6 December 2016

கவனம் எல்லாம் சேலையில் இருந்தால் :)

சினிமா படம் போடும் முன் , தேசிய கீதம் போட உச்ச நீதிமன்றம் உத்தரவு :)     
        ''மப்பிலே இருக்கும் போது படம் பார்த்தியான்னு ஏன் கேட்கிறே ?''
        ''படம் போடுற முன்னாடி போட்ட பாட்டு மட்டும்தான்  நல்லாயிருந்ததுன்னு சொல்றீயே !''

கால் சென்டர் பெண்ணைக்  கட்டிக்கிட்டவன் பாடு :)          
           ''எனக்கு  கணவன் ஆனதுக்கு பதிலா ,கஸ்டமராவே  இருந்திருக்கலாம்னு ஏன் சொல்றீங்க ?''
           ''கஸ்டமருக்கு  மட்டும்தானே உன்னாலே  பொறுமையா பதில்  சொல்ல முடியுது  ?''
வாலிப வயதை அறிந்த தந்தை  :)
            ''என்னங்க .நம்ம பையன் வேலையை  தேடிக்காம , பத்மாவையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்கான் ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
           ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''

கணவனின் காதில் விழுவதும் ,விழாததும்:)
           ''பசி மயக்கத்தில் காது கேக்காதுன்னு சொல்றதிலே ,உண்மையில்லேன்னு எப்படி சொல்றே ?''
           ''வெங்காயம் நறுக்குங்க என்று சொன்னா , கேட்காத உங்க காதுக்கு ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேட்குதே !''

கவனம் எல்லாம் சேலையில்  இருந்தால்  :)
நாம் விரும்புகின்ற ஒன்றில் மனம்  லயித்துப் போகும்போது ...
நம்மை நாமே இழந்து விடுகிறோம் ...
இது காதலில் வேண்டுமானால் சுகமாய் இருக்கலாம் ...
மற்ற விசயங்களில் துக்கத்தைத்தான் தரும் என்பதற்கு உதாரணம் இதோ ...
நேற்றைய தினம்...
மாமியாரும் ,மருமகளும் சேலை வாங்க மதுரையில் புகழ்பெற்ற ஒரு கடைக்கு சென்றுள்ளார்கள் ...
ஒன்றரை மணி நேரம் சேலைகளில் மனம் லயித்து ...
'பெரும் புதை பொருள் ஆராய்ச்சி செய்து'
சேலையை செலக்ட் செய்து பில் வாங்கி ...
கவுண்டருக்கு சென்று சோல்டர் பேக்கை திறந்து பார்த்தால் பர்சைக் காணவில்லை ...
கடை உரிமையாளரிடம் விபரத்தைச் சொல்லி ...
cctvகேமரா பதிவுகளைப் பார்த்தால் அதிர்ச்சி தரும் காட்சி விரிந்தது ...
எட்டு வயது பெண் குழந்தை சோல்டர் பேக்கை திறந்து பர்சை எடுத்து அருகில் இருந்த அவள் அம்மாவின் கையில் கொடுக்கிறது ...
பெரும் பாடுபட்டு சம்பாதித்த பணத்துடன் அவர்கள் உடனே எஸ்கேப் ஆவதும் தெரிகிறது ...
திருடப் பட்ட பர்சில் 'செல்'லும் இருந்ததால் உடனே தொடர்பு கொண்டபோது  ...
சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது ...
நொந்து நூலாகி வீட்டிற்குச் செல்ல டூ வீலர் சாவியை தேடினால் ...
பர்சோடு சாவியும் போனது தெரிந்தது ...
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ...
டூப்ளிகேட் சாவிக்கும் இருநூறு அழுது தொலைத்துள்ளார்கள் ...
இவையெல்லாம் மனம் சேலையில் மட்டுமே லயித்ததால் வந்த வினைதானே ?

16 comments:

  1. கஸ்டமர் கேரில் பொறுமையாக பதில் சொல்லுகிறார்களா ஆமாம் அது எந்த நாட்டில்?

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்டிலேதான் !நம்ம ஆத்திரத்தை எல்லாம் அவர்களிடம் கொட்டினாலும் ,வேறு வழியில்லாமல் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களே :)

      Delete
  2. Replies
    1. அந்த கணவன் காதில் விழுவதையும்தானே:)

      Delete
  3. முன்பெல்லாம் திரைப்படம் முடிந்த உடனே தேசீய கீதம் ஒலிக்கப்படும் அனைவரும் மரியாதை செலுத்துவர்
    கால் செண்டர் பெண்ணைக் கட்டினதால் கஷ்டமராகி விட்டாரோ
    வெளிநாடு என்றால் செக்கஸ்லோவியாவா
    பசிமயக்கத்துக்குப் பதில் நன்கு கேட்குமே
    நூதனத் திருட்டு

    ReplyDelete
    Replies
    1. இப்போது யாரும் நின்று மரியாதை தருவதில்லை என்று முதலில் தேசியகீதம் ஒலிக்கப் பட இருக்கிறது :)
      இஷ்டப் பட்டு கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறார் :)
      செக் அதில்தானே இருக்கு :)
      பசி, காதை அடைக்கும் என்பார்களே :)
      எட்டு வயதில் இருந்தே திருடப் பழகச் சொல்லிக் கொடுப்பதுதான் கொடுமை :)

      Delete
  4. சேலையை தேர்வு செய்யும்போது உலகத்தையே மறந்து விடுவார்கள் போலிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. பெண்கள்தான் அப்படியென்றால், ஜொள்ளர்கள் சேலையைக் கண்டாலே உலகத்தை மறந்து விடுகிறார்களே ஜி :)

      Delete
  5. பாட்டு நல்லாத்தான் இருந்துச்சு... தமிழ் பாட்டு மாதிரி தெரியலையே...!

    கஸ்டமர் கேர்தான்... எனக்கு கஷ்ட காலம்தான்...!

    பத்மா மாசமாம்...!

    காயமே இது பொய்யடா...!

    பழம் நழுவிப் பாலில் விழ அது நழுவித் தேனில் விழுந்த கதையால்ல இருக்கு... எட்டு வயது பெண் குழந்தைக்கு எல்லாம் எட்டும் வயது...!





    ReplyDelete
    Replies
    1. மப்பில் இருந்ததால் அவருக்கு மொழி கூட புரியவில்லை :)

      கஸ்டமருக்கு உள்ள மரியாதைக் கூட கணவனுக்கு இல்லையே :)

      பயபிள்ளே பத்மாசனத்தில் இருக்கும் போதே சந்தேகப் பட்டேன் :)

      பொய்யான காயம் வழி தருதே :)

      இந்த கதை, சோக கதையாய் இருக்கே :)

      Delete
  6. காரியத்தில் கண் வைய்யடா“ ன்னு..பாடி இருக்காரே..........

    ReplyDelete
    Replies
    1. திருடுறவங்க காரியத்தில் கண்ணாத்தான் இருக்காங்க :)

      Delete
  7. Replies
    1. தேசிய கீதம் கேட்பதற்கு அருமைதானே :)

      Delete
  8. என்னது திரைப்படம் தொடக்கத்திலேயே தேசீய கீதமா...முன்பெல்லாம் இறுதியில்தானே போடுவார்கள்..

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இனி எழுந்து நிற்பார்களா நம் மக்கள் :)

      Delete