16 December 2016

தாவணிக் கனவு ,மதிப்பெண்களைக் குறைக்குமா :)

எங்களால் முடிந்தது அவ்வளவுதான்  என்றுதானே அர்த்தம் :)          
            '' அந்த ஆஸ்பத்திரியில்தான் சேர்க்கணும்னு ஏன் பிடிவாதமா இருக்கீங்க ?''
            ''வேறெந்த ஆஸ்பத்திரி  டாக்டராவது 'நோயாளி  ,அவங்க இஷ்டப்படி  எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்குப் போகலாம்'னு சொல்லி இருக்காங்களா ?''

நல்ல வேளை,படிச்சு கிழிச்சது போதும்னு சொல்லலே :)                    
           ''உங்க சின்னப் பெண் ,உங்க ஜாதிக்கார காலேஜில் மட்டுமே சேர்க்கணும்னு  பிடிவாதமா இருக்கீங்களே ,ஏன் ?''
          ''வேற காலேஜில் படித்த மூத்த பொண்ணு ,வேற ஜாதிக்கார பயலோடு ஓடிப் போயிட்டாளே !''

இந்த சட்டத்தால் போலீசுக்கு நிம்மதி :)           
           ''இப்போதெல்லாம் யாரும் செல்போன் டவரில் ஏறி  கீழே குதிக்கப் போறேன்னு  மிரட்டுற மாதிரி தெரியலையே ,ஏன் ?''
            ''தற்கொலைப் பண்ணிக்கிறது  சட்டப்படி தவறில்லை  என்று சட்டம்  வந்திருச்சே !''

ஊழியரின் மனைவி நலத்தையும் யோசிக்கும் HRO :)
             ''எவரி நைட் டூட்டிக்கு வர்றேன்னு சொல்றவரை,எதுக்கு செக்சாலஜிஸ்ட் டாக்டரைப் பார்க்கச் சொல்றீங்க ?''
              ''அவனுக்கு போன மாசம்தான் கல்யாணமாச்சு !''

தாவணிக் கனவு ,மதிப்பெண்களைக்   குறைக்குமா :)
             ''நம்ம பையன்  பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே உங்களுக்குத்  தெரியும்னா, என்ன தெரியும் ?''
             ''அவன் மதி முழுதும் பெண்கள்னா, தேர்விலே  மதிப்பெண்கள் வரப்போறதில்லைன்னு தான் !''


20 comments:

  1. வீட்டுக்குப் போகலாம்ன்னா... அப்பவே புரிஞ்சிக்கிறது இல்லையா... நாங்க எழுந்து நடமாடவே விடமாட்டமுன்னு...!

    ஜாதிகள் இல்லையடி பாப்பாங்கிற பாடல்தான் பாப்பா மனசுல பதிஞ்சதாம்...!

    அதனால் செல்போன் டவரில் போலீஸ் ஏறி... ஆளைக் கீழே தள்ளி விடுறாங்களா...?!

    அவருக்கு மாலை கண்ணாம்... பகலில் ஓர் இரவு...!

    மதிகெட்டுப் பேசாதிங்க... கொஞ்சமாவது பையன மதிங்க... அவன் நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகனா... மதிமுகமான பொண்ணப் பாத்து செலக்ட் பண்ணணுமுன்னு அலையா அலையிறான்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. கை விட்டாச்சு என்பதை நாசூக்கா சொன்னா எத்தனைப் பேருக்கு புரியுது :)

      நல்லது ,வாழையடி வாழையா இதுவே தொடரட்டும் :)

      மதுவுக்கு எதிரா டவர்லே ஏறி போராடியவரின் வாழ்க்கையும் இப்படித்தானே முடிந்தது :(

      ஓர் இரவு மட்டுமில்லே ,எல்லா இரவும் அப்படித்தான் :)

      அலைச்சல் சீக்கிரம் முடிவுக்கு வந்தால் நல்லது :)

      Delete
  2. மதிப்பெண்கள் நகைச்சுவை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. படிக்கின்ற வயதில் மதிப்பெண் முக்கியமில்லையா :)

      Delete
  3. Replies
    1. வண்ணப்பூக்கள் அருமைதானே :)

      Delete
  4. Replies
    1. எல்லோருக்கும் புரியும்வண்ணம் super ன்னு சொன்னதுக்கு நன்றி :)

      Delete
  5. எந்த மதிப்பெண் என்று தெரியவில்லையே.......

    ReplyDelete
    Replies
    1. பெண்ணைப் பார்த்து மார்க் போடும் வயதில் எழுதும் தேர்வு மதிப்பெண்தான் :)

      Delete
  6. ரசித்தேன்.
    த ம 6

    ReplyDelete
    Replies

    1. தாவணிக் கனவுகள் சுகமானவைதானே:)

      Delete
  7. Replies
    1. நோயாளி ,அவங்க இஷ்டப்படி எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்குப் போகலாம்'னு சொல்ற டாக்டர் நல்ல டாக்டர்தானே :)

      Delete
  8. ஆனால் இஷ்டப்படி வீட்டுக்கும் போக முடிவதில்லையே
    ஜாதிபார்த்து திருமணம் செய்விக்கும் போது ஜாதி பார்த்துக் காதலிக்க அனுமதியும் முன்னேற்றம்தானே
    இந்தமாதிரிப் புலி வருதுன்னா யாரும் கவலைப்பட மாட்டாங்க
    அவரது பிரச்சனை தெரியாமல் டாக்டரிடம் போகச் சொல்வது சரியா
    பரிட்சை எழுதும்போது கலர் கலராகவே எல்லாம் தெரியுமாம்

    ReplyDelete
    Replies
    1. போக முடிந்தவர்களை டாக்டர் சொல்வதில்லையே :)
      நல்ல முன்னேற்றம்தான் :)
      ஆனால் கூட்டம் மட்டும் கூடிறது ,வேடிக்கைப் பார்க்க :)
      இந்த பிரச்சினை ,செக்சாலஜிஸ்ட் டாக்டர்தான் தீர்க்க முடியும் :)
      தேர்வு முடிவு ,கருப்பு வெள்ளையா தெரியுதே :)

      Delete
  9. Replies
    1. ஈஸ்ட்மேன் கலர் படமும் அருமைதானே :)

      Delete
  10. மதி முழுவதும் பெண்கள்! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி இருந்தால் தேறுவானா:)

      Delete