19 April 2015

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :)

----------------------------------------------------------------------------------------

யோசிக்க வேண்டிய விஷயம் இது :)          

                 ''என்னங்க ,பசி மயக்கத்தில்  காது கேட்கலைன்னு நீங்க சொல்றதை நான் நம்பத் தயாராயில்லை ! ''

                  ''ஏன் ?''     

                ''சாப்பாடு ரெடின்னு சொன்னதும் , கையைக் கூட  கழுவாம  தட்டைத் தூக்குறீங்களே !''

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் !

            ''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க 
மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரர் தாராள மனசைப்  பாராட்டலாமே !''
           ''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை 
விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
சே. குமார்19 April 2014 at 01:13
குறட்டைக்காக பரிகாரமா?
ஊருக்கு உபகாரி ,வீட்டுக்கு அபகாரின்னு வேற அந்த அம்மா புருஷனை பரிகாசம் செய்வதாக கேள்விபட்டேன் !
  • சே. குமார்19 April 2014 at 22:42
    ஹா.... ஹா... இது வேறயா? சரிதான்...
  • எல்லோர் வீட்டிலும் கணவனுக்கு கிடைக்கும் பட்டம்தானே ?
  • அம்பாளடியாள் வலைத்தளம்19 April 2014 at 05:38
    உண்மையச் சொல்லுங்க யாரந்தாள் ?....தானமா கொடுக்கிற
    தூக்க மாத்திரைய வச்சே கொண்னுபுடுவேன் கொண்ணு :)))))
  • Bagawanjee KA19 April 2014 at 08:23
  • பத்து வீட்டை எடுத்துகிட்டா நாலு வீட்டிலாவது 'அந்தாள் 'இருக்கத்தானே செய்றான் ,எத்தனைப் பேரைக் கொல்லப் போறீங்க ?

  • நன்றி மறவாத வெஜிடேரியன் !

              ''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர்

     SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''

             ''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு

    மட்டற்ற மகிழ்ச்சியாம் !''

    தடை எதுக்கு வரணுமோ ,அதுக்கில்லையே !
    மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ...
    சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை ஏன் தடை செய்ய  முடியலே ?
    மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நமது நிராயுதபாணி  மீனவனைக்
    கொன்றுக் குவிப்பதை  ஏன் தடை செய்ய  முடியலே ?



    28 comments:

    1. அனைத்தையும் ரசித்தேன். சிக்கன விருந்தை அதிகம் ரசித்தேன்.

      ReplyDelete
      Replies
      1. சிக்கன் இல்லாமல் சிக்கன விருந்தா என்கிறார்களே ,NV பிரியர்கள் :)

        Delete
    2. மட்டற்ற மகிழ்ச்சி
      தம +

      ReplyDelete
      Replies
      1. என்னாச்சு ,நம்ம தலைங்க மட்டன் ,சிக்கன் சாப்பிட்டுக் கவுந்துட்டாங்களா ,சபையிலே ஒரு கலகலப்பைக் காணாமே :)

        Delete
    3. Replies
      1. இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை ,வீட்டிலே மட்டன்தானே :)

        Delete
    4. சிந்திக்க வேண்டிய தடை ஜி...

      ReplyDelete
      Replies
      1. ஆனால் ,தடை போடத்தான் ஆளில்லை :)நம்ம எல்லையில் நம்ம மீனவன் மீன் பிடிக்கலே ,கேரள மீனவன் வந்து மீன் பிடிச்சானாம் ,கேரள அரசு ஏன் மீன் தடைக் காலம் அமுல் படுத்தலே:)

        Delete
    5. மட்டற்ற மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சி!

      ReplyDelete
      Replies
      1. நீங்கள் தீவிர சைவப் பிரியரா :)

        Delete
    6. ‘ பசி மயக்கத்தில் காது கேட்கவில்லை என்று சொன்னால் செவிடு என்று அர்த்தம் கொள்ளலாமா?பத்து வீட்டை எடுத்துக்கிட்டால் நாலு வீட்லயாவது போதாது இன்னும் அதிக வீட்டில் அந்தாள் இருப்பார். சில நேரங்களில் ஒரே வீட்டில் அந்தமாதிரி பலரும் இருப்பார்கள்

      ReplyDelete
      Replies
      1. தற்காலிக செவிடு கூட இல்லையென்றுஅவர் நிரூபித்து விட்டாரே :)
        உபகாரிகள் எண்ணிக்கை அதிகம் உண்மைதானா :)

        Delete
    7. 01. ஜி பதிவுக்காக வீட்டு விசயத்தையுமா ? எழுதுறது
      02. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்குமோ....
      03. மட்டமான விருந்துனு சொல்லாமல் சொல்றாரு...
      04. நியாயம்தான்.

      ReplyDelete
      Replies
      1. 1.வீட்டுக்கு வீடு வாசப்படிதானே :)
        2.என்னைக்கும் என் நெஞ்சு குறுகுறுத்ததில்லை ,அதனால் எனக்குத் தெரியலே :)
        3.மட்டன் விரும்பிக்கு அப்படித்தான் இருக்கும் :)
        4.ஆட்சி மாறினாலும் காட்சி மாற மாட்டேங்குதே :)

        Delete
    8. பசியில பத்தும் மறந்து போகும்போது கை கழுவது எப்படி இருக்கும்...

      ReplyDelete
      Replies
      1. பத்தோட இதுவும் ஒண்ணுன்னு நினைச்சுக்க வேண்டியதுதான் :)

        Delete
    9. ஜி என்ன இப்படியா உண்மையைச் சொல்றது,
      சூப்பர்
      இளிச்சவாயன் கிட்ட தான் தடைப் போட முடியும்.

      ReplyDelete
      Replies
      1. உண்மை ஒருநாள் வெளியே வந்துதானே தீரும் :)

        அப்படின்னா தடை போடுபவன் எப்படி மாங்கா மடையனா இருப்பான் :)

        Delete
    10. “பசி வந்தால் பத்தும் பறந்து போகுமுன்னு கேள்விப்பட்டதில்லை... ஒன்னுதானே போயிருக்கு...”
      ”என்ன அப்படி சொல்லிட்டு ஒரு கண்ணச் சாய்ச்சு கண்அடிக்கிறீங்க... ஆமா ஒங்களுக்கு என்ன பசி...?”
      “நானெல்லாம் கண் பார்ட்டின்னு தெரியாதா...?”


      “ குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்... தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிறதுனால...எங்கே எல்லா தூக்க மாத்திரைய நா முழுங்கிறுவேன்னு பயத்தில கொடுத்திருப்பாரு...”


      மட்டமான விருந்துன்னு சொல்லி... யாரோட மட்டற்ற மகிழ்ச்சியையும் எப்பொழுதும் நா கெடுக்க மாட்டேன்...!


      மீன் அவன் நண்பனா...?

      த.ம. 10.

      ReplyDelete
      Replies
      1. கன்பார்ட்டியா ,கண் பார்ட்டியா :)

        அந்த பயமாவது இருக்கே :)

        மட்ட ன்இருக்கோ இல்லையோ ,நீங்க சொல்றது சரிதான் :)

        Delete
    11. ஹஹஹஹஹ ஜோக்காளியின் அனுபவ விவரணம் அருமை.....அப்பாப்ப வந்து கிட்டேதான் இருக்கு....

      அந்த சிக்கனற்ற, சிக்கனமற்ற விருந்தை மிகவும் சுவைத்தோம்.....

      ReplyDelete
      Replies
      1. சோறுன்னா ஜோக்காளி சோழவந்தானுக்கே போவாருன்னு சொல்வீங்க போலிருக்கே :)

        நீங்களும் வெஜ் தானா :)

        Delete
    12. வணக்கம்
      ஜி
      இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. தாமதம் என்றாலும் வருகைக்கு நன்றி :)

        Delete
    13. ஹாஹாஹா! அனைத்துமே அருமை! வாழ்த்துக்கள்!

      ReplyDelete
      Replies
      1. 'அருமை 'கருத்து போட்டமைக்கு நன்றி :)

        Delete
    14. சாப்பாடு ரெடி - அதைக் கேட்க மட்டும் தானே காது தயாரா இருந்தது! :)

      ReplyDelete
      Replies
      1. சொல்லவில்லை என்றாலும் அதுமட்டும் காதில் விழும் :)

        Delete