22 August 2015

மாமியார் மேல் இம்புட்டு பாசமா:)

---------------------------------------------------------------------------------
ஆஹா ,என்ன பொருத்தம் :)

''இத்தனை வருடமா  டார்வின் தியரி தப்புன்னு இருந்த உங்களை ஒரு படம் மாத்திடுச்சா ,அப்படியென்ன  படம் ?''
''இதோ ,இந்த படம்தான் !''






மாமியார் மேல் இம்புட்டு பாசமா ?

         ''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
''பேரப்பிள்ளையே கண்ணாரப் பார்த்த பிறகுதான் ,நிம்மதியா கண்ணை மூடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''




பாவம் மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!

             ''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றேன்  அதை நீங்க ஏன்  ஏத்துக்க  மறுக்கிறீங்க ? '' 
           ''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''



தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் !

கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
1௦௦ கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !


  1. 01. பேரன் பிறந்ததும் பேத்தியை பார்க்கனும்னு சொன்னா ?
    02. சாதாரண பொண்டாட்டிகளே மரணதண்டணை கொடுக்கும்போது,,, நீதிபதி மகள்னா அப்படித்தான்.
    03. உண்மைதானா பகவான்ஜி இதுவரை எவனும் சாகலையே....
    ReplyDelete

    Replies


    1. 1.நிச்சயமா அப்படியும் சொல்வார் ,ஏற்கனவே மகனிடம் ,உனக்கொரு கண்ணாலத்தைப் பண்ணி வச்சுட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்னு பொய் சொன்னவங்க தான் !
      2.இரட்டை மரணதண்டனையா ?
      3.அறிவிக்காமல் தண்ட வாளத்தில் தலையை வைக்கச் சொல்லுங்கள் ,பார்ப்போம் !
















28 comments:

  1. Replies
    1. இன்றைய முதல்வரான உங்களுக்கு நன்றி :)

      Delete
  2. 01. ஆஹா என்ன பொருத்தம்,
    02. ஒருவேளை மாமியார் மேல் பாசமாகத்தான் இருக்குமோ...
    03. தனக்கு கிடைச்ச துன்பம் பிறரும் பெற அப்படினு நினைக்கிறாரோ....
    04.. இதே அரசியல்வாதிகள் ஃப்ளைட்ட ஏன் தடுக்க மாட்றாங்க.....

    ReplyDelete
    Replies
    1. பல ஜென்மங்களாய் தொடரும் பொருத்தமாச்சே :)
      ஒரு வேளையும் இருக்காது ,இடைவேளையும் இருக்காது :)
      நல்ல கொள்கை ,நல்லா வருவான் :)
      அந்த கூத்தும் மதுரையில் நடந்ததே :)

      Delete
  3. ''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த நான் ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றேன் அதை நீங்க ஏன் ஏத்துக்க மறுக்கிறீங்க ? ''
    ''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே

    கொஞ்சம் இருங்க ஜீ அண்ணிக்கிட மாட்டி விட்டாத் தெரியும் :))))))))))))))
    முடியல :))))) வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறு மாட்டி விடணுமா :)

      Delete
  4. நீங்கதான் ஈரப் பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்கிறவருன்னு தெரியுமே! ஆஹா என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்...!
    இனி டார்வின் தியரி தப்புன்னு யாரும் சொல்லமுடியாது...! இந்தப் படத்த பாதுகாப்பா அவசியம் ஆவணக் காப்பத்தில் வைக்கனும்...!


    பெண் : ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா
    ஆண் : ஐ...
    பெண் : ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையிலொருப் பாப்பா...உன் முகம் போலே என் மடிமேலே
    ஆண் : ஓஹோ...
    பெண் : உன் முகம் போலே என் மடிமேலே
    முத்து முத்துப் பாப்பா முத்தம் ஒண்ணுப் கேப்பா
    ஆண் : ஒரு வருஷம் ஒரு வருஷம் ஒரு வருஷம்
    காத்திருந்தா கையிலொருப் பாப்பான்னு பிள்ளையைப் பெத்துக் கொடுத்திட்டு நீ கண்ணை மூடிறாதே... அப்புறம் பிள்ளைக்கு ஒரு சின்னம்மாவை என்னத் தேட வச்சுறாத...!


    தூக்குத் தண்டனையில்லனாலும்... இந்த ஆயுள் தண்டனையிலயிருந்து விடுபட முடியலையே...! நீதிபதியான நீங்க... ஒங்க மாப்பிள்ளைக்கு கொடுத்த தண்டனை போதுமே...! ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ பழமொழிக்கு அர்த்தம் தெரியல...! கனம் நீதிபதி அய்யா ஆயுள் தண்டனைன்னா எத்தனை வருஷம்? ஒங்க தங்கச்சி சாகிற வரைக்குமா...? இல்ல... ஒண்ணுமே புரியல உலகத்தில!


    “1 மணி நேரம் இன்னைக்கு ரயில் லேட்டுன்னு தெரிஞ்சுதான் மறியல் செய்யவே ரயில் தண்டாவளத்துக்கு வந்தோங்கிற உண்மைய மீடியாக்கிட்ட உளறிகிளறிப் புடாத கைப்பிள்ள...!”
    ”கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு தலைவரே...! எனக்குத்தான் தெரியுமுன்னு நெனக்காதிங்க...ஊருக்கே தெரியும்...! விமானநிலையம் பராமரிப்பு பணிக்காக நாளை ஒரு நாள் மூடுறாங்களாம்... விமான மறியல்ன்னு நாளைக்கு அறிவிப்பு வெளியிடுவோமா...?”

    த.ம.3



    ReplyDelete
    Replies
    1. ஆவணக் காப்பகத்தில் திருடு போக வாய்ப்பிருக்கு ,மனதில் பத்திரமாய் வச்சுக்குவோம் :)

      துக்கத்திலும் சந்தோசப் படுற மாதிரி தெரியுதே :)

      சொல்லுங்கய்யா சொல்லுங்க ,யார் ஆயுள் முடியும்வரை :)

      அடுத்த கட்டமா கப்பல் மறியல்னு புதுமையா செய்துவிட வேண்டியதுதான் :)

      Delete
  5. ரசித்தேன்.

    ரசித்தேன்.

    ரித்தேன்.

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரித்தேன் என்பதை விசாரித்தேன் ,யாருக்கும் தெரியலே :)

      Delete
  6. மாமியார் மேல் இம்புட்டு பாசமா ?----ஆச்....சசரியம்......தான்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மாமியார் இல்லே வாயைப் பிளக்கணும்:)

      Delete
  7. டார்வின் தியரி நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய சிற்ப ஆராய்ச்சி செய்யும் உங்களுக்கும் சந்தேகம் தீர்ந்து இருக்குமே :)

      Delete
  8. பெறப்போவது பிள்ளை என்று யார் சொல்லமுடியும் மனைவி ஒரு ஆயுள் தண்டனைதானே கல்லக் குடி நினைவுக்கு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. முடிவில் ஒரு ஆரம்பம் .ஆரம்பத்தில் ஒரு முடிவு ,இந்த இரண்டில் எது சரி :)
      தப்புக்கு தண்டனை உண்டுதானே :)
      இன்றும் தொடர்கிறதே கல்லக்குடி :)

      Delete
  9. Replies
    1. ஆஜரானதுக்கு நன்றி :)

      Delete
  10. இரட்டை ஆயுள் தண்டனை! செம கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நம்மில் பெரும்பாலோர் அந்த லிஸ்ட்டில் வருவோம் போலிருக்கே :)

      Delete
  11. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. டார்வின் கொள்கை சரிதானே :)

      Delete
  12. புகைப்படம் - ரசித்தேன்! :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆங்கிளில் எடுத்தவரை நானும் பாராட்டுகிறேன் :)

      Delete
  13. ஹஹ்ஹஹ ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. பதிவின் எழுத்தை ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  14. புகைப்படம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. பதிவின் படத்தை ரசித்தமைக்கு நன்றி :)

      Delete