20 December 2016

முதல் இரவிலே இந்த யோசனையா :)

நாட்டிலே இரண்டு சிபிஐ இருக்கு :)      
             ''அதிசய செய்தியா இருக்கே ,சிபிஐ ஊழியர்களை சிபிஐ யே கைது பண்ணியிருக்கா ,ஏன் ?''
           ''central bank of india (CBI) ஊழியர்கள் இரண்டு பேர் செல்லாத ரூபாய் நோட்டுக்களை வாங்கிட்டு dd கொடுத்து இருப்பதை ,
Central Bureau of Investigation (CBI)அதிகாரிகள் கண்டுபிடித்து கைது பண்ணிட்டாங்களாம் !''

முதல் இரவிலே இந்த யோசனையா :)
              ''முதல் இரவும் அதுவுமா ,முதல் காரியமா நம்ம ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தர் பெயரை  அவசியம் மாற்றிக்கணும்னு சொல்றீயே  ,ஏன் ?'' 
             ''ஆமாங்க, Mohanங்கிறது உங்க பெயர் , என் பெயர் Nalini,இரண்டின்  முதல் எழுத்தையும் சொல்லும் போது 'எமன் 'மாதிரி இருக்கே !''
மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிக்கும் :)
            ''ஒண்ணா சாப்பிடுறதை காக்காகிட்டே  இருந்து  மனுசங்க கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
           ''மனுசங்களைப் பார்த்து அது கத்துக்கிச்சோ என்னவோ ?''

கரெண்ட் கட் நேரத்திலே யோசிச்சது  :)
            ''ஆந்தைக் கண்களை எடுத்து மனுசனுக்கு வைக்க முடிஞ்சா நல்லதுன்னு சொல்றீங்களே ,ஏன்?''
            '' இருட்டிலே  பார்க்க முடியுமே !''

ஏட்டையா ஓடினார் என்பதேயே நம்ப முடியலே :)                      
          ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
           ''நல்ல வேளை.தொப்பை இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
பேங்க் பாலன்சை சொல்லலீங்க:)
    கயிற்றின் மேல்  அடி மேல் அடி வைத்து 
    கழைக் கூத்தாடி  கற்று தந்தான் ...
    'பாலன்ஸ் 'வந்தால் பயம் போய்விடுமென்று !

22 comments:

  1. தமிழ்மணம் ஏன் அடிக்கடி தலைப்பில்லாமல் பதிவை வெளியிட்டு சோதிக்கிறது என்றே தெரியவில்லையே :)

    ReplyDelete
    Replies
    1. வலையுலக உறவுகளே ,உங்களுக்கும் அடிக்கடி ஏற்படுவதுண்டுதானே:)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.
    தலைப்பு இருக்கே ஜி?

    ReplyDelete
    Replies
    1. அந்த தலைப்புதான் தமிழ்மணத்துக்கு பிடிக்கவில்லையோ :)

      Delete
  3. சி.பி.ஐ. பார்ட்டி இதை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது...!

    எமன் பாசக்கயிற்றை வீசுறான் போல இருக்கே...!

    காக்கா கூட்டத்த பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்தது யாருன்னு இப்ப தெரிஞ்சு போச்சா...?!

    ஆந்தைக் கண்களை இருட்டில் மட்டும் வைத்துக் கொள்ள முடியுமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்...!

    நல்ல வேளை மீசை இல்ல...!

    'பாலன்ஸ் 'வந்தால் பயம்தான் வருது... யாரு கதவைத் தட்டுறது...? என்ன வருமான வரித்துறையா...?!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. கட்சி பெயர் தமிழில் சிபிஐ ஆனாலும் ,ஆங்கிலத்தில் அது cpi ஆச்சே :)

      முதல் நாள் இரவிலேயேவா :)

      மனுஷன் கிட்டே வேறெதைக் கற்றுக்கும்:)

      பூனைக் கண்ணே பெட்டர் ,எல்லா நேரத்துக்கும் ஓகே :)

      மீசை இருந்திருந்தா மண் ஒட்டியிருக்குமா :)

      மடியிலே கனமில்லேன்னா வழியிலே பயமிருக்காதே :)

      Delete
  4. ''……………….இரண்டின் முதல் எழுத்தையும் சொல்லும் போது 'எமன் 'மாதிரி இருக்கே !''
    அரசியல் பேசாதீங்க!!! இன்றைய காலகட்டத்தில் “MN” என்றால் (சசிகலா) நடராசன் தான்!!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த 'நடராஜன் 'அம்பலத்துக்கு வருவ'தில்லை'யே :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    தொப்பையும் ஒரு பாதுகாப்புத்தான்...
    பறைவகள் இடத்தில் நல்ல பழக்கவழக்கங்களை கற்க வேண்டும் மனிதன்... அற்புதமான நகைச்சுவை வாழ்த்துக்கள் ஜி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இவர் தன்னைத்தானே நல்லா பாதுக்காத்துக்கிறார் :)

      பறவையைப் பார்த்தான் விமானம் படைத்தான் , இப்போ பறவை விமான ஃபேனில் மோதி சேதத்தை ஏற்படுத்துதே :)

      Delete
  6. Replies
    1. மனுஷன் 'காக்கா ' பிடிச்சா ,காக்கா எதைப் பிடிக்கும் ?,நியாயமான கேள்விதானே :)

      Delete
  7. தொப்பை எப்படியெல்லாம் உதவுகிறது...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. கடமைக்கு உதவவில்லையே :)

      Delete
  8. முதல் ஜோக்கிலேயே பயமுறுத்தி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. இப்போது வந்த செய்தி ....cbi பாங்கில் முறைகேடாக கடன் வழங்கிய மேலாளருக்கு அபராதம் +ஐந்தாண்டு சிறை தண்டனையாம் !வெளியே பயிரை மேய்கிறதே :)

      Delete
  9. Replies
    1. புதுக்கோட்டைக்கு நானும் வந்திருந்தால் உங்களை சந்தித்து இருக்கலாம் ,முடியாமல் போச்சே :)

      Delete
  10. இதற்குத்தான் எதையும் முழுவதும் படிக்க வேண்டும் என்று சொல்வது
    எனக்கு MN என்றால் நம்பியார் ஞாபகம்தான் வரும்
    காக்கா மனுசனைப் படிக்கும் (புடிக்கும் )
    சிலருக்கு இருட்டிலும் கண் குருடர்கள் இருட்டில் புழங்குகிறார்களே
    ஏட்டையா ஓடினாரா விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையா
    பாலன்ஸ் இருந்தால் கூடுதல் பயம் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனைதான் :)
      உங்க வயசுக்கு mn ராஜம் நினைவுக்கு வரணுமே :)
      நாம பிடிப்போம் ,அது படிக்கும் :)
      அவர்கள் எப்போதும் வெளிச்சத்தைப் பார்க்காதவர்கள் ஆச்சே :)
      மீசையே இல்லையே எப்படி ஓட்டும் :)
      பயம் போனால் பாலன்ஸ் வருமே :)

      Delete
  11. அடேங்கப்பா..முதல் இரவிலே..எம்புட்டு அறிவு...........!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. எமன் என்ன செய்யுமோ என்ற பயம்தான் :)

      Delete