9 March 2017

நடிகைகளைத் தெரிந்த அளவுக்கு ......:)

பிற்போக்குவாதி... அர்த்தம் என்ன புரிகிறதா :)
         '' நேற்று முதல் பிற்போக்குவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களே ....என்னைக்குதான் நீங்க முற்போக்குவாதியா இருந்தீங்க ?''
           ''வாந்தி எடுத்த அன்னைக்குத்தான் !''

காதலி மனசுலே இன்னொருவனா :)
              ''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''

             ''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு  ரமேஷ்னு  ஒரு காதலன் இருக்கானா ?''

நடிகைகளைத்  தெரிந்த அளவுக்கு ......:)
            ''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறீங்க ?''
            ''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌளை 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''

காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா :)
  ஓவியங்கள் அருமைதான் ...
  ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
  தூரிகை பிடித்த காரிகை 
  வரைந்த ஓவியங்கள் நடுவே 
  வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !

26 comments:

  1. உளறுவாய் சிறுக்கி உளறிட்டாளே...

    ReplyDelete
    Replies
    1. தானாட விட்டாலும் என்பது சரியா போச்சே :)

      Delete
  2. இதுவல்லவோ புது ராகம்...! ஹா... ஹா..

    ReplyDelete
    Replies
    1. கேட்கும் போது எப்படி இருக்குமோ :)

      Delete
  3. Replies
    1. ஒரு ஹா சுரேசுக்கு ,இன்னொரு ஹா ரமேசுக்கா :)

      Delete
  4. தெரிந்த நடிகைகள் பாட்டு பாடி இருந்தா..ராகம் தெரிந்திருக்குமோ....!!!!!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் எல்லாம் தெரியாத நடிகைகளா :)

      Delete
  5. Replies
    1. நீங்க திண்ணையைச் சொல்றீங்களாபெண்ணைச் சொல்றீங்களா :)

      Delete
    2. இரண்டும் அருமை

      Delete
    3. படம் வரைந்தவர் யாரோ ?அவருக்கு பாராட்டுக்கள் :)

      Delete
  6. அட கழிசல்ல போறவனே...!

    ஓ... பாய் பிரண்ட் சுரேஷா...! ஏய்... உண்மையைச் சொல்லுயா... சுரேஷா... முகேஷா...?

    மாயா மச்சீந்ரா... மச்சம் பாக்க வந்தீரா...!

    அரிசி குத்தும் அக்கா மகளே...! காதல் ஓவியம்...!

    த. ம. 4

    ReplyDelete
    Replies
    1. ஒரே நேரத்தில் இரண்டுமா :)

      மூன்றாவதா இன்னொருத்தனா :)

      அவருக்கு இதான் வேலை போலிருக்கு :)

      தலைப்பு ,சுகமான காத்திருத்தல் ?:)

      Delete
  7. இர்ண்டாகவும் இருக்கக் கூடாது
    இந்த மாதிரி ஷ் என்று முடியும் பேருள்ள ஒருவர்தான் என்று எண்ணினேன்
    ராகத்தின் பெயரில் பல நடிகைகள்...வெளியேறினது ஆண்பாடகரா பெண்பாடகரா
    காட்சி தந்து என்னை ஆட்டுவிப்பாய் அம்மா

    ReplyDelete
    Replies
    1. இரண்டும் ஒரே நேரத்திலும் வரக் கூடாது :)
      நீங்க தீர்க்கதரிசிதான்:)
      இதிலென்ன சந்தேகம் :)
      ஓவியம் மட்டும்தான் மனதை ஆட்சி செய்யுமோ :)

      Delete
  8. Replies
    1. கிராமத்து கட்டழகியையுமா :)

      Delete
  9. Replies
    1. திண்ணை நாயகியை முன்பே உங்களுக்குத் தெரிந்து இருக்குமே :)

      Delete
  10. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. பதிவுக்கா படத்துக்கா :)

      Delete
  11. அருமையான பதிவு. அருமை .

    ReplyDelete
    Replies
    1. பலருக்கும் மாய மௌலவ கௌளை ராகத்தை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தானே :)

      Delete
  12. ரசித்தோம் ஜி அனைத்தையும்...

    ReplyDelete
    Replies
    1. மாசமா இருக்கிற எல்லோரும் முற்போக்குவாதிகள்தானே :)

      Delete