2 April 2015

எது முக்கியம் ,காதலியா ,கிரிக்கெட்டா :)

          ''காதலில் விழுந்த கிரிக்கெட் வீரருக்கு நேரம் சரியில்லே போலிருக்கா ,ஏன்  !''

              ''பேட்டிங்கா ,டேட்டிங்கான்னு   முடிவெடுங்கன்னு கேப்டன் சொல்லிட்டாராமே  !''

பெண் காதலிப்பது வீட்டுக்கு தெரிந்தால் ....?

            "என்னடா சொல்றே , 143 ன்னு சொன்னதுக்கா  ,அந்த பொண்ணுக்கு அவங்க வீ ட்டிலே 144 ஆ?''
         "என் கிட்டே அவ 'I LOVE YOU'ன்னு சொன்னது தெரிந்ததால் ,வீட்டுக்கு  வெளியே போகக் கூடாதுன்னு அவளுக்கு 'தடை உத்தரவு 'போட்டுட்டாங்களே !"  
கவிதை வீதி... // சௌந்தர் //2 April 2014 at 09:33
தடை உத்தரவா..? ரைட்டு
Bagawanjee KA2 April 2014 at 09:37 
நாட்டில் கலவரம் வராமல் தடுக்க தெருவில் நாலு பேர் சேர்ந்து நிற்க கூடாதுன்னு சொல்றமாதிரி ,வீட்டில் கலவரம் வரக்கூடாதுன்னு வெளியே போகாதேங்கிற தடை உத்தரவு அமுல் ஆகத்தானே செய்யும் ?
Thulasidharan V Thillaiakathu3 April 2014 at 20:35
பகவான்ஜி! இன்னுமா 143? பசங்க வேற உருவாக்கலையா? டிக்ஷனரில? 
143 க்கு 144 ந்னா 1 தான் தீர்வுனு பசங்க முடிவு பன்ணிடுவாங்க! அதாங்க elope!!!!!!
Bagawanjee KA3 April 2014 at 23:01 ...
I L U என்று ஒன்றை சொல்லிப் பார்த்தார்கள் ,பயபிள்ளைங்க வேற இழுப்பில் இருந்ததால் விட்டு விட்டார்கள் !வீட்டை விட்டு ஒண்ணு மண்ணா ஓடிப் போய்விடலாம் ,அப்புறம் கண்டுபிடித்து கொன்னு மண்ணோடு மண்ணா புதைத்து விடுகிறார்களே !

விளையாட்டுப் பிள்ளைன்னு முடிவே எடுத்துட்டாங்களா ?

        ''தலைவர் 'மீடியா''க்கள் மேல் ஏன் கோபமா இருக்கார் ?''
       ''அவரோட பேட்டி ,அறிக்கைகளை எல்லாம் விளையாட்டு 
செய்திகளில் சொல்றாங்களாமே !''



இது நடிகைக்கு மட்டுமல்ல ,அனைவருக்கும் !

பணம் சம்பாதிக்க வெட்கத்தை விட்டால் ..
பல வழிகளிலும் பணம் வரும் ...
வெட்கம் வரவே வராது ... 
அது போனது ஒரு வழிப் பாதை என்பதால்  !

26 comments:

  1. முதலிரு காதலிப் பதிவுகள்
    தலைவரும் மீடியாவும்
    வெட்கத்தை விட்டால் பணம் சம்பாதிக்கலாமா?
    எல்லாம் நன்று!

    ReplyDelete
    Replies
    1. முதல் காதலுக்கு நாட்டிலேயும்,இரண்டாவது காதலுக்கு வீட்டிலேயும் எதிர்ப்பு கிளம்புதே :)
      தலைவரை இப்படி காமெடி பீஸ் ஆக்கலாமா மீடியா :)
      இந்த ஒன்றை இழந்துதான் இன்னொன்றைப் பெறவேண்டுமோ :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    சில படங்களில் பார்த்துள்ளேன் காதலி இருந்தால் கதா நாயகன் பாய்ந்து பாய்ந்து அடிப்பதாக பார்த்துள்ளேன் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசம் ஜி
    மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. படங்களில் மட்டும்தான் அந்த ஆவேசம் வரும் போலிருக்கே :)

      Delete
  3. Replies
    1. உங்களுக்கும் பிடித்ததா ஒரு வழிப் பாதை :)

      Delete
  4. Replies
    1. 143க்கு 144 ரைட்டுதானா :)

      Delete
  5. ஹஹஹஹ் டேட்டிங்க் பேட்டிங்க் செம....வார்த்தை விளையாட்டு அது சரி கட்டிங்கும் இருக்குமே!

    எங்கள் தளம் மறுபடியும் ....மிக்க நன்றி ஜி! இப்பல்லாம் எலோப்பும் இல்ல...நேர ரெஜிஸ்டர் இல்லனா லிவிங்க் ருகெதர்.....ஒத்து வரலைனா அடுத்து.....இப்படித்தான்....

    தலைவருங்க எல்லாம் இப்படி வந்தாதான் உண்டு விளையாட்டுச் செய்திகள் ல...ஆமாம் அரசியலும் விளையாட்டாகிப் போச்சே....அதுல அவங்க அடிக்கற அடில அந்த பேட்டுல அடிவாங்கறது மக்களாச்சே ஜி!!!! இல்லை பந்து.....மக்களதானே ஜி!!!

    ReplyDelete
    Replies
    1. வெட்டிங் தான் ,அதற்கு முன்னால் எல்லா 'டிங்' கும் உண்டு :)

      லிவிங்க் டு கெதர் கலாச்சாரம் ,இங்கேயும் இறக்குமதி ஆயிடுச்சா :)

      மேளத்துக்கு ரெண்டு பக்கம் இடின்னா ,மக்களுக்கு எல்லா பக்கமும் இடி விழுதே :)

      Delete
  6. முதல் ஜோக் கோலிக்காகவா?!!!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய சூழலில் அவருக்குத்தான் பொருந்துகிறது ,கொஹ்லியா ,காலியான்னு இனி தெரியும் :)

      Delete
  7. 144 என்றால் ஐந்து பேருக்கு மேல் கூட்டமாகச் சேரக்கூடாது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன் பாட்டிங் டேட்டிங் ஏனோ விராட் கோஹ்லியை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைப்பது உண்மைதான் ,அந்த தடையுத்தரவு எண் 144தானே :)
      ஹேமமாலினி காலத்தில் இருந்தே கிரிக்கெட் ,நடிகை சகாப்தம் தொடங்கி விட்டதே :)

      Delete
  8. அன்புள்ள பகவான் ஜீ,

    காதலில் விழுந்ததால் மட்டை அடியோ? அதான் மட்டை ஆயிட்டதோ?


    143 சொன்னதால்... 144 ஆ...ஆ... அ... உடனே 100 -க்கு போனப் போட்டுங்க... நா மேஜர்... என்னான்னுதான் பாப்போம்..!

    பரவாயில்லையே...! இப்பல்லாம் அரசியல்வாதிங்க... செய்திகளிலும் விளையாட ஆரம்பிச்சாட்டாங்களா?
    எல்லாமே விளையாட்டாப் போச்சு... விளையாட்டும் அரசியலாப் போச்சு!


    “ பணம் என்னடா பணம்...பணம்?
    குணம் தானடா நிரந்தரம்...”

    “சும்மா இப்படி கூறுகெட்ட தனமா பேசாதிங்க...

    வெட்கத்தவிட்டுச் சொல்றேன்...

    பணம் பந்தியிலே... குணம் குப்பையிலே...!”

    நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. மட்டைப் பந்து விளையாட்டிலும் இவர் மட்டை ஆகிவிட்டாரே :)

      மேஜர் ஆயிட்டா ,பெத்தவங்க நெற்றியில் 111 போட்டுட்டு ஓடறதுக்கு தயாராய் இருப்பாங்களே :)

      இரண்டிலும் காசு விளையாட ஆரம்பிச்சிடுச்சே :)

      பந்தியைப் பார்த்தா பணம் தெரியுது , குப்பையைப் பார்த்தா ....:)

      Delete
  9. இக்கட்டான நிலைமதான்... எது முக்கியம் ,காதலியா ,கிரிக்கெட்டா ?????????

    ReplyDelete
    Replies
    1. கவலைய விடுங்க ,அது அவர் பாடு :)

      Delete
  10. ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. காதல் போதை தெளிந்து ,தெளிவா விளையாடணும்னு அவருக்குத்தானே வாழ்த்துக்கள் :)

      Delete
  11. 01 .எல்லாப்பயலையும் வாழ விட்டுறோம் அவனும் என்னதான் செய்வான் கோடி கோடியா கொட்டிக்கிடக்கு.
    02. அவன் 420 யாக இருப்பானோ...
    03 .சின்னப்புள்ளைத்தனமாவுல இருக்கு.
    04. ஒன்றைப்பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. 1.விராத் கொஹ்லி ,அதுக்காக விரட்டுக் கோழி ஆகலாமா :)
      2.உள்ளே வச்சு முட்டிக்கு முட்டி தட்டி விசாரிச்சா தெரியும் :)
      3.அப்படித்தான் இருக்கு ,இப்ப ஒருத்தர் சொல்லி இருக்கிறதும் ...தோல் நிறம் கருத்துறுமாம்,பெண்கள் தெருவில் இறங்கி போராடினால் :)
      4.அதுக்காக இதையா இழப்பது :)

      Delete
  12. பேட்டிங்கா, டேட்டிங்கா..... சீக்கிரம் முடிவு செய்யட்டும்! :)

    ReplyDelete
    Replies
    1. IPL போட்டி தொடங்குவதற்குள் முடிவு தெரிந்து விடும் :)

      Delete
  13. எல்லா தளத்திற்கும் சென்று கண்டமேனிக்கு வாந்தி எடுக்கும் வாந்தி பேதி வருண் ஏன் உங்கள் தளத்திற்கு வருவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. என் தளம் பளபளன்னு சுத்தமாக இருப்பதால் இங்கே வந்து வாந்தி எடுக்க மனம் வரவில்லை போலிருக்கு,என் சார்பில் அவரிடமே நீங்கள் இதைக் கேட்டு விடலாமே :)

      Delete