10 December 2016

பெண்களை திருப்திபடுத்த எப்படி முடிகிறதோ :)

பறக்கும்னா  தண்டவாளம் எதுக்கு :)         
           ''நாலு இடத்தை  சுற்றிப் பார்க்காமல் , நாள் முழுதும் ரயில்லேயே சுற்றிக்கிட்டே இருக்கீங்களே ,ஏன் ?''
           ''இது பறக்கும் ரயில்னு சொன்னாங்க ,எப்போ பறக்கும்னு தெரியலியே !''

இதுக்குத் தான் கால நேரம் முக்கியம்னு சொல்றது :)                            
            ''என்னங்க ,பெண் பார்க்க வர்றவங்களை சனி  அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்  வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
           '' டிவி சீரியல்களைப் பார்க்காம ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''

 'நளன் 'னா மனைவிகளுக்கு பிடிக்கத்தானே செய்யும் :)
             ''ரொம்ப கொடுத்து வைத்த பெண் தமயந்தி தானா ,ஏன் ?''
             ''ஒரிஜினல் நளபாக சாப்பாடு தமயந்திக்கு மட்டும்தானே கிடைத்தது ?''

ஓட்டு போடும் ஆர்வம் உண்மையில் கூடியிருக்கா :)
            ''நடந்த இடைத் தேர்தலில்  90சதம் ஓட்டு பதிவாகி இருந்தும் 'நோட்டா 'ஓட்டு மூவாயிரம் கூட விழலையே ,இதிலேர்ந்து என்ன  தெரியுது  ?''
           ''  ரூபா நோட்டை வாங்கும் ஆர்வம் கூடியிருக்குன்னு  தெரியுது !''

பெண்களை  திருப்திபடுத்த எப்படி முடிகிறதோ :)
''என்னங்க ,உங்க சலூன் முன் புறம் நாய்களாத் திரியுது ?''
''அடிக்கடி கட்டாகி விழுகிற காதுகளைத் தின்ன வந்திருக்கும் ,நீங்க தைரியமா உள்ளே வாங்க !''
இப்படி ஜோக் எழுத முடியாமல் செய்துவிட்டார் ...
இங்கிலாந்தை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் டயானாகெண்டல் என்ற பெண்மணி ...
இவரது பார்வை சுத்தமாக பறிபோன நிலையிலும் ...
நாற்பது வருட அனுபவத்தில் சிகை அலங்கார வேலையை சரியாக செய்து வருகிறாராம் ...
வாடிக்கையாளர்களும் இவரது துணிச்சலையும் ,விடாமுயற்சியையும் பாராட்டி ...
தொடர்ந்து ஆதரவு கொடுக்கிறார்களாம் ...
இங்கே நம் பெண்களுக்கு ...
இப்படி பார்வை இழந்த ஒருவர் சிகை அலங்காரம் செய்து திருப்தி படுத்தி விட முடியுமா ?

16 comments:

  1. பறக்கும் இரயில் பறக்கும்... அது பறந்தோடி வரும்... எதித்த மாதிரி இரயில் வந்து மோதினாத்தான் பறக்குமாம்...!

    அழுது வடியாம இருந்தாலும் அழகா இருக்குமாக்கும்...!

    பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது... அய்யா பொறந்து விட்டா சமைச்சுப் போடுறத நினைக்க கூடாது...!

    காசு பணம் துட்டு மணி மணி... காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!- இடைத் தேர்தலில் எடைபோடும் தேர்தல்...!

    காது கொடுத்து விட்டுக் கேட்டால் சிகை அலங்கார நிபுணரிடம்... ஆஹா குவா குவா சத்தம்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,நேற்றுகூட வட மாநிலத்தில் பறந்து நூற்றுக்கணக்காணோர் பலியாகி உள்ளனரே ,இப்படித்தானா பறப்பது :)

      எப்பத்தானையா அழகாயிருக்கும் :)

      சமைச்சு போடுறதை சாப்பிடுறது மட்டும் நியாயமா :)

      எந்த கட்சி எவ்வளவு தருதுன்னு எடை போடும் தேர்தலா :)

      தப்பாச்சே , இப்படி மனைவி அல்லாதவரின் வயிற்றில் காதை வைத்து கேட்பது :)

      Delete
  2. Replies
    1. எந்த மொழியில் சொன்னாலும் புரிகிறது ,அது ' ஓகே'தானே :)

      Delete
  3. Replies
    1. ஒரிஜினல் நளபாக சாப்பாடு அருமைதானே :)

      Delete
  4. முதல் ஜோக்கே டாப். அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. டாப்பில் உள்ளதுதானா டாப் :)

      Delete
  5. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் பறக்கும் ரயில் டெல்லியிலாவது இருக்கா ஜி :)

      Delete
  6. நல்ல,
    நல்ல,
    நல்ல
    ஜோக்குகள்...

    ReplyDelete
    Replies
    1. என் ஞாபகம் சரிஎன்றால், இந்த வருஷத்தின் ஆரமபத்தில் போட்ட கருத்துக்கு பின் இப்போதுதான் போட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன் ,நன்றி :)

      Delete
  7. நானும் காத்திருக்கேன் பறக்கும் இரயிலுக்காக

    ReplyDelete
    Replies
    1. வரும் ஆனா வராது :)

      Delete
  8. பறக்கும் ரயில் வானில் இருக்கிறது!!!!!!

    அனைத்தையும் ரசித்தோம் ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. அதை போய் ஏர் பஸ் என்கிறார்களே :)

      Delete