29 December 2016

இப்படி பயந்தால் மனைவியோட காலம் தள்ள முடியுமா :)

இந்தியாவிலே முதல் முறையாக என்று சொல்லி ஏமாற்றலாமா :)
         ''தலைவர் ஏன் அந்த மாவட்டச் செயலாளரை கட்சியை விட்டு நீக்கிட்டார் ?''
         ''புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு மாலைன்னு சொல்லி, ஜெராக்ஸ் நோட்டு மாலைப் போட்டு ஏமாற்றி விட்டாராமே !''

இது ஜோக்கில்லே ,உண்மை :)            
          ''இனி மேல்  அதிர்ச்சியான விஷயங்களை  உங்க கணவரிடம் சொல்லவே கூடாது ,சரியா ?''
          ''நீங்க அவருக்கு போட்ட ஒரு ஊசியின் விலையே ஐம்பதாயிரம் ரூபாய் என்பதைக் கூடவா ,டாக்டர் ?''

மனைவிக்கு வரக் கூடாத சந்தேகம் :)           
         ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
           ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

இப்படி பயந்தால் மனைவியோட காலம் தள்ள முடியுமா :)
              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்குக் கூட கூட்டிட்டுப் போக  மாட்டேங்கிறாரே !''
இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் :)
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''

இரண்டு  கொள்ளைக்கும்  வித்தியாசம் அதிகமில்லை :)
     திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
     திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !

32 comments:

  1. ஹா... ஹா....ஹா... கலர் ஜெராக்ஸா!

    50,000 ரூபாய்க்கு ஒரு ஊசியா!

    கட்டாம வச்சிக்கிட்டிருந்த பிளாட்டைக் கட்டி அதுல யாரைக் குடி வைப்பாரோ!

    ஒருவேளை இது மத சம்பந்தமான ஜோக்கோ!!!

    இதுதான் கொள்"கை"ப் பிடிப்பா!

    தத்துவம் நம்பர்...?

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் நோட்டும் ஜெராக்ஸ் மாதிரிதானே இருக்கு :)

      இது பொய்இல்லை ,உண்மைதான் ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் ஊசி விலைதான் இது:)

      வில்லங்க சொத்தா இருக்கும் போலிருக்கே :)

      கோவில் யானைக்கு மதம் பிடித்தால் மக்கள் தெறித்து ஓடுவதால் இப்படி சொல்றீங்களா :)

      இடுப்பு பிடிப்புன்னு கேள்வி பட்டிருக்கேன் ,அதென்ன கொள்கைப் பிடிப்பு :)

      ஐந்நூறு கோடின்னு வச்சுக்கலாமா :)

      Delete
  2. போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே //

    கேட்டவர் ‘நண்பி’யாக இருந்திருந்தால்.....?

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் தப்பிக்கவே முடியாது போயிருக்கும் :)

      Delete
  3. பல உண்மைகளை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டிய காலம் இது... சரி தானே ஜி...?

    ReplyDelete
    Replies
    1. வேற வழி ?டென்ஷன் ஆனால் உடல்நலம்தான் பாதிக்கப் படும் :)

      Delete
  4. கள்ள நோட்டுதான் உடனே அடிக்க முடியாது என்பதால்தான்... கொஞ்சம் பொறுத்துக்கங்க...!

    இது என்ன ஜுசிபி... இதுக்கு மேல இருக்கு... பாக்கத்தானே போறிங்க...!

    வாங்கிப் போட்டிருக்கிற சின்னவீடு பிளாட்... நல்ல வேளை உன் பேருல்ல வாங்கல... எல்லாம் சின்ன அம்மா பேருலதான் பினாமியா...வாங்கிப்போட்டு இருக்கேன்...நீ அதுக்காக சுனாமியா மாறிடாதே...!

    அவருக்கு மொதல்ல மதம் பிடிக்காம பார்த்துக்கங்க...! என்ன பிளிறிற சத்தம் கேக்குது....? என்னடா சத்தம்...?

    கைக்கு கண் இருக்குங்கிறதக் கண்டு புடுச்சிட்டிங்களே...!

    பணமதிப்பிழக்கச் செய்வதும் திட்டம்தான்... மதிப்பு இழக்குமா... மதிப்பு கூடுமா... பொறு மனமே... பொறு...!

    த.ம. 4





    ReplyDelete
    Replies
    1. நல்ல நோட்டை அடிக்கவே அரசாங்கம் திணறிக்கிட்டு இருக்கே :)

      நாங்க யாரு ,பொணத்துக்கே வைத்தியம் பார்க்கிறவங்களாச்சே:)

      பிளாட்டை மட்டும்தான் ரிஜிஸ்டர் பண்ணியிருக்கீங்களா ,இல்லே ......:)

      இப்படி புருசன்காரன் அநியாயம் பண்ணினா ,பெண்டாட்டிக்கு வேணா மதம் பிடிக்கலாம் :)

      சுவருக்கு காது இருக்கும் போது கைக்கு கண் இருக்காதா :)

      பெட்ரோல் விலையை மட்டும் குறைக்கட்டும் பார்க்கலாம்,இவர்களின் திறமையை :)

      Delete
  5. எல்லாம் நயம் பட உரைத்தல். ஐநூறு ரூபாய் ஆட்டுக் கறிக்குப் பதில் ஐந்து ரூபாய் பரங்கி கீற்று. எல்லாம் சுவைதான்.கெ ாழுப்பு குறையும் (செலவும்தான்)

    ReplyDelete
    Replies
    1. சக்திவேல் ஜி ,உங்க கருத்து திசை மாறிய பறவையாய் இங்கே வந்த மாதிரியிருக்கே :)

      Delete
  6. மனைவிக்கு வரக் கூடாத சந்தேகம்
    அது தான்
    அழகாயிருக்கே

    ReplyDelete
    Replies
    1. இப்படி சந்தேகப் படும்படி கணவன் நடந்துக்கிறது அழகாவா இருக்கு:)

      Delete
  7. Replies
    1. இந்தியாவிலேயே முதல் முறையாக புதிய இரண்டாயிரம் நோட்டு மாலை என்று சொல்லி ஏமாற்றியதும்,சூப்பர்தானா:)

      Delete
  8. 2000ஜெராக்ஸா ஹஹஹஹ்ஹ

    யம்மாடியோவ் ஊசி விலை இம்புட்டா....

    அரசியல்வாதி சூப்பர்..

    அனைத்தும் ரசித்தோம்...ஜி

    ReplyDelete
    Replies
    1. தலைவரையே ஏமாற்ற நினைக்கிறானே ,இவனெல்லாம் தொண்டனா :)

      விலையைக் கேட்டாலே ஊசி போட்டமாதிரி 'சுருக்'குன்னு வலிக்குதே :)

      கொள்ளை அடிக்கத் தானே அரசியலுக்கு வருகிறார்கள்:)

      Delete
  9. தத்துவம் கூட சிரிப்பா,, அனைத்தும் அருமை ஜீ,,

    ReplyDelete
  10. வணக்கம்
    சொல்லிய கருத்துக்கள் நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை நிறைந்தவை

    ReplyDelete
  11. அந்தமாதிரி நோட்டுகள் ban என்று கூடத்தெரியாதா கட்சியை விட்டு மட்டும்தானே நீக்கினார். மாமியார் வீட்டுக்கு அனுப்பலியே
    அதிர்ச்சியான சொற்கள் மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும்
    போனை ஸ்பீக்கரிலா வைத்திருந்தார்
    இது எங்கோ படித்தமாதிரி இருக்கே
    வலது கை கொடுப்பதை இடது கை தடுத்து விடுமோ
    இரண்டு விதத்திலும் கொள்ளை கொடுப்பவர்கள் சாமானியர்களே

    ReplyDelete
  12. அருமையான இருக்கிறது

    ReplyDelete
  13. அருமையான இருக்கிறது

    ReplyDelete
  14. நல்ல கொள்கை பிடிப்பு ,தலைவரை ஏமாத்தினா சும்மாவா? ,அரசியல் வியாதி டீலிங் ரொம்ப... பிடிச்சிருக்கு :)

    ReplyDelete
  15. சரிதான் பயபுள்ள முன்னெச்சரிக்கையா ...இருக்குது...

    ReplyDelete
    Replies
    1. இருக்க வேண்டியதுதான் ,அதுக்காக இப்படியா ;)

      Delete