23 December 2016

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவதெப்போ :)

இதை சொல்லியிருந்தால் அதை நம்பலாம் :)               
                ''நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்றதுதான் பஞ்சாங்கம் ,நீங்க ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?''
              '' மக்கள் கையில் காசிருக்காது ,atm ,atm யுமாய் அலைய வேண்டி வரும்னு எதிலாவது சொல்லப் பட்டிருக்கா ?''

தரகர் சொன்னதும்  ,சொல்லாததும் :)
             ''இந்த வீட்டடி மனையை வாங்கும் போதே ,பத்து அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும்னு சொன்னதை நம்பியது  ,தப்பா போச்சா,ஏன் ?''
            '' வீட்டிலேயும் பத்தடி தண்ணீர் வரும்னு சொல்லாமல் விட்டுட்டாரே!''
காலையில் வடித்த சாதம்,மதியமும் அதே சூட்டில் :)             
          ''அதெப்படி ,உன் சாப்பாடு மட்டும் சூடாவே இருக்கு ?''
          ''ஹாட் பாஸ்க்சை , இன்னொரு ஹாட் பாக்ஸில் வைத்துக் கொண்டு வருகிறேனே! ''

மையல் ராணி சமையல் ராணியாய் மாறுவதெப்போ :)
             ''உன் புதுப்பெண்டாட்டி சமையல் எப்படின்னு  கேட்டா ,தலைலே ஏண்டா அடிச்சுக்கிறே?''
             ''தோசைக் கல்லுலே தோசைத் தானே வார்க்க முடியும் ,ஆம்லேட் எப்படி போடமுடியும்னு கேட்கிறாளே!''
நடிகைன்னா உடம்புக்கு எதுவும் வரக்கூடாதா:)
              ''அந்த நடிகைக்கு  டான்சில் ஆப்ரேசன்னு சொன்னா டான்ஸ் டைரக்டர் கமெண்ட் அடிக்கிறாரா ,எப்படி ?''
               ''டான்சில் தான் வீக் ,ஃடான்சிலுமா வீக்னு கேட்கிறார் ! ''

பொன் நகைகளின் இருப்பிடம் :)
     கோடீஸ்வரர்களின் நகைகளும் 
     நடுத்தர வர்க்கத்தின்  நகைகளும் 
     வங்கிகளில்தான் அடைக்கலம் ...
     ஒன்று  ஃசேப்டி லாக்கரில் ,
     இன்னொன்று நகைக் கடன் கணக்கில்!

23 comments:

  1. இன்னும் கொஞ்ச நாள்தான்.... அப்புறம் பாருங்களேன்... இதுவே பழகிப்போயிடும்... பஞ்சாங்கத்தோட பஞ்சதந்திரம்...!

    அடி மேல் அடி வைத்தால்... தண்ணியும்... நகரும்... வாங்க நகர் வலம் வரலாம்...!

    அது என்மோ தெரியல.... என்ன மாயமோ தெரியல... என் கை விரல் பட்டதிலே பால் சொம்பு பொங்குது...!

    ஆம்லேட் ஆம்பளதானே போடனும்...!

    அந்த நடிகைபாட்டுக்கு ஆடலைன்னு பரவாயில்லை... பாட்டிலில் ஆடுகிறாரே...‘ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்...’ பாட்டு வேற...!

    பொன்னை விரும்பும் பூமியிலே... புதையல் தேடி அலையும் உலகில்... இந்த மனமும் இந்த குணமும்... என்றும் வேண்டாம் என்னுயிரே... ஜெயில்ல காலம் தள்ள முடியாது...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. பஞ்சதந்திரம் பலிக்குமா ?பொறுத்திருந்துதான் பார்க்கணும் :)

      வலது பக்க துடுப்பை நான் போடவா :)

      இதைதான் பத்துவிரல் தீக்குச்சின்னு பாடுறாங்களா:)

      நம்ம விஜி தொப்புள்ளே ஆம்லேட் போட்ட மாதிரியா :)

      சிலர் பாட்டுக்கு ஆடுவாங்க ,இவங்க பாட்டிலுக்கு ஆடுறாங்களோ :)

      கிலோகணக்கில் தங்கத்தை பதுக்கி வைத்திருந்தால், ஜெயில்தான் :)

      Delete
  2. Replies
    1. கேள்வியையும் தானே :)

      Delete
  3. Replies
    1. நல்ல பதில்தான் கிடைக்காது போலிருக்கு ஜி :)

      Delete
  4. புதிய இரண்டாயிரம் ரூபாய் தாளை, செல்லாது என்று எப்போது சொல்வார்கள் என்பதனை ஆஸ்தான ஜோசிடர்கள் சொன்னால் தேவலை.

    ReplyDelete
    Replies
    1. அதை மட்டும் சொல்லிவிட்டால்ஆஸ்தான ஜோதிடர்களை நானும் நம்புவேனே :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. டூ in ஓன் ஹாட் பாக்ஸ் நல்லாயிருக்கா :)

      Delete
  6. இளம் மனைவியின் சமையல் அருமைதானே :)

    ReplyDelete
  7. பொன் நகைகளின் இருப்பிடம்,சரிதானே :)

    ReplyDelete
  8. ஏடிஎம் நினைத்திருக்குமா? நாம் இப்படியெல்லாம் ,,,, ஹா ஹா ஹா அனைத்தும் அருமை ஜீ,,,,

    ReplyDelete
    Replies
    1. ஏடிஎம்சரி ,ஏடிஎம்கேயும் இப்படி நடக்கும்னு நினைத்திருக்காது :)

      Delete

  9. சில விஷயங்களை சொல்ல மாட்டார்கள் பஞ்சாங்கம் பார்ப்பவரா நீங்கள்
    சென்ற மழையில் தெரிந்ததா
    மனைவியிடம் சொல்லத் தைரியமில்லை
    வயிற்றில் ஆம்லெட் வார்த்ததை பார்த்திருப்பாள்
    டான்ஸ் மாஸ்டருக்குத் தெரிந்ததைச் சொல்கிறார்
    இன்னும் சில காலத்துக்குச் செல்லுபடியாகும் ஜோக்

    ReplyDelete
    Replies
    1. சொல்லமாட்டார்கள் ,சொன்னதெல்லாம் நடக்கவும் செய்யாது ...இதை எப்படி நம்புவது :)
      சென்ற ஆண்டு புயல் ,தண்ணீரால் அழித்தது,இந்த ஆண்டு புயல் காற்றால் அழித்தது :)
      அப்படின்னா சந்தேகம் வரத்தான் செய்யும் :)
      நமக்கு தெரியாததையும் சொல்கிறார் :)
      சேப்டி பாக்ஸ்சில் உள்ளதையும் ரெய்டு செய்து எடுத்து விடுவார்களா :)

      Delete
  10. மையல் ராணி சமையலில் வீக் போலிருக்குதே

    ReplyDelete
    Replies
    1. பிள்ளை வந்தாலும் சமையல் வராது போலிருக்கே :)

      Delete
  11. முதலில் வாக்கு போடுவது தான் சரியாகத் தெரிகிறது ,கருத்தைப் போட்ட பின் வாக்களிப்போம் என்றால் த ம பட்டையே காணாமல் போய் நாமம் சாற்றி விடுகிறது :)

    ReplyDelete
  12. மையல் ராணியின் கேள்வி சரிதானே......!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நூற்றுக்கு நூறு சரி , முட்டை பிடிக்காதுன்னா தனி கல்லில்தானே போடமுடிய்ம் :)

      Delete
  13. மையல் ராணி...."ச"மையல் ராணி அஹ்ஹஹஹ

    அனைத்து வார்த்தை விளையாடல்களையும் ரசித்தோம் டான்சில் உட்ப்ட அருமை ஜி

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே பெண்களை கேலி செய்வது போலிருக்கே ,கோபம் வரலையா கீதா மேடத்துக்கு :)

      Delete