8 August 2015

பூஜை நேரத்தில் நடிகை பெயர் சொல்லக் கூச்சமா :)

---------------------------------------------------------------------------------------

போதையில் கூட நல்ல காரியம் :)

               ''மதுவுக்கு எதிரான போராட்டம் செய்ய ,உங்க ஏரியாவுக்கு மட்டுமே  அனுமதி தரணும்னு .டாஸ்மாக் மேனேஜர் நீங்க ஏன் சொல்றீங்க ?''

                      ''அப்பத்தானே சரக்கு ரெண்டு மடங்கு விற்குது !''

பூஜை நேரத்தில் நடிகை பெயர் சொல்லக் கூச்சமா ?

           '' புதுமுக கவர்ச்சி நடிகை தன்னோடபேரை மாற்றிக்கணும்னு 
அர்ச்சகர்கள் போராட்டம் பண்றாங்களே ,ஏன் ?''
            ''சமர்ப்பியாமி ..ங்கிறது அவங்களோட பெயராச்சே !''

தலைவர் 'வண்டு முருகனின் 'வாரிசா ?

              ''வரலாறு தெரியாமே தலைவர் உளறிக் கொட்டி மதப் பிரச்சினையை உண்டாக்கி விடுவார் போலிருக்கா  ,எப்படி ?''
        '' பாண்டவர்களின் பாரம்பரியத்தில் வந்தவரை  போப்''பாண்டவர் ' ஆக நியமனம் செய்யணும்னு அறிக்கை வெளியிட்டு இருக்காரே !''



வேகம் விவேகமல்ல ,அதுக்காக இப்படியா ?

முயலையும்  வெல்லலாம் ஆமை ...
ஆனால் ...அரசின் கோப்பிடம் தோற்றுப் போகும் !


  1. உலகளந்த நம்பிFri Aug 08, 07:11:00 a.m.
    கவர்ச்சி நடிகையின் பேரைத்தானே மாத்தச் சொல்றாங்க. கவர்ச்சியைக் குறைக்கச் சொல்லிப் போறாடலியே!?




    1. Chokkan SubramanianFri Aug 08, 09:27:00 a.m.
      பகவான்ஜீ தான் குண்டக்க மண்டக்க யோசிக்கிறார்னா, நீங்களுமா?

      இருந்தாலும் உங்க கேள்வி நியாயமானது தான்.
    2. KILLERGEE DevakottaiFri Aug 08, 09:46:00 a.m.
      அது என்ன சொக்கன்ஜி தலையில கொட்டிப்புட்டு வலிக்குதானு ?கேட்கிறமாதிரி.....
    3. Chokkan SubramanianFri Aug 08, 12:01:00 p.m.
      நாங்க தான் எப்பவுமே, குழந்தையையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுரவங்களாச்சே!!!
    4. உலகளந்த நம்பிFri Aug 08, 12:45:00 p.m.
      செல்லமாத்தான் கொட்டுனீங்க. வலிக்கல சொக்கன்.

      //போறாடலியே//...’ர’ வுக்குப் பதிலா ‘ற’ போட்டுட்டேன். இதுக்கும் ஒரு குட்டு வைத்திருக்கலாமே?!

25 comments:

  1. சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
    “அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
    கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு
    குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு” -ன்னு
    பாட்டுப்பாடி சரக்க ரெண்டு மடங்கு வித்திடுவார்ன்னு சொல்லுங்க...!


    அர்ச்சகர்... அர்ச்சனா...பேர்ல்லதான் அர்ச்சனை பண்ணப் புடிக்கிதாம்... எல்லாம் அவனுக்கே சமர்ப்பணம்... பணம்...!


    போப்பு ஆண்டவர்தானே...! பாண்டவர் பூமிய விட்டுக்கொடுத்தா என்ன? விட்டுப்கொடுத்தா கெட்டுப்போறதில்லல்ல...!
    பாப்பு வச்சுட்டாய்யா ஆப்பு...!


    ஒரு வேளை ஆமை கோப்பியம் பார்த்திருக்குமா.... ? இல்லை படிச்சிருக்குமா...?

    நன்றி.
    த.ம. +1



    ReplyDelete
    Replies
    1. கோழியை விட அதிகம் எனக்கு பிடித்தது எலந்த பழம்தான்:)

      அர்ச்சனா என்றதும் காட்டன் வெள்ளையில் ஒரு தேவதை கண்ணில் தெரிகிறாளே :)

      அவரு நாம ஆளுதாம்லே :)

      கோப்பை தன்முதுகில் சுமந்து இருக்கும் :)

      Delete
  2. 01. கரண்ட் உள்ளபோதே ஃபேனை ஓடவிடுபவரோ....
    02. இவங்களுக்கு மினாம் அர்ச்சகர்களோ,,,,
    03. அப்பத்தானே அரசியலில் டாப்பில் வரலாம்.
    04. ஸூப்பர்

    ReplyDelete
    Replies
    1. 02. இவங்களுக்கு பினாமி அர்ச்சகர்களோ,,,,

      Delete
    2. 1 இந்த ஃ பேன் ஓடிக்கொண்டேதான் இருக்கும் ,ஓசி கரெண்ட்டில்:)
      2.அர்ச்சனைக்கு பலபேர் இருக்க பினாமி எதுக்கு :)
      3.உளறுவாயன் என்றாலும் ஊரறிந்த தலைவர்தான் :)
      4.அபுதாபியிலும் அப்படித்தானா :)

      Delete
  3. அரசு குறித்த ஜோக்குகள் அருமை...கவரு மென்ட்
    தம +

    ReplyDelete
    Replies
    1. என்னதான் கணினி வந்தாலும் கூட காசுதான் கோப்புகளை நகர்த்துகிறது :)

      Delete
  4. Replies
    1. வடமொழி பெயர்களே நமது கிராமங்களிலும் புகுந்து விட்டது ,இல்லையா:)

      Delete
  5. Replies
    1. போதையில் என்ன கோஷம் போடுகிறோம்னு புரியாதோ :)

      Delete
  6. ஹா... ஹா.... ஹா..... ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சன்னி லியோன் என்றெல்லாம் பெயர் இருக்கும் போது சமர்ப்பியாமி இருக்கக் கூடாதா :)

      Delete
  7. மது விற்பனைக்கு இப்படியும் ஒரு உத்தியா?

    ReplyDelete
    Replies
    1. நாய் வாலைஅறுத்து நாய்க்கே சூப்பு வச்சுக் கொடுப்பார் போலிருக்கே :)

      Delete
  8. சமர்ப்பயாமி என்று கூடப் பெயரா.?அர்ச்சகர் யாரிடம் சமர்ப்பிப்பார்.?தலைவர் வண்டு முருகன் பற்றித் தெரியாதே. வாரிசு பற்றி எப்படிப்புரியும். அரசாங்கக் கோப்புகளில் நல்ல அனுபவம் போல் இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா அதுவும் ஒரு வின் வின் நிலைதான்

    ReplyDelete
    Replies
    1. ஏன் பெயர் உங்களுக்குப் பிடிக்கலையா :)
      கூகுள்ளே வண்டு முருகன்னு தேடிப் பாருங்க ,சிரிச்சு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பில்லே :)
      வின் வின் நிலை ?வியாபாரத் தந்திரத்தைச் சொல்றீங்களா :)

      Delete
  9. வணக்கம்
    ஜி

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் நன்றி த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு மடங்கு விற்குது ,அதுதானே :)

      Delete
  10. இப்படியும் ஒரு விளம்பர உத்தி.

    ஹ ஹ ஹா

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. மீன் பிடிக்கிறனுக்கு கண்ணு தக்கையில்தானே :)

      Delete
  11. Replies
    1. தலைவரின் அறிக்கை பிடித்து இருக்குமே :)

      Delete