கட்டியவளே இப்படி நையாண்டி செய்யலாமா :
''பாத்திரக் கடைக்கு மனைவியோட ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு குத்திக் காட்டுறாளே !''
நீதி தேவதை சிலை சொல்லும் நீதி ?
''ரெண்டு பக்க நியாயத்தையும்
ஆராய்ந்து தீர்ப்பு சொல்லணும்னு
நீதிதேவதையின் வலது கை தராசு சொல்லுது
சரி , இடது கையிலே இருக்கிற கூர் வாள்
என்ன சொல்லுது ?''
''நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா
குத்திகிட்டு செத்துப் போயிடணும்னுதான் !''
ஜொள்ளு விட,ஓடும் ரயிலை நிறுத்தலாமா ?
''இந்த ஆற்றுப் பாலம் மேல் புதுசா ரயில் விட்டாங்க சரி ,கீழே ஆத்துலே பொம்பளைங்க குளிக்கத் தடையாமே , ஏன்?''
''ரயில் இங்கே வரும் போது,ஜொள்ளுப் பார்ட்டிங்க அடிக்கடி செயினை இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''
படித்த டாக்டர்களே சூது செய்யலாமா ?
பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு
முன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !
ஒருசிலர்தான் டாக்டர்களைப்போல்
- Chokkan SubramanianTue Aug 05, 08:44:00 a.m.நீதி தேவதையின் விளக்கப்படி, யார் இன்று தீர்ப்பு சொல்கிறார்கள்???
அட கடவுளே, பெண்கள் சுதந்திரமாக குளிக்க கூட முடியாதா?
அப்ப மருத்துவர்களை கொள்ளைக்காரர்கள்ன்னு சொல்றீங்களா?
- Bagawanjee KATue Aug 05, 11:38:00 p.m.இப்படியே போனால் மக்களுக்கு எப்படித்தான் நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வரும் ?
நேரிலே பார்க்கிறான் ,ரகசிய காமெராவிலே பார்க்கிறான் ,பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும் !
நான் வேற தனியா சொல்லணுமா?
|
|
Tweet |
01. உண்மைதானே....
ReplyDelete02. குற்றவாளினு தெரிஞ்சா அவனைக் குத்திக்கொல்லனும்னு சொல்லலையா.....
03. ஒன்றைப்பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும்.
04. டாக்டரை இந்த நிலைக்கு கொண்டு போயிட்டீங்களே.. ஜி
01.உண்மை என்பதால் எழுதாமல் இருக்க முடியுதா :)
Delete02.ஸ்பாட் பைன் மாதிரியா :)
03.சின்ன இழப்பை இழக்கலாம் :)
௦4.இந்த நிலையில் பெரும்பாலோர் வந்து விட்டார்களே :)
வணக்கம்
ReplyDeleteஜி.
இரசிக்கவைக்கும் நகைச்சுவை.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகிர்வு என்ற சொல் பொருந்தாதே ,ரூபன் ஜி :)
Deleteவணக்கம்
Deleteஜி
தாங்கள் எழுதிய நகைச்சுவையை.. மற்றவர்கள் பார்வைக்கு கொடுப்பதை பகிர்வு என்றேன். ஜி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முக நூலில் share செய்வது என்பார்களே ,அதை போல 'பகிர்வு'எனும் சொல்லை நான் அர்த்தப்படுத்திக் கொள்வது ,சரியாவென்று தமிழ் அறிஞர்கள் யாராவதுவிளக்கம் சொன்னால் நல்லது :)
Deleteஇனிமே பாத்திரக் கடைப் பக்கமே போகக் கூடாது போல இருக்கே
ReplyDeleteபழைய பேப்பர் கடைப் பக்கமும்தான் :)
Delete''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒவ்வொரு எழுத்தா குத்தி சம்பாதிக்கிறாரு... நீ என்னடான்னா... அப்ப அப்ப
ReplyDeleteபைசாவுக்கு பிரயோசனம் இல்லையேன்னு குத்திக் குத்திக் காட்டுறா...இதுக்கு என்ன கத்திய எடுத்தே குத்திடலாம்..வெளியில யாரோ வந்திருக்கிறப்ல தெரியுது... ஜனாதிபதி விருது எதும் வந்திருக்கப்போகுது...!
'நியாயமா தீர்ப்பு சொல்முடியலைன்னா ... அதுக்கு ஏ இந்தக் கத்து கத்தி சொல்றீங்க....!
நம்ம ஆத்ல குளிக்க ஆத்துக்காரர் தடை போடுறாரோன்னு நெனச்சேன்....! தலைமுழுகிடப் போறாங்க....!
நீங்ன உண்மையான டாக்டரத்தானே சொல்றீங்க.... அப்படியெல்லாம் சொல்லப் படாது...!
த.ம. +1
விருது மட்டும்னா நீங்களே வாங்கிக்குங்க :)
Deleteகத்தினால் குத்துவேன் ,குத்தினால் கத்துவேன்,எது சரி :)
ஆத்துக் காரருக்கு அவ்வளவு உரிமையெல்லாம் கிடையாதே :)
நவீன டாக்டர்களை சொல்றேன் :)
அனைத்தும் அருமை. நீதிதேவதை கையின் வாளுக்கு அப்படி ஒரு பொருளோ?
ReplyDeleteசில தீர்ப்புகளைக் கண்டால் அப்படித்தான் தோன்றுகிறது :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
நூல்கள் பல எழுதியுள்ள நீங்கள் ,விளக்கமாய் சொல்லலாமே :)
Deleteபாத்திரக் கடைக்கு போகக் கூடாது போல! :)
ReplyDeleteத.ம. +1
போகலாம் ,பெயர் வெட்டும் இடத்தில இருக்கக் கூடாது :)
Deleteமருத்துவர்கள் குறித்து சொன்னது உண்மையாகிக் கொண்டே வருகிறது
ReplyDeleteகேட்டால் ,கல்வி வியாபாரமாச்சே என்பார்கள் ,மனிதாபிமானம் வேண்டாமா :)
Deleteதம +
ReplyDeleteநீங்க செய்ஞ்ச நல்ல காரியத்துக்கு நன்றி :)
Deleteகுத்துவும் தேவை தான் ஜி...!
ReplyDeleteமனசாட்சி குத்தினால் சரி :)
Deleteவணக்கம்,
ReplyDeleteசரியாகத்தான் சொல்லியிருக்கிறாள்,,,,
அனைத்தும் அருமை,
நன்றி.
இப்படி குத்திக் காட்டினால் ,எப்படித்தான் கற்பனை ஊற்று சுரக்கும் :)
Deleteஅருமை!
ReplyDeleteஎது அருமை ,மனைவியே இப்படி வெளிச்சம் போட்டு காட்டுவதா :)
Deleteஓட்டுப்பட்டையைக் காணோம்!
ReplyDeleteகூகுள் ஆண்டவர் அருளால் மீண்டும் வந்து விட்டதே :)
Deleteஅனைத்தையும் ரசித்து சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி :)
Deleteஜீ... நீதி தேவதை ஜோக்கை ரசிக்க முடியல ஜீ...
ReplyDeleteடாக்டருங்களுடைய முன்னெச்சரிக்கை ரொம்ப யோசிக்க வைக்கும் தத்துவம். நிஜமாலுமே இப்படியும் இருக்குமோ..?
God bless You
டாக்டர்கள் மேலான நம்பிக்கை குறைந்த அளவிற்கு ,நீதிபதிகள் மேலான நம்பிக்கை இன்னும் குறையவில்லை போலிருக்கே :)
Deleteஆமாம், உங்க வலைத்தளத்திற்கு என்னவாச்சு? எல்லாம் தாறுமாறாக் கிடக்கு!
ReplyDeleteசரி செய்யப் போனால் இன்னும் சிக்கல் ஆகிவிடும் போலிருக்கு !நாளை சரியாகி விடும் :)
Deleteதீர்ப்புக்குக் கட்டுப்படவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு குத்திவிடுவேன் என்கிறதோ. ?பெண்கள் குளிக்கக் கூடாது. டாக்டர்களுக்கு இப்படியும் ஒரு அடை மொழியா.?
ReplyDeleteஅப்படி செய்தால்தான் நீதி வாழும் என்றால் தவறில்லையே :)
Deleteஆற்றோரம் மறைவாக குடிசைப் போட்டுகிட்டா குளிக்க முடியும் :)
படிக்காதவன் அரசியலில் சேர்ந்து கொள்ளை அடிக்கிறான் ,படித்தவன் டாக்டர் என்ற போர்வையில் கொள்ளை அடிப்பது நியாயம் இல்லைதானே :)
\\பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு
ReplyDeleteமுன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !\\
திருட வந்த இடத்தில் டிவி பாத்தவனுங்க, தூக்கம் வருதுன்னு தூங்கி மட்டியவனுங்கல்லாம் இருக்கானுவ!! Funny fellows.
செய்ற தொழில் மேல் பக்தி இருக்க வேண்டாமா,இவனுங்க எப்படி மேலே வருவாங்க :)
Deleteமருத்துவ உண்மை....ம்ம்ம் அதுதானே..இங்கு..நடக்கின்றது....
ReplyDeleteஅது சரி ஆத்துல தண்ணி இருக்கா...அட!
மருத்துவத்திலும் நீதி நியாயம் இல்லை என்றால் மக்கள் எங்கேதான் செல்வார்கள் :)
Deleteஊத்துத் தண்ணியில் குளிக்கும் போதுதான் இந்த கூத்து நடக்கிறது :)
மருத்துவர்களைப் பற்றி நீங்கள் சொன்னது 100 க்கு 100 உண்மை.
ReplyDeleteநன்றி
நம் அனுபவம் அப்படியிருக்கே :)
Delete