--------------------------------------------------------------------------
இன்னைக்கு சிரிக்க வைக்கிற ஜோக்குக்கு பதிலா சிந்திக்க வைக்கிற ஒரு கேள்வி :)
ஈருடல் ஓருயிர் என்ற தலைப்பில் சிறந்த தம்பதியரைத் தேர்ந்து எடுக்கும் போட்டி ... கடைசி சுற்றில் இரு ஜோடிகள் ஒரே மதிப்பெண் பெற்று சம நிலையில் இருந்தார்கள் ....
முதல் பரிசுக்கு தகுதி பெற ஒரு போட்டி ....
தம்பதிகளுக்கு ஒன்று வீதம் இரண்டு ,சைனா 'மக்'கில் ஜிகர்தண்டா ஊற்றி ,அதை தம்பதிகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பார்த்து ,ஒரு ஜோடியை முதல் பரிசுக்கு தேர்வு செய்தார்கள் ....
இப்போது உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி ...எப்படி முதல் பரிசுக்கு தேர்வு செய்து இருப்பார்கள் ?
யோசித்து சொல்லுங்க ..விடையை அப்புறம் பார்க்கலாம் :)
ஒரு க்ளு...'மக் ' !
ஈருடல் ஓருயிர் என்ற தலைப்பில் சிறந்த தம்பதியரைத் தேர்ந்து எடுக்கும் போட்டி ... கடைசி சுற்றில் இரு ஜோடிகள் ஒரே மதிப்பெண் பெற்று சம நிலையில் இருந்தார்கள் ....
முதல் பரிசுக்கு தகுதி பெற ஒரு போட்டி ....
தம்பதிகளுக்கு ஒன்று வீதம் இரண்டு ,சைனா 'மக்'கில் ஜிகர்தண்டா ஊற்றி ,அதை தம்பதிகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பார்த்து ,ஒரு ஜோடியை முதல் பரிசுக்கு தேர்வு செய்தார்கள் ....
இப்போது உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி ...எப்படி முதல் பரிசுக்கு தேர்வு செய்து இருப்பார்கள் ?
யோசித்து சொல்லுங்க ..விடையை அப்புறம் பார்க்கலாம் :)
ஒரு க்ளு...'மக் ' !
நடிகைக்கு ஆப்ரேசன்னா கிண்டல் செய்யலாமா ?
''அந்த நடிகைக்கு டான்ஸில் ஆப்ரேசன்னு கேள்விப்பட்டு ,டான்ஸ்
மாஸ்டர் கமெண்ட் அடிக்கிறாரா,எப்படி ?''
''அவர் டான்ஸில்தான் வீக் ,அவரோட டான்ஸிலுமா வீக்னு கேட்கிறார் !''
வலிப் போக்கன்12 April 2014 at 12:18
ஆடிய ஆட்டத்தால் வீ்ககானது என்று டான்ஸ் மாஸ்டருக்கு தெரியாமல் போனது எப்படி?
Bagawanjee KA12 April 2014 at 12:24
சமீபத்தில் சமந்தாவுக்கு தானே டான்ஸில் வந்தது.. அப்போ அவர்தானா?? ( சும்மா கொளுத்தி போடுவோம்)
Bagawanjee KA12 April 2014 at 12:15
அப்படியா ?எப்படி பாஸ் ,நாட்டுக்கு தேவையான நல்ல தகவல்களை எல்லாம் இப்படி விரல் நுனியிலே வச்சுருக்கீங்க ?
MANO நாஞ்சில் மனோ12 April 2014 at 21:48
நயந்தாராவுக்குதான் டான்ஸ் பிரச்சினை, டான்சில் பிரச்சினை யாருக்கு அவ்வவ்...
Bagawanjee KA12 April 2014 at 23:06
நயன்தாராவைக் கண்டாலே வாலிபப் பசங்க மனசு ஆட ஆரம்பித்து விடுகிறது ,இதில் அவர் ஆ...டி வேறு காட்டவேண்டுமா ?
மகளின் உள்ளங்கவர் 'கள்வன் 'இதில் தெரிவானா ?
''என் பொண்ணைக் காணலைன்னு ,மந்திரவாதியை போய் பார்க்கலாம்னு சொன்னா ,ஏன் வேண்டாங்கிறே ?''
''மை போட்டு பார்த்தா , கள்வன் தெரிவான்னு சொல்வாங்க ஆனா ,உங்க மகளின் உள்ளங்கவர் 'கள்வன் ' தெரிய வாய்ப்பே இல்லை !''
கல்யாணம்,ஏழாவது மாசமே வளைகாப்பு ? டபிள் OK !
|
|
Tweet |
ஜிகர்தண்டாவை எப்படிச் சாப்பிட்டிருப்பார்கள்? ச்சே... முதல் ஆளாய் கமெண்ட் போட்டால் இப்படித்தான் 'பிட்' அடிக்கக் கூட முடியாது!!! டான்ஸில் டான்சில்ஸ் ரசித்தேன். மற்றவற்றையும்தான்!
ReplyDeleteஜிகர்தண்டாவை சாப்பிட்ட மாதிரி கூலாய் இருங்க ,விடை தெரியும் வரை :)
Deleteஜில் ஜில் ஜிகர்தண்டாவை நிறைய குடித்தாலும் டான்சில் வருமோ ,இரண்டுக்கும் இப்படியும் ஒரு பொருத்தம் இருக்கே :)
//ஜில் ஜில் ஜிகர்தண்டாவை நிறைய குடித்தாலும்//
Delete"ஜில் ஜில் ஜிகிர்தண்டா"வை ஞாபகமூட்டிவிட்டீர்கள் சார்!
படித்துப் பா(ர்க்க வா)ருங்கள்:
http://nizampakkam.blogspot.com/2010/11/75jiljil-jigirthanda.html
ஏற்கனவே நிச்சயம் படித்து இருப்பேன் ,ஏனென்றால் உங்கள் பதிவுகள் அனைத்தையும் விடாமல் படிக்கிறேன் ...லிங்க் கொடுத்து இருப்பதால் மீண்டும் படிக்கிறேன் :)
Deleteகுங்குமம் இதழில் நீங்களே ஜிகர்தண்டா செய்முறைக் கேட்டுள்ளீர்கள் ,அதை பதிவில் சொல்லவே இல்லையே:)
Deleteயோசிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால் ஒண்ணும் புரியல
ReplyDeleteகொஞ்சம் பொறுங்க ,இன்னும் நாலு பேர் யோசிக்கிற மாதிரி தெரியுது :)
Delete
ReplyDeleteசொன்னபடி கேளு மக்கர் பன்னாதே என்னுடைய ஆளு இடைஞ்சல் பன்னாதே... ஈருடல் சேர்ந்து ஓருயிரான தன் மக்களுக்கு ஜிகர்தண்டாவை ஊற்றிக் கொடுத்துப் பாரிசைத் தட்டிச் சென்றார்களா? அட கொக்க மக்கா பாசக்கார தம்பதியா இருக்காங்களே!
மக்கு மண்டைக்கு ஒன்னுமே ஏறல... ஈருயிர் ஓருயிர்னாலே... இன்னொரு உயிரத் தேடிக்கிட்டு இருக்காங்க...! ‘நீ பாதி நான் பாதிங்கிறதுனால...’ பாதிமட்டுமே மக்கில் நாக்கில் நக்கிச் சாப்பிட்டுவிட்டார்களோ? இந்த நக்கல்தானே வேணாங்கிறது?... மொதல்ல பரிசக் கொடுங்க... எவ்வளவு பிழையிருக்கிறதோ அதற்குக் தகுந்தாற்போல் குறைத்துக்கொண்டு மீதியக் கொடுங்க... ஒரு காசா ரெண்டு காசா..? ஆயிரம் பொற்காசல்லவா...?!
என்ன இருந்தாலும் டான்ஸ் மாஸ்டருக்குத்தானே தெரியும்... நடிகையோட வீக்னஸ்...பாடலுடன் ஆடலைப் பார்த்து ரசிப்பதில்தான் சுகம்...சுகம்...ஆமாம் டான்ஸ்தான் வீக்... இப்ப டான்ஸில் வீக்கமா?
கவர்கள்வன் கவர்பண்ணிட்டு மறைந்திருப்பானே...! மை போட்டா சிக்கமாட்டான்... மைபோட்டு பார்க்கறத்துப்பதிலா மை மகளோட போட்டாவ போஸ்டர்ல போடுங்க... அப்பவாவது தெரியுதான்னு பார்ப்போம்...!
உண்‘மை’க்கு காலமில்லாமப் போச்சு...! அடியே... ஒ கண்ணுல எதுக்கு இப்ப மைப்போட்டுக்கிட்டு இருக்கா?
ஏங்க மந்திரவாதி மை போட்டாத் தெரிவானா? நா மை போட்டா தெரியமாட்டானா? சும்மா இருங்க...சரி சரி ...வாங்க இப்ப மந்திரவாதிட்ட போவோம்... யாருக்காவது தெரியட்டுமே...!
பிள்ளைய பள்ளிக்கு அனுப்பிவிட்டு... ஆமாமா... தாமதமில்லாம
பிள்ளைப் பேருக்கு தயாராகமுல்ல...!
-நன்றி.
த.ம. 5.
ஒவ்வொன்றுக்கும் ஒரு பாடலைச் சொல்லும் உங்களின் ரசனைக்கு நன்றி :)
Deleteஎன்னடி முனியம்மா உன் கண்ணுலே மைய்யி ,பாடலையும் சேர்த்துக்குங்க :)
பிள்ளையப் பெத்தா கண்ணீர்னு இப்பவே பாட ஆரம்பித்து விட்டாரோ :)
சீக்கிரம் சொல்லுங்க ஜி...
ReplyDeleteஅதுக்கு ,விடியும் வரை காத்திருக்கணும் ,ஜி :)
Deleteவிடையை கண்டுபுடுச்சு சொல்ற போட்டியெல்லாம் எங்க பரம்பரைக்கே ஆகாதுன்னு உங்களுக்கு தெரியாதுங்களா....????
ReplyDeleteஉங்க பரம்பரை பரவாயில்லை ,எங்க பரம்பரை கேள்வியைக் கேட்டாலே காத தூரம் ஓடுற பரம்பரையாச்சே :)
Delete1) மக்கில் ஒருவரும் மூடியில் ஒருவரும் குடிக்க ஜாடிக்கேத்த மூடி என்று முடிவு செய்திருப்பார்களோ?
ReplyDelete2) டான்சி ல் இருந்தெல்லாம் எப்பவே மீண்டு வந்த பிறகு இப்ப என்ன டான்சி என்று பேச்சு ... எப்படியோ சொத்துக் குவித்தால் போதாதா.... அதப் பற்றித்தானே பேசனும் இப்ப...!
3)மை வண்ணச் சாயலவனாக இருப்பானோ..?!!
4) ஏழாவது மாசம் யோசிக்காததுனாலதான் இப்ப ஏழரையோ..
:))
1.இறுதிப் போட்டி நடப்பதற்கு முன்னாடியே ,இந்த ஐடியாவைச் சொல்லி இருந்தால் அப்படியே செய்திருக்கலாம் :)
Delete2..இழுத்து மூடப்பட்ட டான்சியைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது :)
3.கண்ணனின் லீலையை காட்டிவிட்டானோ :)
4.சீக்கிரம் பிள்ளைப் பெத்துக்கிறது நல்லது ,கல்யாணம் ஆன பின் என்று சொல்ல வேண்டியதில்லையே :)
01. சொல்லவா ? ? ?
ReplyDelete02. ஆட்டம் ஜாஸ்தியானலே இப்படித்தான்
03. கள்வன் மந்திரவாதியாக இருக்கப்போறான்.
04. முந்தலாம்தான் அதுக்காக இப்படியா ?
1.'ஜொள்'லிடுங்க :)
Delete2.நீங்க வேறேந்த ஆட்டத்திற்கோ போறீங்க :)
3. மை போடாமலே அசத்தி விட்டானோ :)
4.ஆறே மாசத்தில் பிள்ளை பிறந்தாதானே தப்பு :)
நல்ல போட்டி!
ReplyDeleteபதில் சொல்ல வாங்க...
ஏன் ,நீங்க பதில் சொல்லக்கூடாதா நிஜாம் ஜி :)
Deleteவிடை சொல்லியாச்சா?
ReplyDeleteபார்க்கிறேன்.
இரவு 12 மணி வரை உங்களால் தூங்காமல் இருக்க முடியுமானால் விடை கிடைக்கும் ,ஆனால் ,நாளை ஆபீசில் தூங்கி வழிந்தால் ஜோக்காளி பொறுப்பல்ல :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி...
நல்ல சிந்தனை... ஜி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஈ ஓ வை சொல்றீங்களா :)
Delete