21 December 2016

நிம்மதி வேணும்னா,சின்ன வீடா :)

ஓவியமா வரையும் அளவுக்கு ,தலைவர் ஓவியமா :)            
              ''தலைவரே ,உங்களை கஷ்டப்பட்டு ஓவியமா வரைஞ்சிருக்கேன் ,அதிலே கோழி கிறுக்கின மாதிரி கையெழுத்து போடுறீங்களே ,வருத்தமாயிருக்கு !''
              ''கொரில்லா மாதிரி என்னை வரைஞ்சிருக்கீங்க ,நான் வருத்தப் பட்டேனா ?''

அதெல்லாம் மனுஷனுக்கு மட்டும்தானே :)              
            ''அவர் போலி கால்நடை டாக்டர்ன்னு  எப்படி தெரிஞ்சுது ?''
             ''இங்கு, மாட்டுக்கு  இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப் படும்னு  எழுதி போட்டு இருந்தாராம் !''

FM ரேடியோவை மனைவியும் கேட்டதால் வந்த வினை !
             '' உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா ,என்னடா சொல்றே  ?''
              ''FM ரேடியோவிலே 'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !''

பொண்ணு மாப்பிள்ளை மட்டும் பொருத்தமில்லை ...:)
            ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
            ''என்ன அப்படி கேட்டுட்டீங்க , மாசமானா பையனோட அப்பா  நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

15 comments:

  1. அச்சு அசலா வரைந்திருக்கிறேன் தலைவரே...!

    இதய (ஏ)மாற்று அறுவை சிகிச்சை செய்யப் படும்னு யாரோ எழுதிப் போட்டு மாட்ட விட்டிட்டாங்க...!

    இதுக்குத்தான் உண்மையே பேசக் கூடாதிங்கிறது...! இப்ப நிம்மதி இழந்து நிக்கிறீங்க...!

    பொண்ணு மாசமானா நீங்க வாங்கின மாமூல திருப்பி வாங்கிடுவார்னு சொல்லுங்க...!

    த.ம. 1







    ReplyDelete
    Replies
    1. கஷ்டப் பட்டிருக்கவே வேண்டாம் ,கொரில்லாப் படத்தையே கொண்டு வந்திருக்கலாம் :)

      போலி டாக்டருக்கு உண்மையான விளம்பரம்தான் :)

      நிம்மதிக்கும் ஆயிரம் பொய் சொல்லலாமா :)

      இது நல்ல டீலா இருக்கே :)

      Delete
  2. முதல் ஜோக் நிஜத்தில் நடந்த சம்பவம். வரைந்தவர் மறைந்த கவிஞர் வாலி. வரையப்பட்டவர் ராஜாஜி. கடைசி ஜோக் மாமூலான ஜோக்!!!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்ன்னீர்கள் ,அதோட உல்டாதான் இது :)

      Delete
  3. நிம்மதி வேணும்னா நீங்க எங்கே போவீங்க ஜி...? ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. சின்ன வீட்டுக்குத்தான் ,அந்த சின்ன வீட்டின் பெயர் 'ஜோக்காளி':)

      Delete
  4. இருப்பதைத்தானே வரைய முடியும்
    ஆமாம் மாட்டுக்கு இதய மாற்று சிகிச்சை தேவைப்படாதா
    பகலில் பக்கம்பார்த்துப் பேசணும்
    மாமூல் கொடுத்துக் கொடுத்து மாமியார் வீட்டுக்கு ஜாகை மாறாதிருந்தால் சரி

    ReplyDelete
    Replies
    1. இருப்பதை வரைந்தால் தலைவருக்கே பிடிக்கலையே :)
      இதுவரை செய்ததாக தெரியவில்லை :)
      பண்பலையில் பேசும்போது இன்னும் அதிகம் ஜாக்கிரதை தேவை:)
      ஜாகை மாறாமல் இருக்கத்தானே மாமூல் :)

      Delete
  5. FM ரேடியோ ஜாக்கி கூட ஜாக்கிரதையாய் பேச வேண்டும் தானே :)

    ReplyDelete
  6. Replies
    1. எப்போ லேப் டாப் மூலமா கருத்தைச் சொல்லப் போறீங்க ஜி :)

      Delete
  7. சின்ன வீட்டிலேயேயும் சின்ன பிரச்சினை இருக்கும் என்பதை மறந்து சொல்லித் தொலைச்சிருப்பார்...

    ReplyDelete
    Replies
    1. கோவிலுக்குப் போவேன்னு பொய்யைச் சொல்லி மறைக்கத் தெரியாதவருக்கு இது தேவைதான் :)

      Delete
  8. போலிக் கால்நடை டாக்டர்ன்னா
    அப்படித்தாங்க

    ReplyDelete
    Replies
    1. போலிகள் நிறைந்த உலகமாய் போச்சே :)

      Delete