23 August 2015

ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா :)

  இருந்தால் தானே சலவை செய்ய :)                  

         ''என்னங்க ,நம்ம பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான் ,தீவிரவாதி ஆயிடுவானான்னு 

பயம்மா இருக்குங்க !''

                     ''ஒண்ணும்  கவலைப் படாதே ,யாரும் அவனை 'மூளைச் சலவை 'செய்ய முடியாது !''
                                                                                                    

              ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா ?                    

              ''தமிழ் வாத்தியார்  எதுக்கு உன்னை வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னார் ?''       

             ''ஷ என்பது வடஎழுத்து நாம பயன்படுத்தக் கூடாதுன்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  !''

என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !           

             ''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
            ''அய்யய்யோ என்னாச்சு ?''
             ''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''


மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
சில வீடுகளில் ,கணவன்மார்கள் வலி தாங்க முடியாமல் போடும்  கூப்பாடும் ...
எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !


  1. Mythily kasthuri renganSat Aug 23, 11:37:00 p.m.
    பாவம் தமிழாசிரியர் அவரை ஏன்பா வம்புக்கு இருக்குறீங்க:)
    பெய்ன்ட் கொட்டினதுக்கு தானா இம்புட்டு இழுவை?!!
    ReplyDelete

    Replies


    1. மற்றவங்களுக்கு மட்டும் ,அவர் ஏன் ஷ வை வேண்டாம்னு சொல்லணும் ?
      பெயிண்ட் என்றாலே இழுத்து இழுத்து அடிப்பதுதானே ?



28 comments:

  1. மூளைச் சலவை '
    ''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''
    கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

    ReplyDelete
    Replies
    1. இவையெல்லாம் ரசிக்கும் படியா இல்லை ,அப்படித்தானே :)

      Delete
  2. Replies
    1. டெம்பிளேட் கருத்தை மாத்துங்க வாத்தியாரே :)

      Delete
  3. கொட்டிய பெயிண்ட் நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு போய் இவ்வளவு பில்ட் அப் செய்தவன் தலையில் பெயிண்டைக் கொட்டத் தோணலையா :)

      Delete
  4. சலவையே செய்ய முடியாதமூளை.? மேலேயிருந்து விழுந்து,,, எது என்று சொல்லாததுதான் சஸ்பென்ஸ். மனைவி என்னும் வரம் வாய்க்கப்படாதவர்கள் பலருண்டு. பூரிக்கட்டை கரண்டி இத்தியாதி வகையால்

    ReplyDelete
    Replies
    1. உருப்படியா எதாவது இருந்தால் தானே சலவை செய்ய முடியும் :)
      சஸ்பென்ஸ் ஜோக் ,...திகில் ஜோக் வரிசையில் :)
      விழுப்புண் பெற்றால்தானே வீரம் என்று சொல்லமுடியும் :)

      Delete
  5. “இதுக்குத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்... இதெல்லாம முளையிலேயே கிள்ளி எறியக்கூடாதுன்னு...! இப்பப்பாரு மூலையிலகூட கொஞ்சமும் மூளையில்லாதவனா இருக்கான்...!”
    “அப்பனுக்குப் பிள்ள தப்பாம பொறந்திருக்குன்னு சொலுங்க,,,!”
    “ஏ... தாயப்போல் பிள்ளைன்னு சொல்லமாட்டியா...?”
    “எப்ப பாரு சண்டை...பெத்தவங்கமாதரி நடந்திக்கங்க... ஒங்களுக்கு மூளையேயில்லையாப்பா...?”


    “ஏண்டா... அவருக்கு குண்டான எழுத்தைக் கண்டாலே பிடிக்காது...அவருக்கு மெல்லினம் புடுச்சாலும் வல்லினம்ன்னா பயம்...இடையினம்தான் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்...!”


    “நாகூட பயந்தே பேயிட்டேன்...விடுறா பெயிண்ட்தானே...!”.
    “அப்படிவிட முடியல மச்சி... பெயிண்ட் கொட்டினது வேலைக்கார குட்டிமேல.... கழுவிவிடச்சொன்னா... இப்ப மூணு மாசம்...முழுகாம இருக்கா...!”


    மனைவி அமைவதெல்லாம் கரண்டி கொடுத்த வரம்தான்னு சொல்லுங்க ...!“வாழ்க்‘கை’ காரண்ட்டி இல்லே...!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. இது நியாயமா ,நல்லதுக்கு மட்டும் அம்மாவை உரிச்சு வைச்சிருக்கான்னு சொல்றது :)

      அவரோட மனைவியும் 'என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம் 'னு பாடிக் கொண்டிருக்கிறாரே :)

      நடந்தது நடந்து போச்சு ,குட்டியை இனிமேலாவது கழுவி விடாம கட்டிக்கச் சொல்லுங்க :)

      சம்சாரம் அது மின்சாரம் ,அதாவது கரண்ட் மட்டுமில்லே ,கரண்டியும் சேர்த்துதான் :)

      Delete
  6. ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா :)--அதுதானே வந்து தொலைக்குது.. அதவிட்டா டாஸ்மாக் வந்து நிற்கிறது..

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை ,இச் நினைப்பு வராமல் இருந்தால் :)

      Delete
  7. மனைவி அமைவெதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,,,,,,,,, ஓ இது தானா அது?
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி என்று பாடிய படி வாழ்ந்தால் பாதிப்பில்லையே :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. காசிருந்தால் செலவு செய்யலாம் ,மூளை இருந்தால்தானே சலவை செய்ய முடியும் :)

      Delete
  9. Replies
    1. பிஞ்சு மனசு ..அய்யா உங்களுக்கு :)

      Delete
  10. 01. அப்பனுக்கு தெரியுதே நம்ம மூளை எப்படினு...
    02. இவன் சந்தோஷத்துக்கு வர்ற ‘’ஷ’’ வா’னு கேட்டிருக்கலாம்.
    03. தலையோட போக வேண்டியது தலைப்பாகையோடு போச்சு.
    04. கூப்பாடு போடுறவனுக்கு சாப்பாடு கிடைக்காதோ.. ?

    ReplyDelete
    Replies
    1. சேச்சே ,இவ்வளவு விவரமா பதில் சொல்றாரே :)
      அவன் சந்தோசம் எதிலோ அதைதானே கேட்க முடியும் :)
      இப்போ ஹெல்மெட்டோட போச்சுன்னுதான் சொல்லணும் :)
      சாப்பாடு வேணும்னா ,அது அவன் பாடு ,அவன் 'கீப் பாடு :)

      Delete
  11. ரசித்து சிரித்தேன்! அருமையான ஜோக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சிரிச்சது ,மூளைச் சலவையை நினைத்துதானே :)

      Delete
  12. இரசிக்கவும் சிரிக்கவும் நல்ல ஜோக்குகள் !!!

    ReplyDelete
    Replies
    1. வந்து இருக்கும் கருத்துரைகளையும் சேர்த்துக்குங்க :)

      Delete
  13. ஹஹஹஹ் ஷகிலா...ஷ..

    பெய்ன்ட்...கொட்டியதுக்கு இத்தனை பில்டப்பா..
    ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாருக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும் போலிருக்கே :)

      அதுவும் பில்டிங் மேலிருந்து கொட்டியதற்கு :)

      Delete
  14. முற்றும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. முற்றாத மொக்கைகளை ,முற்றும் ரசித்த,மைக்கு நன்றி :)

      Delete