11 April 2015

'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க !

மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் !

          "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
          "புருசன்களை திட்டுவதில் தான் !" 

கணவர் ரஜினி ரசிகர் என்பதற்காக இப்படி பாடலாமா ?

    ''உன் புருஷன் அமைதி தேடி இமயமலைக்கு போகத்  துடிக்கிறாரா ?
'சேலை சோலையே 'ன்னு பாடிட்டு உன்னை சுற்றி சுற்றி வந்தவராச்சே அவர் ?''
      ''இப்போ 'சேலையில் சிக்கிக் கொண்டா  சொர்க்கத்தின் வழியேதும் 
தெரியாது'ன்னு  பாட ஆரம்பித்து விட்டார்டி!''
  1.          திண்டுக்கல் தனபாலன்11 April 2014 at 07:21
    அந்தளவு "Free"யம்...!




    1. போதும் போதும் உன் பிரியம் ,என்னை freeயா விட்டா போதும்ன்னு கிளம்பிபிட்டாரோ ?
      கோவை ஆவி11 April 2014 at 08:19
    2. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டுன்னு பாடலையா? :)
    3. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டான்னு கேட்கிறவங்களை கண்ட துண்டமா வெட்டிப்பிடுவார் போலிருக்கு !ரொம்பத்தான் நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கார் !
    4.  வலிப் போக்கன்11 April 2014 at 21:25
      அட...இப்படியும் ஞானம் பிறக்க வழியிருக்கா.....




      1. அதானே ,சாமியாரா ஆனவனே சேலை அவிழ்ப்பில்தான் ஆன்ம ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கான் ,அனேகமா ஞானம் பொறந்த மாதிரிதான் !
      2. 'நொறுக்குத் தீனி'யர்கள் ஞாபகம் வைச்சிக்குங்க !

                   ''என்னங்க ,ஃபிரிட்ஜில் தின்பண்டம் எதையும் வைக்க விட மாட்டீங்களே !அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தினார் ?''

      3.  ''பசியும்  ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு ...கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி ,பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே !''

      4. தானாடா விட்டாலும் தன் சதை ஆடுமோ ?

        மேடையில் முழங்கும் தலைவர் ...
        தன்னையறியாமல்  ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் ...  
        ''பாரதி அன்றே சொன்னார்  ,
        பெண்மை வாழ்கவென்று கூத்தடிப்போமடா ''என்று !

28 comments:

  1. 01. அது சாபக்கேடோ....
    02. நல்லவேளை நம்பியார் ரசிகனாக இல்லை.
    03. விரமானவருதான்
    04. எந்தத் தலைவருனு சொல்லவே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. 1.வாங்கி வந்த வரம் என்றும் சொல்லலாம் :)
      2.அவர் பாட்டில் எது நினைவுக்கு வருது :)
      3.அதான் ,அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து திறந்துப் பார்க்கிறார் :)
      4.நாடறிந்த நல்லவரின் பெயரை வேறு சொல்லணுமா:)

      Delete
  2. ““““““““ "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா இருக்காங்களா ,எதிலே?"
    "புருசன்களை திட்டுவதில் தான் !" ““““““““““““““
    அங்க இருந்துதானே டிரைனிங்கே ஆரம்பிக்குது..!!!

    ““““““““உன் புருஷன் அமைதி தேடி இமயமலைக்கு போகத் துடிக்கிறாரா ?
    'சேலை சோலையே 'ன்னு பாடிட்டு உன்னை சுற்றி சுற்றி வந்தவராச்சே அவர் ?''
    ''இப்போ 'சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழியேதும்
    தெரியாது'ன்னு பாட ஆரம்பித்து விட்டார்டி!''““““““““

    அமைதிக்குப் பெயர்தான் “ சாந்தி “ன்னு அப்ப நினைச்சது தப்பாயிருச்சேன்னு வருத்தப்பட்டுப் பாடுறார் போல..!


    த ம 2

    ReplyDelete
    Replies
    1. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது இவர்களுக்கும் பொருந்துமா :)

      உன் பிரிவினில்தானடி சாந்தின்னு பாடுவார் :)

      Delete
  3. ஒற்றுமை ஒளிவிளக்கு
    குடும்ப குத்துவிளக்கு
    வெளிச்சம் வித்தியாசம் எவ்வளவு பகவான் ஜி
    வாயால் திட்டுவதோடு சரியா?
    நட்புட,
    புதுவை வேலு
    த ம + 1

    ReplyDelete
    Replies
    1. ஆயுத போராட்டமாக மாறும் காலம் வெகு தூரத்தில் இல்லையென்றே படுகிறது :)

      Delete
  4. # அது manufacturing defect!

    ## இல்லீங்க.... நல்ல ஸீ த்ரூ சேலையெல்லாம் இருக்கு... அதுல
    சிக்கிக் கொண்டாலும் வழியெல்லாம் தெரியும்!

    ### அட! இது ஜோக் இல்லீங்க... அறிவுரை!

    #### அடடா...அது கூத்திடுவோம் இல்லையோ!

    ReplyDelete
    Replies
    1. # அதை தமிழில் பிறப்புக் கோளாறு என்று சொல்லலாமா :)

      ## வழியும் தெரியுமா ,வழிந்து நிற்கிறதும் தெரியுமா :)

      ### ஓயாமல் ஃபிரிஜ்ஜைத் திறக்கிறவருக்கு பொருத்தமான அறிவுரைதானே:)

      #### அவருக்கு அது பொருந்தாது :)

      Delete
  5. Replies
    1. பொல்லாத ஆண் பாவம் ,நீங்கள்தான் சொல்லிக்கணும் :)

      Delete
  6. என்னதான் இருந்தாலும் அவுங்கள்லாம் ஒரே ஜாதிதானே... பெண்சாதி


    சொர்க்கத்தின் திறப்பு விழா... இங்கு சொக்கத்தின் திறப்பு விழா... புது சோலைக்கு வசந்த விழா...பக்கத்தில் பருவ நிலா...இளமை தரும் இனிய பலா... போய்வரட்டும் இமயமலை உலா...!


    என்ன பசி...? என்ன சாப்பிடனும்... ? பல்ப்னால ஒன்னும் புரியல...சாரியான டியூப்லைட்டா?


    நேத்து காத்து வாங்கப் போனா... அங்க ஒரே கூத்தா இருக்குது...! வாங்க நம்ம அங்கே போயி அடிப்போம்...!?

    நன்றி.
    த.ம. 7.


    ReplyDelete
    Replies
    1. பெண் சாதி, பொஞ்சாதி ஆனவுடன் இப்படி சாதி மாறிவிடுமோ :)

      போனா எங்கே வர்றது ,நேரா கைலாசம்தான் :)

      டியூப் லைட்டுக்கு எலெக்டிரானிக்ஸ் சோக் வாங்கி மாட்டுங்க ,டக்குன்னு எரியும்:)

      பீச்சுப் பக்கம் காத்து வாங்கப் போனீங்களா ,காதல் படத்தை நேரிலே பார்க்கப் போனீங்களா :)

      Delete
  7. பாரதி சொன்னதை எப்ப்டி அர்த்தம் கற்பிக்கிறார்கள். அவரவர் புருஷன்களை என்று இருந்திருக்க வேண்டுமோ?

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவர் புருசன்களை திட்டி என்ன ஆகப் போகிறது :)

      Delete
  8. பேஷ்பேஷ் இதிலாவது ஒற்றுமையாக இருங்காங்களே........!!!! "புருசன்களை திட்டுவதில் தான் !"

    ReplyDelete
    Replies
    1. தேவை ஏற்பட்டால் ,தங்கள் உரிமையை நிலை நாட்டிக் கொள்வார்களோ :)

      Delete
  9. நல்ல ஒத்துமை போங்க...இதிலாவது ஒத்துமையா இருக்காங்களேனு சந்தோஷப்படணுமோ?!

    சேலையில் சிக்கித்தான் பலரும் தத்துவங்கள் கற்கின்றார்கள்! அரசியல்வாதிகள் கூட...

    24 மணிநேர சேவைபோலும்...அவரது வயிறு....



    ReplyDelete
    Replies
    1. சந்தோசமா ,எப்படி இந்த ஒற்றுமை என்று சந்தேகப் படணும்:)

      அரசியல்வாதிகள் என்பதை விட ,ஆன்மீகவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட :)

      அதான் ,24மணி நேர சேவை செய்யும் ஆம்புலன்சை தேடுகிறது :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    ஆணாதிக்க சக்கதிகள்.. நல்லது இல்லை...மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா ? just fun,டேக் இட் ஈஸி:)

      Delete
  11. Replies
    1. உங்களின் 'தசாவதார ' வாக்குக்கு நன்றி :)

      Delete
  12. Replies
    1. அதாவது ,கூட்டாஞ் சோறு அப்படித்தானே :)

      Delete
  13. நொறுக்குத் தீனி'யர்கள் ஞாபகம் வைச்சிக்குங்க!
    ஃபிரிட்ஜ் பல்பும் போல
    பசியும் உண்பதுவும் ஆச்சோ

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,தேவையை மட்டும் பூர்த்தி செய்தால் போதாதா :)

      Delete
  14. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசீத்தீர்கள், மிக்க நன்றி ..ஆனால் த ம வாக்குரிமையை ஏன் பயன்படுத்த மாட்டேன் என்கிறீர்கள் :)

      Delete