவராக இருக்க வேண்டுமா
    எத்தனை முறைதான் சாவடிப்பார்கள்
    சின்னவீட்டைத்தான் இங்கிலீசில் ஆண்டி என்கிறாரோ
    வாடி மலரே சரியா

    ReplyDelete
    Replies
    1. நடிகை சொன்னால் நாடு எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளும் :)
      காசு பார்ப்பதில் கெட்டிக்காரர் :)
      எவ்வளவு வஞ்சக எண்ணம் :)
      சாவது ஒரு முறை ,ஆனால் பல பேராச்சே :)
      அப்படியும் சொல்லலாமோ :)
      மலரை எப்படி வேண்டும் என்றாலும் அழைக்கலாம்:)

      Delete
  9. பழனியில ஒரு ஆண்டி இருக்காரே..அந்த ஆண்டியா...என நிணைத்து அசந்துவிட்டேன் தலைவரே....

    ReplyDelete
    Replies
    1. அவருக்குத்தான் ஒண்ணுக்கு ரெண்டாயிருக்கே :)

      Delete
  10. ஸ்வீட் ஸ்டால்லே வேலையாம்
    சர்க்கரை நோய் தகுதியாம்
    நேரில் வரவாம்

    ReplyDelete
    Replies
    1. நாலுவகை இனிப்பைக் கொடுத்து சோதனை செய்வாரா :)

      Delete
  11. அழகிய ஜோக்குக்குமகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வாடா மலர் கூட அழகுதானே :)

      Delete