இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !
----------------------------------------------------
நேர்மையை படங்களில் வலியுறுத்தியவரா இப்படி ?
''சிலைக் கடத்தல் வழக்கில் அந்த இயக்குனர் மாட்டிக்கிட்டார் என்பதை உங்களால் நம்ப முடியலையா ,ஏன் ?''
''அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'விரலுக்கேற்ற வீக்கம் 'ஆச்சே !''
இப்படித்தான் சிலர் தேசபக்தியை காசாக்குகிறார்கள்:)
''கொடியை ஏற்றிவிட்டு அந்த கஞ்சப் பிசினாறி கடைக்காரர் , புத்தியைக் காண்பிச்சிட்டாரா, எப்படி ?''
''மிட்டாயும் ,கொடியும் வேணுங்கிறவங்க ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிக்கணுமாம் !''
சுதந்திரம் உள்ளதா உங்களுக்கு ?
எறும்புகளே ...
எந்தக் கோட்டையில் கொடியேற்ற
நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று
உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !
எந்தக் கோட்டையில் கொடியேற்ற
நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று
உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !
- Chokkan SubramanianFri Aug 15, 05:04:00 a.m.பரவாயில்லை மிட்டாயும்,கொடியையும் சேர்த்து தான் ஒரு ரூபாய் என்று சொல்லியிருக்கிறார். வெறும் மிட்டாய் மட்டும்னு சொல்லலையே...
தலைகீழ் கொடி -சமீபத்தில் நடைபெற்ற காமன் வெல்த் விளையாட்டில் இப்படித்தான் கொடியை தலை கீழாக பிடித்தார்கள் என்று ஒரு பிரச்சனை கிளம்பியது.
எறும்புகளின் அணிவகுப்பை வைத்து அருமையான ஒரு சிந்தனைத்தாக்கம்.
|
|
Tweet |
01. தகுதிக்கு தகுந்த வேலையை செய்யிறவரோ....
ReplyDelete02. தேசப்பற்றுக்காரரே...
03. தலைவர் தண்ணியடிச்சு இருந்தாரோ....
04. மானக்கேடுதான்
1.கொள்ளை அடிக்க என்ன தகுதி வேண்டிகிடக்கு :)
Delete2.'பற்றுக் 'காரர் இல்லை ,வரவுக்காரர் :)
3.தண்ணி அடிக்கலைன்னா தேசப் பற்று இல்லாதவர் என்று கூட சொல்வாங்க போலிருக்கே :)
4.சொல்லாட்டி வெட்கக் கேடு :)
ஹா ஹா
ReplyDeleteஎறும்பின அணி வகுப்பை ரசீத்தீர்களா ஜி :)
Deleteநகைச்சுவைகளை ரசித்தேன். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிலை கடத்துபவனை சினிமாவில் வில்லனாக காட்டியவரே ,நிஜத்தில் வில்லன் ஆனதை ரசிக்க முடிகிறதா :)
Deleteவணக்கம்,
ReplyDeleteஎறும்புகளே எங்த கோட்டையில் கொடியேற்ற இந்த அணிவகுப்பு,,,,,,,,,,,
அனைத்தும் அருமை,
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
தேசபக்தி இன்று விளம்பரமாகவும் இருக்கிறது என்பது தான் உண்மை.
Deletemageswari balachandran>>.
Deleteஒத்திகை இல்லா அணிவகுப்பு அருமைதானே :)
சசிகலா>>
Deleteஅதுவும் கிரிக்கெட்டில் ரொம்ப ஓவர் :)
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteசு 'தந்திர ' தினம் போல் சில நேரங்களில் நினைக்கத் தோன்றுகிறது :)
Deleteநேர்மையா இருந்த ஒலகத்தில பொலக்க முடியுங்களா? சிலையெல்லாம் ‘சேகர்’-ச்சு வைச்சு “தெய்வச்சிலையார்”-ன்னு வெளிநாட்டுல போய் படம் எடுக்கலாமுன்னு நெனச்சா...! இது தெய்வக்குத்தமா...? ஒ குத்தமா? எ குத்தமா? யார நா குத்தம் சொல்ல...?
ReplyDelete''மிட்டாயும் ,கொடியும் வேணுங்கிறவங்க ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிக்கணுமுன்னு நீங்க வாங்கின கடையில சொன்னதத்தானே சொன்னீங்க...! நீங்க சொன்னதுதான் தாமதம்... ஆளாளுக்கு ஒன்னுமே கொடுக்காம எடுத்திட்டு போறாங்களே...!”
“அதான்... நீங்க காசு கொடுத்துத்தானே வாங்கி இருப்பீங்க... நீங்கு நேர்மையானவரு... நியாயஸ்தருன்னு...ஊருக்கே தெரியுமே...!”
விரைவில் தலைகீழ் மாற்றம் வரும்ன்னு தலைவர் சொன்னது இதத்தானோ...?
எறும்புக்கோட்டையில் கொடியேற்றவா நீண்ட அணிவகுப்பு...! உங்ககோட்டையும் செங்கோட்டையாகத்தான் இருக்கிறது...! பேசாமலே செயலாற்றுகிறீர்களே...எங்கள் பாராளுமன்றத்தைப்போல...ஆனால் கூச்சல் குழப்பம் இல்லாமல் செல்கிறீர்களே...உங்களைப் பாராட்டலாம்...!
நன்றி.
த.ம. 3
எடுக்க நினைத்தது “தெய்வச்சிலையார்”படம் அல்ல .எடுத்துக் கொண்டிருப்பது மகனை ஹீரோவாக்கிய 'சரவணப் பொய்கை 'என்ற படம் ! இதில் உள்ள பொய் கை உண்மையாகி விட்டதே :)
Deleteஇது எந்த ஊர் நியாயம் :)
நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கோம் :)
கூச்சல் குழப்பம் கேவலமான மனிதக் குணம் என்று எறும்புகள் உணர்ந்து இருக்குமோ :)
சுதந்திரமான ஜோக்ஸ் அனைத்தும் சிறப்பு!
ReplyDeleteசுதந்திர தின சிறப்பு ஜோக்ஸ் ?
Deleteசுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநேற்று வாழ்த்து சொன்ன உங்களுக்கு ,இன்று எப்படி நன்றி சொல்றதுன்னு வார்த்தைகள் தேடித் தவிக்கிறேன் :)
Deleteநாட்டு மக்களுக்கே சுதந்திரம் இல்லாதப்போ.... வீட்டில உள்ள மக்களுக்கு எப்படி சுதந்திரம் கிடைக்கும்...???
ReplyDeleteஅப்படின்னா ,வீட்டில் உள்ளவர்கள் நாட்டு மக்கள் இல்லையா:)
Deleteசுதந்திரதின நகைச்சுவகள் அனைத்தும் அருமை....பாருங்க அதில நம்மைப் பார்த்து மற்ற நாடுகள் சிரிக்கும் படியும் நட்னதுக்கறோமே...என்னத்த சொல்ல..பிறர் சிரிக்க வாழ்ந்திடாதேனா பிறர் சிரிக்க வாழ்கிரோம் அதையும் நகைச்சுவை நு எடுத்துக்கிட்டாங்களோ நம்மவங்க...
ReplyDelete