30 August 2015

இவர் மனைவி வணங்கப்பட வேண்டியவர் :)


கனவிலே இவர் வரணும்னு சொல்லாமல் போனாரே :)

              ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
                

                    ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
            

                           ''ஒன்லி ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''




மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... :)


            ''ஆறு கண்மாய்களில்  தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
          ''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''


கறி  ஃசாப்டா  இருக்கும் காரணம் :)
     ''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
               ''My crow soft பிரியாணி கடைதான் !''





இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !


ஜெ.பாண்டியன்Sat Aug 30, 02:49:00 a.m.
இப்படி கேட்பவரின் மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் ! ---- அசத்தல்
ReplyDelete

Replies


  1. அகராதியோட வாழ்பவர் வணங்கப் பட வேண்டியவர்தானே ?


26 comments:

  1. ‘கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் ஓடங்கள்’ பாட்டு கேட்டதில்லையா...?
    ‘ஓடுங்கன்னு மனசுல உள்ளத சொல்றீங்க...டாக்டர்..இல்லாட்டி பகலே வராம ஏதாவது பண்ண முடியாதா டாக்டர்?!’


    ‘பிள்ளை.... யார் பார்சல்...!சர்வீஸ்’ - எல்லாம் சர்வீஸ்மைன்ட்தான்...!


    காக்கா கறியா... பிரியாணிக் கறியில இருக்கு...நல்ல சாப்டா இருக்கு...சாப்ட்ட பிறகு ஒன்னும் பண்ணாதே...!


    கற்பூரம் மாதரி... உடனே பத்திக்கிவா...ரொம்ப புத்திசாலி...!

    த.ம.1






    ReplyDelete
    Replies
    1. பகலே வராத மாதிரியா,அய்யாவுக்கு இளமை ஊஞ்சலாடுதோ :)

      சர்வீஸ் மாதிரி தெரியலே ,சந்தர்ப்ப வாதம் போலிருக்கு :)

      எதுக்கும் டாய்லெட் பக்கத்திலேயே நில்லுங்க :)

      கற்பூரக் கரியை முகத்திலே பூசாமல் போனால் சரி :)

      Delete
  2. Replies
    1. படத்தையும் சேர்த்துதானே :)

      Delete
  3. Replies
    1. உங்களுக்கும் அதைச் சாப்பிட்ட அனுபவம் இருக்கா :)

      Delete
  4. இப்பதிவுகளில் காக்கா நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டு பாருங்க ,காக்கா பிரியாணியும் அருமையா இருக்கும் :)

      Delete
  5. Replies
    1. இரவினில் ஆட்டம் போட்டால் அப்படித்தானே :)

      Delete
  6. மை க்ரோ சாஃப்ட் ஜோக் செம! ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. மை க்ரோ சாஃப்ட் இல்லாத ஊரே இல்லை போலிருக்கே :)

      Delete
  7. பகல் கனவில் வருவது
    இரவுக் கனவில்
    வருவதில்லையே!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. உங்க கனவிலே வர்றது கூட என் கனவினில் வராதுதான் :)

      Delete
  8. சொல்லாவிட்டாலும் .....நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தமாக....இருந்தாலும் தர்மம்செய்யாதவர் நாசமாய் போனதாக வரலாறு இல்லையே.......

    ReplyDelete
    Replies
    1. வரலாறு இல்லையேன்னு கேட்டால் ,கலிகாலம் இப்படித்தான் நடக்கும் என்பார்கள் :)

      Delete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. காக்கா பிரியாணி பிடித்ததா :)

      Delete
  12. 01. அப்படினாக்கா ? இவனுக்கு வேலைதான் என்ன ?
    02. அவன் பிழைக்க பிள்ளையார் விட்ட வழி
    03. கடைகாரன் உண்மையானவன்
    04. விடாக்கண்டனே ?

    ReplyDelete
    Replies
    1. கலாம் அய்யா சொன்னதை தவறாய் புரிந்து கொண்டு இருப்பானோ :)

      பிள்ளையாரை வைத்தே சுழி போட்டுட்டான் :)

      நாம்தான் ஏமாளிகள் :)

      இருக்கத்தானே செய்கிறார்கள் :)

      Delete
  13. My crow soft முதலில் பரியல.....துளசிதரன் தமிழில் எழுதத்தான் பரிந்தது.
    எல்லாம் சுவையாக இருந்தது.
    நன்றி. சகோதரா.

    ReplyDelete
    Replies
    1. பு க்கு பதிலாய் இரண்டு ப ...உங்க பசி ப...சீச்சி ..புரிந்தது :)

      Delete
  14. ஹிஹிஹி சிரிப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. புது தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்டதை ரசிக்க முடியுதா :)

      Delete