6 April 2015

உடைதான் பெண்ணுக்குப் பகையா :)

            ''ஒர்க் ஷாப்பில்  நீ  வேலைப் பார்க்கிறதிலே என்னடி கஷ்டம் ?''

             ''டிரஸ்ஸை  லூசா  போட்டுகிட்டா  மெஷினுக்கு பக்கத்தில் போக முடியலே ,டைட்டா போட்டுகிட்டா மேனேஜர்  பார்வையே சரியில்லையே !''

ஆபரண நகையினால் ஆபத்து வரக்கூடாது என்பதற்காக ...!

         ''தலைவரே ,விலைவாசி அதிகமாயிட்டது நானும்
 நகைங்களை பாங்கிலே வச்சு இருக்கிறதா எந்த தைரியத்திலே சொல்றீங்க ?''
     ''அடமானத்திலே இருக்கா ,சேப்டி லாக்கர்லே இருக்கான்னு யாரும் 
கேட்க மாட்டாங்கிற தைரியத்திலேதான் !''

நண்பர் ரொம்ப விவரமான ஆளா தான் இருப்பார் போல. தங்க நகைகளை அடகு வைத்து விட்டு பள்ளிக் கூடத்துக்கு படிக்க போயிருக்கு என்று சொல்வார்கள். அதனை நினைவு படுத்தியது நகைச்சுவை. நன்றி சகோதரர்.






  • Bagawanjee KA6 April 2014 at 23:02
  • இப்போ , நகையை அடகு வைச்சு பிள்ளையை படிக்க வைக்க முடியாது ,விற்றுத்தான் படிக்க வைக்க முடியும் போலிருக்கு ..அப்படி நன்கொடை புடுங்குறாங்களே!
    1. Mythily kasthuri rengan6 April 2014 at 13:25
      அப்புறம் ஒரு சின்ன விஷயம் ஆபரணம் என்றாலும் நகை என்றாலும் ஒன்று தானே?                                                                                               
    2.  Bagawanjee KA6 April 2014 at 23:11
    3. நகை சொல்வழக்கு ,ஆபரணம் எழுத்து வழக்கு ,ஆனால் யார் அதை வாங்கித்தந்தாலும் போட்டுக்கிறதிலே எந்த வம்பு வழக்கும் இல்லை !
    4. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்7 April 2014 at 16:58
      இதுக்குப் பேருதான் இலை மறை காயா?
      பொய்யும் சொல்லலை, உண்மையும் சொல்லலை..அவங்கவங்க எப்படி வேணுமோ அப்படி புரிஞ்சுக்கலாம் .. :)                                                             
    5. Bagawanjee KA7 April 2014 at 22:00  
    6.  இப்படி பேசத் தெரிந்தால் விரைவில் தலைவராகி விடலாம்!

    கந்து வட்டியால், நொந்து போய் ,லந்து பண்றாரோ ?

                 ''அடகுக் கடைக்கே  வந்து ,'நீங்க எங்கே அடகு வைக்கிறீங்க 'ன்னு 

    கேட்கிறது நியாயமா ?''

                ''நீங்க மனசாட்சியை அடகு வைத்து விட்டு, அநியாய வட்டி போடுறது  

    மட்டும் நியாயமா ?''

    நாகரீகம் தெரிந்த காதலன் !...

    காதலிக்கு ...

    நாலுப் பேருக்கு நடுவில் பரிசளித்து விட்டு 
    நன்றியினை மட்டும் 
    நாலு சுவருக்கு நடுவில் பெற நினைப்பவன் !



    24 comments:

    1. இனி, நகை வங்கியில் இருக்கிறது என்று தங்கள் பாணியில் கூறிக்கொள்ளலாம் போலுள்ளது.

      ReplyDelete
      Replies
      1. தலைவர் சொன்னால் நம்பும் கூட்டம் ,நாம் சொன்னால் நம்பாதே :)

        Delete
    2. வழக்கம் போல் சிரிக்க வைக்கும் நகைச்சுவை!
      த ம 2.

      ReplyDelete
      Replies
      1. வழக்கமாய் வரும் உங்கள் கருத்திற்கு நன்றி :)

        Delete


    3. “இப்பச் சொல்றது சரி... ஆனால் நா என்ன மெஷினா...? மேனேஜரா...? இதச் சொல்றதுக்குகூட எ பக்கத்தில வரமாட்டேங்கிறாய்?”


      “தலைவரே... அந்தப் பேங்கில சேப்டி லாக்கர் இல்லங்கிறது எல்லாருக்கும் தெரியும்... பேங்கில வேல பாக்கிறவ சேப்டியா வச்சுப்பாளான்னு பாத்துக்கங்கோ...ஒங்களுக்குச் சந்தேகமா இருந்துச்சுன்னா... என்னிட்ட கொடுங்க பத்திரமா வச்சிக்கிறேன்...அதுக்கு பத்திரம் வேணுமுன்னாலும் எழுதித்தாரேன்... என்ன நம்புங்க...”

      “ஒன்ன மாதரிதான் நானும் சொல்லி... வாங்கி வச்சிருக்கேன்”

      “தலைவா... நீங்க தலைவர்தான்...மன்னிச்சிடுங்க...”

      “ சரி...சரி... அதுக்காக கால்ல ஏய்யா விழுறாய்... !பக்கத்தில யாருமே இல்லய்யா... இப்பப்போய் விழுவுறேயே...! எந்திரியா... இதெல்லாம் அப்புறம் வச்சுக்க... !என்ன சரியா?”


      சும்மா சொல்லுங்க... இங்க வாங்கிற நகைய... குறஞ்ச வட்டிக்கி நீங்க வச்சுட்டு வர்றத... ஒங்க பொண்ணு சொல்லிட்டா...? மனசாட்சியத் தொட்டு நல்லா பாத்துச் சொல்லுங்க...இது ஒங்க பொண்ணு நகையான்னு...?


      நான் நாகரிகம் தெரிந்தவனாக்கும்...

      ‘ நாலு பக்கம் வேடர் உண்டு... நடுவினிலே மான் இரண்டு...காதல் இன்பக் காதல்!

      காட்டினிலே கூடுகட்டி... கூட்டினிலே குருவி இரண்டு கூடல்...கொஞ்சம் ஊடல்...

      அம்மம்மா... என்னம்மா...?’

      நன்றி.

      த.ம.2.

      ReplyDelete
      Replies
      1. பக்கத்தில் போனால் பத்திக்குமோ :)
        தலைவரின் சுயரூபத்தை படம் பிடித்துக் காட்டிவிட்டீர்களே :)

        பொண்ணு நகையும் அங்கேதானா :)

        ‘ நாலு பக்கம் வேடர் உண்டு... நடுவினிலே நாய்கள் இரண்டு...காதல் இன்பக் காதல்! ன்னு பாடி மகிழ்ந்ததை நினைவு படுத்தி விட்டீர்கள் :)




        Delete
    4. Replies
      1. ரசனைக்கு நன்றி :)

        Delete
    5. 01. உடையே பிரட்சினையா ?
      02. இதைச் சொல்லிக்கூட கடன் வாங்கலாமோ....
      03. மனசாட்சி இருந்தாவுல அடகு வைக்க ?
      04. அதுக்காக 4 பேருக்கு தெரியும்படி கேட்க முடியுமா ? பாஸ்.

      ReplyDelete
      Replies
      1. 1.உடையில் இல்லை ,பார்க்கிறவனின் கண்ணால் பிரச்சினை :)
        2.அதே வங்கியிலா :)
        3.இருந்தாலும் அதை எவன் வச்சுப்பான் :)
        4.மெரீனா பீச்சில் நாலு பேருக்கு முன்னாடியே எல்லாம் நடக்கிறதே :)

        Delete
    6. உடை பகையில்லை..சமூகம்தான் பகை......

      ReplyDelete
      Replies
      1. சமூக விரோதிகளால் :)

        Delete
      2. நாமும் சமூகத்தில் எவ்வளவு நல்ல பிள்ளைகளாய் இருக்கிறோம் :)

        Delete
    7. Replies
      1. நீங்க இருக்கிற டெல்லியில் இருக்கும் காதலர்களுக்கு இந்த நாகரீகம் இருக்கிறதென்று எனக்குத் தெரியலே :)

        Delete
    8. Replies
      1. அடுத்த உங்க கலக்கல் எப்போ :)

        Delete
    9. ரசித்தேன் சகோ!

      ReplyDelete
      Replies
      1. இனிய /யா வருகைக்கு நன்றி :)

        Delete
    10. ஹஹஹ் எல்லாமே சூப்பர் என்றாலும் உங்கள் பதில்கள் சகோதரி மைதிலிக்கும், க்ரேஸ் அவர்களுக்கும் அவர்களது பின்னூட்டம் உங்கள் பதிலகள் மிகவும் ரசித்தோம்....

      ReplyDelete
      Replies
      1. தாய்குலத்தின் சார்பில் வந்து சிந்திக்க வைத்த சகோதரிகளுக்கு மீண்டும் நன்றி :)

        Delete
    11. வணக்கம்
      ஜி
      இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 11

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்--

      ReplyDelete
      Replies
      1. கந்து வட்டியால் நொந்தவரின் கேள்வி சரி தானே ,ரூபன் ஜி :)

        Delete