22 December 2016

மனைவி ,கணவனைத் துளைத்து எடுப்பதாலும் இந்த பெயரோ :)

             ''பழத்தின் தோலை உரிக்காமல் உள்ளேயுள்ள அதன் முத்துக்களை எப்படி  கண்டுபிடிக்க முடியாதோ ,பெண்ணின் மனதில் உள்ளதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் தான் (மாது +உளம் )மாதுளம்கனி என்கிறார்களாமே?''
            ''அந்த மாது மனைவியான பின் கணவனைத் துளைத்து எடுப்பதால் , மாதுளைப் பழம் என்றும் சொல்கிறார்களோ ?''

இதையுமா ஓசி கேட்பது :)
           ''முந்தி 'பேனா டைப் இன்சுலின் சிரிஞ்ச் 'சை  பையிலே  வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''
            ''அதையேன் கேட்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேட்கிறாங்களே !''

இப்படியும் ஏமா(ற்)றலாமா :)
            ''நான்  புதுசா வாங்கின செல்போனில் இருந்து கால் போக மாட்டேங்குது ,என்ன பிரச்னைன்னு பாரேன் !''
           ''அடப்பாவி ,பாக்கெட் கால்குலேட்டருக்கும் ,செல் போனுக்கும் உனக்கு வித்தியாசம்  தெரியாதா ?''

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :)
              ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
             ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
             ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
             ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

20 comments:

  1. இந்த பதிவை ,தமிழ்மணம் தானாக ,இருவேறு விதமாக(தலைப்புடனும்,தலைப்பு இல்லாமலும் )திரட்டிக் கொண்டுள்ளதை ,இன்றைய இடுகைகளைக் க்ளிக் செய்து பார்க்கும்போது தெரிகிறது !முகப்பில் எப்படி எப்படி வெளியாகுமோ :)

    ReplyDelete
    Replies
    1. காலையில், தமிழ் மணத் திரட்டியை ஆவலோடு பார்த்தேன் ,தலைப்பு இல்லாமல்தான் பதிவு வெளியாகியுள்ளது !நேற்று முந்தின நாள் பதிவும் இப்படித்தான் !
      தமிழ் மண திரட்டி, கைவிடப் பட்ட நிலையில் இயங்குகிறதா ?உரியவர்கள் விளக்கம் தருவார்களா :)

      Delete
  2. மாதுளை - புதிய அர்த்தம்...!

    ReplyDelete
    Replies
    1. பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளை போல் :)

      Delete
  3. எல்லா ப்ளாக்கும் படிக்கறீங்கன்னு தெரியுது! (மாது உளம் கனி!)

    அதை என்னன்னு நினைத்து ஓசி கேக்கறாங்களோ!

    ரொம்பப் பழைய மாடல் ஃபோனோ?

    நேர்ல வந்து ஊட்டி விட்டுட்டுப் போனா எவ்வளவாம்?

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைத்தால் படிக்காமல் இருப்பதில்லை :)

      தெரிந்தவர்கள், தெரியாமலா கேட்பார்கள் :)

      செல்லே பார்க்காதவனுக்கு எப்படி தெரியும் :)

      அதானே ,அதுக்கும் சார்ஜ் செய்யலாமே :)

      Delete
  4. மாதுளையைப் பெற மாதவம் செய்திட வேண்டுமம்மா...!

    வழக்கம் போல மூடிய கழட்டிட்டு கொடுக்க வேண்டியதுதானே...!

    கால்குலேட்டரை கொடுத்துட்டு இது டச்சு போன் இல்லை... அதுன்னா விலைகூட ஆகுமுன்னு சொல்லி படிக்காத என்னிடம் வித்திட்டானா...?!

    ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... இனி இந்த வியாதி எனக்கு வராது டாக்டர்... அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததற்கு மிக்க நன்றி டாக்டர்...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. யார் மாதவம் செய்யணும் ,ஆணா,பெண்ணா ,கணவனா ,மனைவியா :)

      மூடியில் என்ன இன்சுலினா இருக்கு :)

      ஏமாறுபவன் இருக்கும் வரை .......:)

      இந்த அதிர்ச்சி வைத்தியத்துக்கு பீஸ் கேட்க மாட்டாரே :)

      Delete
  5. Replies
    1. ஜீன்ஸ் பேண்ட் நல்லாயிருக்கா :)

      Delete
  6. Replies
    1. கருத்தை சிறியதாகவும்,பதிவைப் பெரியதாகவும் எப்படி போடுறீங்க ஜி :)

      Delete
  7. முதல் ஜோக்கேஅசத்தல்

    ReplyDelete
    Replies
    1. அசத்தலுக்கு காரணம் ,நான் படித்த 'மங்கையின் உள்ளம்.. மாதுளம்'பதிவுதான் காரணம் !அதை எழுதியுள்ள ராமலக்ஷ்மி மேடத்துக்கு நன்றி :)

      Delete
  8. ஆஹா எப்படி எல்லாம் ஆராய்ச்சி.
    இன்சுலின் என்று தெரிந்தா கேட்கிறார்கள்
    இப்படிப் பட்டவர்களிடம் தாம் பணமில்லா பரிவர்த்தனை செய்யச் சொல்கிறார்கள்
    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முன்னூறும் ஐநூறும்மட்டும் ஞாபகம் வருதே

    ReplyDelete
    Replies
    1. சொல் ஆராய்ச்சி ,நம்ம செய்யலைன்னா யார் செய்வார் :)
      தெரியாதவர்கள் ஏன் கேட்கப் போகிறார்கள் :)
      அந்த அளவுக்கு மக்கள் முன்னேறி விட்டார்களா :)
      atmல் இரண்டாயிரம் மட்டுமே வருதே :)

      Delete
  9. SMS இற்கு முன்னூறு ரூபா
    கால் பண்ண ஐநூறு ரூபா
    எதுக்கு
    மருந்து குடியென நினைவூட்ட

    ReplyDelete
    Replies
    1. இன்னும் என்னன்ன சேவை வருமோ :)

      Delete
  10. மாதுளை...அப்படியும் இருக்குமோ.......??????????

    ReplyDelete
    Replies
    1. ஏன் உங்களுக்கு அனுபவம் இல்லையா :)

      Delete