-------------------------------------------------------------------------------------
ஐம்புலன் போனால் ஆம்புலன்ஸ் :)
''ஐம்புலனை அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான் வந்தது !''
''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான் வந்தது !''
ஒண்ணு மட்டும் கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு ?
''நீங்க தொழில் தொடங்க கொடுத்த பெட்டிசனுக்கு பதிலே
இல்லையேன்னு மந்திரிகிட்டே கேட்டதுக்கு என்ன சொன்னார் ?''
''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !''
பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?
''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன்
சோகமாவே இருக்கீங்க ?''
''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட
என்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''
- டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுTue Aug 05, 07:07:00 a.m.அந்த ஒண்ணுதான் இதுன்னு அரசியல் வாதியை ஏமாத்த முடியுமா. இன்னொன்னும் கொடுத்தாதான் காரியம் நடக்கும்
|
|
Tweet |
// ''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட
ReplyDeleteஎன்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''// ஐயோ பாவம்..... அவர் ஆதங்கம் யாருக்கும் புரியலையே.....
த.ம. 1
எண்பதாம் கல்யாணத்தின் போது ,டைவர்ஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்துவார் என்று நம்பலாம் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
என்ன செய்கிற ஜி அவனும் சின்ன முயற்சி செய்தான்.. அதன் விபரிதம்.... சிறுபுள்ளத்தனம் .... மற்றவைகளை இரசித்தேன்
த.ம 3
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தமிழன் முகவரி இழந்தோம்.....:.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உயிரோடு விளையாடுவதா சின்ன முயற்சி:)
Deleteஆம்புலன்ஸ்ன்னு வருதுன்னு பார்த்தா....கருப்பால்ல ஒரு வண்டி வருது...! ஒரு வேளை பின்னாடி நடக்கப் போறத முன்கூட்டியே தெரியிற ஞானமோ?
ReplyDeleteசவப்பெட்டி கொஞ்சம் பெரிசா செய்யனுங்கிறதுனால கொஞ்சம் காலதாமதம்... அமைச்சரே!...மன்னிக்கனும்... !
ஒங்களுக்குப் பேய் பிடிச்சிருக்கின்னு ஊருல பேசிக்கிறாங்க....!
முகத்தாமரை மோகமுள்ளோ என்னவோ? பனித்துளி நழுவவிடக்கூடாது... தழுவமுயற்சிக்க வேண்டும்...முயற்சி திருவினையாக்கும் இல்லையா...?
த.ம.4
தெரியாதத் தனமாய். பிரபஞ்சத்தின் பிளாக் ஹோளில் இவர் நுளைந்து விட்டாரா :)
Deleteசவப் பெட்டி செய்வதிலும் ஊழல் நடந்ததால் ஏற்பட்ட தாமதமோ :)
ஊருலே என்ன பேசிக்கிறது ,அதோடத் தானே வாழ்ந்து கிட்டிருக்கேன் :)
நல்ல முயற்சி தொடரட்டும் :)
அனைத்தும் அருமை. 60 வதுமாப்பிள்ளையின் ஆதந்தத்தை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteஆதங்கம் நியாயம்தானே :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் ஜீ,,,,,,,,,,
ReplyDeleteரொம்ப அவசியமான சோகம் தான்,,,,,
அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள்,
அவசியமான சோகத்துக்கு காரணம் ,எந்த சாமியாரின் வசியமோ :)
Deleteஐம்புலனை அடக்கினார் ஆம்புலன்ஸ் வந்தது
ReplyDeleteஹிஹிஹி
பெட்டிஷன்/பெட்டி சூப்பர்ஜி
வலிய போய் இப்படி வரவழைத்துக் கொள்ளலாமா :)
Deleteஐம்புலனும் அடங்கினால் ஆம்புலன்ஸா அமரர் ஊர்தி அல்லவா வேண்டும் பெட்டி பெட்டிசன் வார்த்தை விளையாட்டு?பனித் துளிக்கும் ஒட்டகக் காதலுக்கும் என்ன சம்பந்தம்.?
ReplyDeleteமுதலில் ஆம்புலன்ஸ் ,பிறகுதானே அமரர் ஊர்தி :)
Deleteபெட்டி.... வார்த்தை விளையாட்டு மட்டுமல்ல,நாடு நடப்பும் கூட :)
அது ஒட்டாக் காதல் ,ஒட்டகக் காதல் வேணும்னா கில்லர்ஜி இருக்கும் அபுதாபிக்கு போகணும் :)
01. ஐம்புலனையும் சும்மா விட்ருக்கலாம்.
ReplyDelete02. பெட்டியை Son கொண்டு வர்றாருனு சொல்ல வேண்டியதுதானே....
03. பட்ட காலிலேயே படும் 80 இதுதானோ...
04. இவண் லவ் லட்டரை எச்சியை தொட்டு ஒட்டிக் கொடுத்தவனா இருப்பான்.
1.அதானே ,அடக்க நினைத்து அடக்கம் ஆகலாமா :)
Delete2.மூ த்த தாரத்து சன்னா ....:)
3.பட்டு போன பிறகு பட்டால் என்னா:)
4.முதலிலேயே எச்சில் என்றால் மோசம்தான்:)
அய்யோ..பாவம்... இப்பக்கூடவும் அவருக்கு பொன்னுபிடிகலைன்னு சொல்வதற்கு சுதந்திரமில்லையே........
ReplyDeleteவாழ்நாள் சாதனையாளருக்கு எது சுதந்திரம் :)
Deleteஅத்தனையும் சூப்பர்.
ReplyDeleteதாமரை முகத் தத்துவம், அய்ம்புலனடக்கம், பெட்டியும் பெட்டிசனும் அப்புறம் அந்த அறுபது வயதுவரை அந்த மனிதர் தன் மனதில் வைத்திருந்த வருத்தம். அடாடா. அருமை ஜீ..
God Bless You
உயிர் இருக்கும் வரை ஐம்புலனடக்கம் சாத்தியமில்லை தானே :)
Delete//''பொண்ணு பிடிச்சிருக்கான்னு இப்பக்கூட
ReplyDeleteஎன்கிட்டே யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''//
சோகத்தின் உச்சம்!
மனுஷனுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரவே கூடாது :)
Delete\\''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !'' \\பேரு என்னன்னு கேளுங்க, அனேகமா குமாரசாமியாத்தான் இருக்கும்!!
ReplyDeleteஇதென்ன சோதனை குமாரசாமிக்கு :)
Deleteஅடப்பாவமே... ரொம்ப அடக்கிட்டாரோ!
ReplyDeleteபெட்டியோட உங்க சன் வரல்லையேங்கறார் போல..
அடப்பாவி... ஏன், தானாப்போயிச் வேண்டியதுதானே!
ம்ம்ம்ம்ம்ம்
அடக்க அடக்க பொங்கி வழிந்து விட்டது :)
Deleteநல்ல வேளை,சன்னைக் கேட்டார் :)
வெட்கமாய் இருக்காமே :)
ஹஹஹஹ் ஐம்புலன்....ஆம்புலன்ஸ்...
ReplyDeleteபெட்டி முன்னாடி போனாத்தானே பெட்டிசன் பின்னாடி வரும்...
60 லும் பாவம் அவரு....
அந்த ஒட்டாக் காதல் இந்த 60 க்குப் பொருத்தமா இருக்குமோ...
ஐம்பதிலும் ஆம்புலன்ஸ் வரும் :)
Deleteநீங்கள் எல்லாம் கவிதையின் பக்கம் வராததால் ஏதோ என்போன்றவரின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது பகவானே..!
ReplyDeleteஅருமை.
படிச்சா மண்டையைப் பிச்சுக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன் :)
Delete