இந்த பயபிள்ள பாஸாவானா :)
''பரீச்சைத் தாளை லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதணும்னு ஏன் சார் சொல்றீங்க ?''
''மனசுக்குள்ள ஒண்ணுமே இல்லைன்னாலும் பக்கம் பக்கமா எழுத வருமே !''
கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் !
''பொன் விழா கண்ட நம்ம பள்ளி இதுவரை மாநில அளவில் முதல் இடம் வராததற்க்கு காரணம் ,பள்ளியோட இலச்சினை தானா?''
''ஆமா ,'பிறர்க்கு வாழ் 'என்பதை மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''
''ஆமா ,'பிறர்க்கு வாழ் 'என்பதை மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''
இந்த இசையை ரசிக்க முடியலே !
விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
இடை இடையே சங்கொலி சத்தமும் ...
'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !
இடை இடையே சங்கொலி சத்தமும் ...
'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !
|
|
Tweet |
லவ் லெட்டர் ஜோக் அருமை.
ReplyDeleteசனி ஞாயிறு வீட்டில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.
தளம் புதுப் பொலிவுடன் இருக்கே..!
God Bless You
நிறைய படித்தாலும் எதுவும் நினைவுக்கு வருவதில்லை ,லவ் லெட்டர் என்றால் வரும்தானே :)
Deleteசனி இருக்கும் இடத்தில் நாம் இருப்பது அதை விட கஷ்டமாச்சே :)
இருந்தாலும் ,ஓபன் ஆவதில் தாமதமாகிறதா?நீங்கதான் சொல்லணும் :)
ரசிக்க வைத்தன
ReplyDeleteமுதன் முறையாய் வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி நாகேந்திர பாரதி ஜி :)
Deleteபக்கம் பக்கமா எழுதறது எண்ணமோ உண்மைதான்...வாத்தியாரு வாழ்க்கையில ‘லவ்’ பெயிலராம்... அவரோட வாழ்க்கையும் முட்டையாப் போச்சு... நானும் கூமுட்டையாயிட்டேன்... பாஸ்... பாஸ் பண்ண வழியில்ல...?!
ReplyDelete'பிறர்க்கு வாழ் 'என்பதை மாணவர்கள் தப்பா புரிஞ்சிகிட்டு 'பிறர்க்கு வால்’ ன்னு நெனச்சிட்டாங்கன்னு நெனக்கிறேன்...!
ஒனக்கு சனியன் பிடிச்சிடுச்சு...! இனி எங்கேயும் சும்மா ஜாலியா இருக்கப் போறான்னு சொல்லாம சொல்றாய்....!
‘நிம்மதியா நா நித்திரை கொள்(ல்)ற எடத்தில சீக்கீரம் கொண்டு போய் என்ன படுக்க வையுங்க... ஒங்க இம்சை தாங்கமுடியல... ரொம்பத்தான் ஆட்டம் போடாதிங்கடா...! ஆடி அடங்கி நீங்களும் அப்புறமா அங்கதான் வரணும்...! ஆமாம்... !’
த.ம.1
ஒ ..அவர் தாடி வளர்த்த வாத்தியாரா :)
Deleteபிறர்க்கு வாழ்ந்த மாணவர்களில் நானும் ஒருவன் ,அதனால்தான் வால்தனம் குறையலே:)
புரிஞ்சிகிட்டா சரி :)
அந்த காலத்திலே நான் ஆடாத ஆட்டமா :)
சனிக்கு இப்படியும் ஒரு பொருள் உண்டோ, சிறந்த நகைச்சுவை.
ReplyDeleteசனி இரண்டெழுத்து ,இரண்டு அர்த்தம் இருந்தா தப்பா :)
Deleteசனி... ஞாயிறு! :) ரசித்தேன்.
ReplyDelete'எங்கள் பிளாக்'போய் 'திங்க 'கிழமையும் ரசிக்கலாம் :)
Deleteவாழ்க்கையிலே பாஸ்...?
ReplyDeleteபாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ் :)
Deleteசனி ஞாயிறு ஹஹஹ
ReplyDeleteநல்லா எழுதுவான் பையன்...பரீட்சை...ஹஹஹ்
எக்ஸ்ட்ரா பேப்பர்கூட கேட்டு எழுதுவான் :)
Deleteஅப்படியா, மனதில் நிறைய இருக்கு,,,
ReplyDeleteஆனா எழுத முடியல,,,,,,
அப்ப என்ன செய்வது???
அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள்.
ஒரு தலைக் காதல் என்றால் ஒரு தலைப்பு கூட தோன்றாது :)
Deleteலவ் லெட்டர் போல எழுது! சூப்பர் பாடம்! ரசித்தேன்! நன்றி!
ReplyDelete01. அவன் ‘’பாட்டு’’க்கு கண்ணே கலைமானே.... அப்படினு எழுதிட்டா...?
ReplyDelete02. உண்மைதானே விட்டுக் கொடுக்கும் தன்மை.
03. காலை வாற சந்தப்பம் கிடைச்சுருச்சு பிறகு பார்த்துக்கிறலாம்...
04. இதுதான் எழவொலி.
1.சோகப் பாட்டுக்கு வாழ்நாள் முழுதும் சோகப் பட வேண்டியது வரும் :)
Delete2. எனக்கு இவ்வளவு நல்ல விஷயத்தை கற்றுத்தந்தது ,என் பள்ளிதான் :)
3.யாரை எப்போ சந்திக்கணும்னு கற்றா தரணும்,நீங்க வேற சப்போர்ட்டா :)
4.ஒரே மாதிரி ஒளியைக் கேட்க காதுக்குப் பிடிக்கலே ,கண்ணும் அப்படித்தான் விதவிதமாய் பார்க்க நினைக்கிறது :)
அட..கனவர்மார்கள் இப்படியும் சந்தோசபட்டுக் கொள்கிறார்கள்.....
ReplyDeleteஇருக்காதா ,தான் நினைப்பது தன்னிலை விளக்கமாய் வந்தால் :)
Delete