-------------------------------------------------------------------------
இருந்தாலும் இவருக்கு இவ்வளவு கரிசனம் கூடாது :)
''மேற் கூரையில் திறக்கிற மாதிரி மூடி வச்சிருக்கீங்களே ,ஏன் ?''
''கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கிறக் கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ..!
''மேற் கூரையில் திறக்கிற மாதிரி மூடி வச்சிருக்கீங்களே ,ஏன் ?''
''கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கிறக் கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ..!
கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் முடியணும்!
''அய்யா பெரியவரே ,கிராமத்தில் இருந்து வந்து இருக்கீங்க சரி ,மேட்னி ஷோவுக்கான 'கரண்ட் 'புக்கிங் முடிஞ்சுப் போச்சே !''
''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பீங்க !''
''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பீங்க !''
சரி தானே...!
Bagawanjee KA8 April 2014 at 08:47
முன்பு 24 மணிநேரமும் கரண்ட் வந்தது ,இன்வெர்ட்டர்,ஜெனரேட்டர் என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது ,இன்றுள்ள நிலையில் கிராமப்புறத்தானுக்கும் இதெல்லாம் தெரிந்த சங்கதி ஆகிப் போச்சு ,அவங்களை ஏமாற்ற முடியுமா ?
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று8 April 2014 at 22:15
அவரை யாராலும் ஏமாத்த முடியாது .
Bagawanjee KA8 April 2014 at 22:55
டிக்கெட் கொடுப்பவர் கரண்டிலே காலை வச்சமாதிரி அரண்டுதான் போனார் ,அந்த கேள்வி காதில் விழுந்தவுடன் !
எனக்கு மட்டும் எங்கேருந்து தான் கெளம்பி வாராங்களோ னு தியேட்டர்காரர் கொளம்பி தவிச்சாரோ?
Bagawanjee KA8 April 2014 at 22:49
நல்ல வேலை ,ஜெனரேட்டர் புக்கிங்னு சொல்லி ரெண்டு மடங்கு வசூலிக்காமல் போனாரே !
சைதை அஜீஸ்8 April 2014 at 14:54
நல்ல வேளை கரெண்ட் புக்கிங் செய்துள்ளேன், எங்க வீட்டுக்கு கரெண்ட் சரியா வந்துடணும் என்று சொல்ல முடியாதபடி செஞ்சுட்டீங்களேஜீ!
Bagawanjee KA8 April 2014 at 22:46
EB ஆபீசிலேயே கரண்ட் புக்கிங் கிடையாதே ,எப்போ கரண்ட் வரும்னு கேட்டால் ...யாருக்கு தெரியும் ?எதுக்கும் போன் நம்பரைக் கொடுத்துட்டு போங்க ,வந்ததும் சொல்றோம்னு தானே சொல்றாங்க ?
குடிகாரங்க தப்பாப் புரிஞ்சுக்கக் கூடாது !
''உங்க வீட்டுக்காரர் உடம்பு தேறணும்னா நிறைய பழங்கள்
சாப்பிடணும் !''
''பழங் 'கள் ' சாப்பிட்டு பாழாப்போன மனுசனுக்குப் புரியுற
மாதிரி நல்லா சொல்லுங்க ,டாக்டர் !''
திண்டுக்கல் தனபாலன்8 April 2013 at 10:58
தெளிய வைப்பது சிரமம் தான்...
Bagawanjee KA8 April 2013 at 11:16
|
|
Tweet |
1) என்ன கருணை, என்ன கருணை!
ReplyDelete2) அம்புட்டு அப்பாவியா!
3) அடப்பாவமே!
4) அது எப்படி?
1. டீசல் லோடு லாரி ஓட்டுனராய் அவர் இருப்பாரோ ,,அந்த டாங்கரில்தான் இப்படி திறக்கிற மூடி போடப் பட்டிருக்கும் :)
Delete2.இல்லேன்னா ,கிராமத்தில் இருந்து இந்த கண்றாவிப் பார்க்க வருவாரா :)
3.பழங்கள்ளால் பழங்களால்தானே போகும் :)
4.சுட்டுக் கொல்லப் பட்ட ஒரு ரௌடியின் பெயர் தென்றல் மோகன் ,இது மாதிரி நிறைய :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 2
முன்னேற்பாடு முத்தண்ணாவை உங்களுக்கு இதற்கு முன் உங்களுக்கு தெரிந்திருக்காதே :)
Deleteகூரையைப் பிக்கிற நேரம் மிச்சம் ஆகுமுல்ல... ‘காலம் பொன் போன்றது’ பழமொழியை மதிக்கனுமுல்ல...! கொஞ்சம் பொறுங்க... பொன்மகள் இறங்கிறமாதரி தெரியுது...!
ReplyDeleteகரண்ட்டு... புக்கு... கிங்கு... இதெல்லாம் வேணாமுங்க... நா சொல்றது புரியல... ஒரே ஒரு டிக்கட் ‘கிழக்கே போகுத் ரயிலுக்கு’ கொடுங்க... அது போதும்!
எ புருஷன் பழங் கள் குடிச்சாலும்... பாலத்தான் குடிகிறாருன்னு... தப்புத்தப்பா பேசுறாங்க... இதெல்லாம் சொல்றதுக்கே எனக்கே வெக்கமா இருக்குன்னா பாருங்களே...!
ஹீரோவா ஆவரது இருக்கட்டும்... மொதல்ல வாழ்க்கையில நடிக்கிற விட்டுட்டு மனுசனா இருங்க...!
பொன் மகள் வேடத்தில் கொள்ளைக்காரியான்னு நல்லா பாருங்க :)
Deleteஅதுக்கு எதுக்கு டிக்கெட்டு ,வித் அவுட் லே போகலாமே :)
வெட்கத்தைப் பரர்த்தா ,அவர் குடிச்சு வைக்கிற மிச்சத்தை நீங்களும் குடிப்பீங்க போலிருக்கே :)
ஹீரோவான பிறகு நடிக்கலாம் ,அப்படித்தானே :)
த.ம.3.
ReplyDeleteபழங்கள்
ReplyDeleteபோதை அதிகம்
நகைபோதை தான் ...
தம +
ஆணுக்கு நகை போதை ,பேதைக்கு நகை போதையா :)
Deleteகாற்று நல்லாவே வரும்...!
ReplyDeleteகாசு பணம் கொட்டாதா :)
Deleteகரண்ட் புக்கிங் நான் அதிகம் ரசித்த நகைச்சுவை.
ReplyDeleteஜெனரேட்டர் புக்கிங் என்றதும் டிக்கெட் கொடுப்பவர் அரண்டு விட்டதை ரசித்தீர்கள் போலிருக்கே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
மழைத்துளிகள் பட்டு நீண்ட நாள் அதனால் திறந்து வைத்திருப்பார்கள்... ஆகா... ஆகா.... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மழைத் துளிகள் விழுந்ததும் 'துளித் துளி மழைத்துளி 'என்று பாடவும் செய்வார்களோ :)
Deleteபகவான்ஜி தலைப்பை படிக்கும் போது என்னென்னவோ மனதில் தோன்றுகிறது. ஆவலாக படித்தால் நான் நினைத்த கேரக்டர் கூட அந்த பதிவுகளில் வருவதே இல்லை. ஆனாலும் ரசித்தேன்.
ReplyDeleteத ம 10
காரியம் என்றால் நீங்க என்னான்னு நினைச்சீங்க ......பல்பு வாங்கிட்டேன் என்பதையும் ரசித்தேன் என்று சொன்ன பெருந்தன்மைக்கு நன்றி :)
Deleteகூரையைப் பிய்ட்துப் போடும் போது கூரை பாழாகும் அதை இவர்தானே ரிப்பேர் செய்ய வேண்டும் . அதுதான் முன்னேற்பாடாக.பழங்கள் சாப்பிட்டுத்தானே உடம்பு இப்படி ஆயிற்று.
ReplyDeleteரிப்பேர் செலவை மிச்சப் படுத்தத் தானே மூடி போட்டு இருக்கார் :)
Deleteஅப்படின்னா இப்போ பழைய கள்ளைக் குடிக்கணும்னுசொல்றீங்களா :)
01. இதுக்கு கூரைக்கு மேலே ஸூட்கேஷை திறந்து வச்சிடலாமே...
ReplyDelete02. சரியாத்தானே கேட்டு இருக்காரு பெரியவரு...
03. நல்லவேளை கூழாங்‘’கள்’’ சாப்பிடச்சொல்லலையே...
04. அடைமொழி நல்லாத்தான் இருக்கு மாட்டிக்கிட்டா ஜீரோதான்
1.கூரையைப் பிச்சிகிட்டு கொட்டுற அளவிற்கு பிடிக்கக்கூடிய சூட் கேஸுக்கு எங்கே போவார் ,பாவம் :)
Delete2.பெரியவர் கேட்டா அந்த பெருமாள் கேட்ட மாதிரியா :)
3.செரிக்கும்னா அதையும் சாப்பிடச் சொல்வார் :)
4.தொழிலை அல்ல ,பெயரில் இருக்கும் தனித்தன்மையை மட்டும் எடுத்துகிட்டா ஜீரோ ஆக மாட்டாரே :)
கரன்ட் ஜெனரேட்டர் செம காமெடி...சிரிச்சு மாளல....
ReplyDeleteபழங்க கள் அஹஹஹஹ்...செம..
வீட்டில் இன்வர்ட்டர் ,தியேட்டரில் ஜெனரேட்டர் இருக்கும்னு தெளிவாக தெரிந்து வைத்திருப்பவரை ஏமாற்ற நினைத்தால் முடியுமா :)
Deleteஅதிக ருசி ...பழம்னா புதுசு ,கள்ளுண்ணா பழசுன்னு அவருக்குத் தெரியாமலா இருக்கும் :)
super ji
ReplyDeleteஉங்களின் ரசனைக்கு நன்றி :)
Deleteகடவுளுக்கும் தொந்தரவு தராத நல்ல மனசு..... :)
ReplyDeleteரசித்தேன்.
நல்ல மனசுக்கு கூரையைப் பிச்சிக்கிட்டு எதுவும் கொட்ட மாட்டேங்குதே :)
Delete