தோழியின் அருமையான யோசனை :)
'' ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு நீ சொன்னது சரிதாண்டி !''
''பத்து வரைக்கும் எண்ணியிருப்பியா?''
''எட்டாவது அடியைக் கொடுக்கும் போதே என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!''
கோர்ட்டுக்கு போனாலும் அவர் வாதம் செல்லாது :)
'' கிழிஞ்சிருக்கிற என் சட்டை ,பனியனைப் பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்கணுமே !''
''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை எப்படி காட்ட முடியும் ?''
மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா இப்படித்தான் !
''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''

துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள் சொன்னால் ...
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !
மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !
|
|
Tweet |
01. வெவரமான புருஷன்....
ReplyDelete02. கௌரவமான மனைவி.
03. சரிதானே...
04. வாஜ்பாய் சொன்னாரோ...
அதான் எட்டடி வாங்கி இருக்காரா :)
Deleteஅடி விழும்போது சத்தம் வெளியே வரக்கூடாதுன்னு கட்டளை வேற :)
அதையும் ஞாயிறு அன்று பார்த்துக்கலாமே என்று கூட சொல்லுவார் :)
கர்மவீரர் சொல்லி இருக்கமாட்டாரா :)
ஜோக்குகள் அருமை
ReplyDeleteஅவரை ஊமைத்துரை என்றே சொல்லலாமா :)
Deleteதாய் எட்டடி பாஞ்சா... தெரியுமுல்ல...ஒன்பது அடிய தாங்க அவரால தாங்க முடியாதில்ல...! வீட்டுக்காரர் வாடகை கேட்டாரோ?
ReplyDeleteதலையில பேன்னு தொல்லை தாங்கமுடியல்லன்னா... மேனேஜரு ‘FAN‘னுக்கு கீழா ஒக்காந்திக்கிட்டு இவரோட தொல்லை தாங்கமுடில... சனியன் எப்பத்தான் போய் தொலையுமோ...? நீ தப்பா எடுத்துக்காத... பேன்ன சொன்னேன்...!
குடிநீரை பயன்படுத்தினாலும்... குடி குடியை கெடுத்தாலும் கூட...துணி துவைக்க நாமதான் உழைச் ..... சாகனும்-ன்னு தலைவருக்கு தெரியுமில்ல... பொழைக்கத் தெரிந்தவரு....!
நன்றி.
த.ம. 2
வாடகை கேட்டாலே இந்த அடியா :)
Deleteபுரியுது ,மனிதப் பேன் :)
ஆஹா ,என்னவொரு சிந்தனை :)
ஹா.....ஹா....ஹா.... பாவம் அவர்!
ReplyDeleteஐயோ பாவமே....
ஹிஹிஹி....
எட்டுஅடி தாங்கிற அவரா பாவம் :)
Deleteடெய்லி சிரிப்பு
ReplyDeleteஇன்றும் சிறப்பு.
தினமும் உங்கள் ஊக்கம்
Deleteதொடரும் எனது ஆக்கம் :)
யம்மாடியோவ் 8 அடி வரைக்கும் போச்சா ஜி எப்படி தாங்கினீங்க? !!! ஹஹஹஹ
ReplyDeleteஓ! ஊமை அடியா அதானே பார்த்தோம்....அப்ப என்ன 8 அடி இல்ல மேலேயே வாங்கலாம்...அஹ்ஹஹஹ்
தலைக்கு மேல ஹஹஹஹ்ஹ தலைக்கு மேல போனா 8 என்ன 10 என்ன ஹஹஹ என்ன ஜி
ஆமாமா துணி துவைக்கிற மாதிரி அடி வாங்கினா...திருமணமா ஹஹஹ்!!!! வேண்டவெ வேண்டாம்பாங்கதான்...
எல்லாமே ரொம்பவே லிங்க் ஆகுது...
நானெங்கே தாங்கினேன் ,கிரேட் எஸ்கேப் :)
Deleteஇதானே வேண்டாங்கிறது ,வாங்கினதை மறந்து ,வாங்கலாம்னு சொல்றீங்களே :)
தலைக்கு மேலே வந்தது தலைப் பாகையோடு போனதெல்லாம் அந்த காலம் :)
அதுக்குதானே ,தாலி கட்டாம வாழணும்னு சொல்றது :)
அடிதாங்கா கணவன்! ஐயோ பாவம்!
ReplyDeleteஎட்டு அடி வாங்கினவன் ஒரு அடிகூடவா திருப்பி தரலே :)
Deleteஎட்டு அடிவரைக்கும் தாங்கினாரே ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!
ReplyDeleteநீ கொடுத்ததே திருப்பித் தருவேன் எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணின்னு பாடித் தர வேண்டாமா :)
Deleteதலைவர்களுக்கு இத்தனை பொது சிந்தனை இருக்கோ!
ReplyDeleteGod Bless You
அந்த கால தலைவர்களை சொன்னேன் :)
Deleteஅருமை... ரசித்தேன் ஜி.
ReplyDeleteஇரும்புக் கை மாயாவியே அடி வாங்குவதை ரசிக்க முடியுதா :)
Delete