27 August 2015

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

------------------------------------------------------------------------------------------------------------

    இது உண்மைதானா :)              
                 
               ''என்னங்க , நாய்கள் எல்லாம் என்னைக் கண்டவுடன்   குரைக்குதே,ஏன் ?'' 
       
        ''  பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியுமாமே  ,அதனால் ஆயிருக்கும் !''

பெயர் ராசியில்லாம போயிடுச்சே !

               ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு 

...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
              
     ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''

புதிய காதலரா பழைய கணக்கை முடிப்பாரு ?

              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ''எனக்கு ஐஸ் வாங்கித் தந்த கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''

தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?


  1. KILLERGEE DevakottaiWed Aug 27, 12:10:00 a.m.
    01. கைது பண்ணியவர் பேரு ராஜ ராஜ சோழனோ ?
    02. ஐஸ்காரன் கணக்கு இருக்கட்டும் இவங்க கணக்கு என்னாச்சு ?
    03. சொன்னவரு 90 க்குள்ளே இருக்காரா ? 10 குள்ளே இருக்காரா ?




    1. 1 கைது செய்தவர் சிபி (ஐ ) சக்கரவர்த்தி ஆச்சே !
      2.அவ்வளவுதான் ,மூழ்கத் தொடங்கியாச்சு !
      3.இவ்வளவு அறிவுபூர்வமா பேசுவதால் எதில் இருப்பார்ன்னு புரிஞ்சுக்குங்க !

25 comments:

  1. நா சொன்னா நம்ப மாட்டேங்கிறீங்க...அவ்வளவு கருப்பா இருக்கீங்க...பேய் கருப்பு...!


    மனுநிதிச் சோழன்னு பேற மாத்த வேண்டியதுதானே...!


    இப்ப இவனுக்கு ஐஸ் வைச்சிட்டேன்...! நீ அவனுக்கு ஐஸ் வித்ததப் பத்தி பேசிப் பிரயோஜனம் இல்ல...! ஆகிறதப் பாரு...!


    தொண்ணூறுசதம் இந்தியர்கள் புத்திசாலிககளா இல்லாமல் இல்லை என்கிறறோ நீதிபதி ?

    த.ம.1









    ReplyDelete
  2. [[[''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு

    ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''

    ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !'']]

    -------------தண்டை கொடுத்தால் மட்டும் போதுமா?
    அது சரி! எப்ப அந்த 'மனுநீதிச் சோழன' சிலையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தூக்கப் போகிறீர்கள்!

    ReplyDelete
  3. ஆமாமாம்... ஒரு எழுத்துதானே வித்தியாசம்... ஆனாலும் அநியாயம்ங்க பேய்னு சொல்வது!

    ReplyDelete
  4. பேய் வருவதும் சிறப்பு மனுநீதி சோழனும் சிரிப்பு.

    ReplyDelete
  5. அண்ணி அண்ணி இந்தாளோட எப்படித்தான் குடித்தனம் பண்ணுறீங்க ?..:))))))))
    காமடி மன்னன் பெயர வச்சும் காமடி பண்ணத் தெரிஞ்ச ஆளு இவர் ஒருத்தர் தான்
    தலைய குனிய வச்சுக் குட்டணும் சிந்திச்சு சிரிக்க வச்சு வயித்தப் புண்ணாக்குவதற்கு :)))))))))) வாழ்த்துக்கள் ஜி :)))) பேயும் மனு நீதிச் சோழனும் அருமை !

    ReplyDelete
  6. அனைத்தையும் ரசித்தேன். மனுநீதிச்சோழன் நகைச்சுவை அருமை.

    ReplyDelete
  7. மனுநீதிச் சோழன் ....ஹஹஹஹஹஹ்

    ஐஸ் கணக்கு கரைஞ்சு போச்சே!!!

    ReplyDelete
  8. 01. இப்படி காலை வாரி விட்டவன் வீட்டில் போய் காலைப்பிடிக்க வேண்டியது வருமே... ?
    02. இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு பேரா ?
    03. பீச்ல சுண்டல் விற்றால் ? நிறைய கதைகள் எழுதலாமோ ?
    04. இது நீதியில பாதி கூட இல்லையே...

    ReplyDelete
  9. manavai jamesThu Aug 27, 12:49:00 a.m.
    நா சொன்னா நம்ப மாட்டேங்கிறீங்க...அவ்வளவு கருப்பா இருக்கீங்க...பேய் கருப்பு...!
    மனுநிதிச் சோழன்னு பேற மாத்த வேண்டியதுதானே...!
    இப்ப இவனுக்கு ஐஸ் வைச்சிட்டேன்...! நீ அவனுக்கு ஐஸ் வித்ததப் பத்தி பேசிப் பிரயோஜனம் இல்ல...! ஆகிறதப் பாரு...!
    தொண்ணூறுசதம் இந்தியர்கள் புத்திசாலிககளா இல்லாமல் இல்லை என்கிறறோ நீதிபதி ?
    Reply>>>
    பேயிலேயுமா கருப்பு ,சிகப்பு :)
    பதவிக்கு ஒரு மரியாதை இருந்தது ,இப்படி நாதி இல்லாமல் ஆக்கிவிட்டாரே :)
    அவன் குச்சி ஐஸ் கொடுத்தான் ,இவன் கோன் ஐஸ் கொடுக்கிறானா :)
    நீதிபதி பேசுறது பாதிதான் புரியுது :)

    ReplyDelete
  10. நம்பள்கிThu Aug 27, 02:47:00 a.m.
    [[[''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு

    ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''

    ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !'']]

    -------------தண்டை கொடுத்தால் மட்டும் போதுமா?
    அது சரி! எப்ப அந்த 'மனுநீதிச் சோழன' சிலையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து தூக்கப் போகிறீர்கள்!
    Reply>>>
    அதை எல்லோரும் பொம்மைன்னு தானே நினைச்சுக்கிட்டு இருக்காங்க :)

    ReplyDelete
  11. Nagendra BharathiThu Aug 27, 03:29:00 a.m.
    ஹா ஹா
    Reply>>>
    புத்திசாலிகள் பத்து சதம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா ஜி :)

    ReplyDelete
  12. சிரிப்பு வருது சிரிப்பு வருது!

    ReplyDelete
  13. ஸ்ரீராம்.Thu Aug 27, 05:55:00 a.m.
    ஆமாமாம்... ஒரு எழுத்துதானே வித்தியாசம்... ஆனாலும் அநியாயம்ங்க பேய்னு சொல்வது!
    Reply>>>
    சாத்தான் என்று வேண்டுமானால் மாற்றிக்கிறாராம் :)

    ReplyDelete
  14. மனுநீதி சோழன் பெயரைகொண்டவன் லஞ்சம் வாங்கின மாதிரி....மனு நீதி சோழன் சிலையை நிறுவி இருப்பவர்களும் நீதிப்படி நடக்க மாட்டுகிறார்களே..!!

    ReplyDelete
  15. கரந்தை ஜெயக்குமார்Thu Aug 27, 07:30:00 a.m.
    ரசித்தேன் நண்பரே
    Reply>>.
    இந்த மனுநீதிச் சோழனையுமா:)

    ReplyDelete
  16. சசிகலாThu Aug 27, 10:21:00 a.m.
    பேய் வருவதும் சிறப்பு மனுநீதி சோழனும் சிரிப்பு.
    Reply>>>
    நீதிபதி சொன்னதைப் படித்தால் வருவது வெறுப்பு :)

    ReplyDelete
  17. அம்பாளடியாள்Thu Aug 27, 11:14:00 a.m.
    அண்ணி அண்ணி இந்தாளோட எப்படித்தான் குடித்தனம் பண்ணுறீங்க ?..:))))))))
    Reply>>>.
    அண்ணி கிட்டே எதுக்கு இதைக் கேக்குறீங்க ?எனக்கு ,பேய்ன்னு எழுதுற தைரியம் மட்டும்தானே இருக்கு :)

    ReplyDelete
  18. Dr B JambulingamThu Aug 27, 01:35:00 p.m.
    அனைத்தையும் ரசித்தேன். மனுநீதிச்சோழன் நகைச்சுவை அருமை.
    Reply>..
    மனுநீதிச்சோழன் .... நகைச்சுவை அல்ல .உண்மையில் நடந்த சம்பவம் :)

    ReplyDelete
  19. சுவைத்தேன்!

    ReplyDelete
  20. Thulasidharan V ThillaiakathuThu Aug 27, 03:04:00 p.m.
    மனுநீதிச் சோழன் ....ஹஹஹஹஹஹ்
    ஐஸ் கணக்கு கரைஞ்சு போச்சே!!!
    reply>>>>
    காசைக் கொடுத்தால் அல்லவா கரையும் :)

    ReplyDelete
  21. KILLERGEE DevakottaiThu Aug 27, 05:29:00 p.m.
    01. இப்படி காலை வாரி விட்டவன் வீட்டில் போய் காலைப்பிடிக்க வேண்டியது வருமே... ?
    02. இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு பேரா ?
    03. பீச்ல சுண்டல் விற்றால் ? நிறைய கதைகள் எழுதலாமோ ?
    04. இது நீதியில பாதி கூட இல்லையே...
    Reply>>.
    பேய்க்கு ஏது கால் :)
    அதுவே அதிசயம் ,மாட்டிகிட்டது அதைவிட அதிசயம் :)
    சுண்டல் விற்பவன் கதை எழுதினால் அது கிண்டலாய் தான் இருக்கும் :)
    பாதியா,பத்தில் ஒரு பங்குதான் :)

    ReplyDelete
  22. சென்னை பித்தன்Thu Aug 27, 08:04:00 p.m.
    சிரிப்பு வருது சிரிப்பு வருது!
    Reply>>
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பார்க்க சிரிப்பு வரத்தான் செய்யும் :)

    ReplyDelete
  23. வலிப்போக்கன் -Thu Aug 27, 09:59:00 p.m.
    மனுநீதி சோழன் பெயரைகொண்டவன் லஞ்சம் வாங்கின மாதிரி....மனு நீதி சோழன் சிலையை நிறுவி இருப்பவர்களும் நீதிப்படி நடக்க மாட்டுகிறார்களே..!!
    Reply>>.
    இதைதான் நீதிதேவன் அரசாட்சி என்பார்கள் :)

    ReplyDelete
  24. புலவர் இராமாநுசம்Fri Aug 28, 11:33:00 a.m.
    சுவைத்தேன்!
    Reply>>
    சுவை தேன் சுவைக்கத்தானே செய்யும் :)

    ReplyDelete