''என்னங்க ,நம்ம பொண்ணைப் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான் கூட்டிட்டு வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
'' டிவி சீரியல்களைப் பார்க்காததால் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு !''
வா x யை மூடி பேசவும் முடியும் என்றால் .....!
''அந்த படத்தைப் பார்க்கப் போறேன்னு
சொன்னா ...காதை மூடி கேட்கவும்னு ஏன்
சொல்றீங்க ?''
''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''
சொன்னா ...காதை மூடி கேட்கவும்னு ஏன்
சொல்றீங்க ?''
''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''
கல்யாணமானா ஒரே சோகம்தானா ?
''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத
ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''
ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''
''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது
சிரிக்கட்டுமேன்னுதான் !''
சிரிக்கட்டுமேன்னுதான் !''
குறள் வழி நடக்கும் நாய் !
சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...
நாய் வாலறுந்த பின்னாலும்
வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய்
நாய் வாலறுந்த பின்னாலும்
வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய்
அம்பாளடியாள் வலைத்தளம்28 April 2014 at 03:10
உண்மையச் சொல்லுங்கள் நீங்களும் கல்யாணம் ஆன பின்னாடி தான்
ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))
ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))
|
|
Tweet |
01. புதன்கிழமை நல்லநாளுனு சொல்லமுடியாதோ
ReplyDelete02. கண்ணையும் மூடிக்கிட்டு வீட்டுல இருந்தால் காசும் மிச்சமாகிடுமே.
03 கல்யாணமே செய்யாமல் ராஜேந்திரகுமார் எழுதலையா ?
04. அதுக்கு 5 அறிவுல அதனாலதான்.
1.சீரியல் பார்க்காதவங்களுக்கு எல்ல நாளும் நல்ல நாளே :)
Delete2வீட்டுலே இருக்க எதுக்கு கண்ணை முடிக்கணும்:)
3.அவர் நிறைய கிரைம் கதைதானே எழுதினார் :)
4.இது ஏன் 6அறிவு மனிதனுக்கு புரிய மாட்டேங்குது :)
வணக்கம்
ReplyDeleteஜி
அவர்கள் சொல்லியதில் தப்பே இல்லை. இந்த கால பெண்கள் சீரியல் பார்ப்பதில் காலத்தை கழிக்கின்றார்கள்...
அப்ப திருமணம் என்ற ஒன்றுவந்தால் சிரித்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம்.
மற்றவைகளை இரசித்தேன் த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கணவன் கழுத்தை அறுக்காமல் காலத்தைக் கடத்தினால் நல்லதுதானே :)
Deleteநெற்றிக் கண் திறந்தாலும் குற்றமா :)
1) ஹா...ஹா...ஹா... உண்மை! உண்மை!
ReplyDelete2) ஹா...ஹா... கண்ணை மூடிப் பார்க்கவும்னு சொல்லலையா?
3) ஹா...ஹா.... பார்த்து! சிரிப்பா சிரிச்சுடப் போகுது!
4) தத்துவம்!
1.சீரியலைப் பார்க்க முடியலைன்னு 'உண்மையா' அழ மாட்டாங்களா:)
Delete2.சில சீன்கள் அப்படி பார்க்கும் படியா இருக்கே :)
3.பொம்பளை சிரிச்சா போச்சுன்னு சொல்றாங்களே ,அதுக்கென்ன அர்த்தம் :)
4.நாய் வாலிலும் பிறக்குமா துத்துவம் :)
நகைப் பணி தொடர்க
ReplyDeleteஉங்க வாழ்த்திற்கு நன்றி :)
Deleteதம +
ReplyDeleteநீங்க தந்த ஊக்க மருந்துக்கு இரட்டை நன்றி :)
Deleteபல உண்மைகள் ஜி...
ReplyDeleteபலமான உண்மைகள் கூட :)
Delete''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது
ReplyDeleteசிரிக்கட்டுமேன்னுதான் !''---தங்களைப்போல் எல்லோரும் மாறிவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காதுல்ல....தலைவரே...
சிரிக்கவாவது ஆள் இருக்குமா :)
Deleteவாயை மூடிப் பார்க்கலாம் காதை மூடிக் கேட்க......!சனி ஞாயிறுதான் பெண் பார்க்கச் சரியான நாள். ஆனால் அவர்களது உண்மை முகம் தெரிய,,,,,? நாய்களுக்குத் தெரிகிறது “ இன்னா செய்தாரை.........”
ReplyDeleteகாதுலே பஞ்சை வைத்துக்கலாமா :)
Deleteஉண்மை முகம் என்றுமே தெரியாது :)
வல்லுவம் அறிந்த நாயோ :)
பகவானே!
ReplyDeleteரொம்ப நாளாச்சே குட்டன்ஜி,நீங்க நம்ம பேட்டைப்பக்கம் வந்து !
Deleteகடியை தாங்க முடியாமல், இந்த கருத்தை நீங்கள் போட்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)
ரசித்தேன்! சிரித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநானும் மகிழ்ந்தேன் உங்கள் வரவுக்கு :)
Delete1. மிக மிகச் சரியெ! ஆமாம் ஜி நம்ம தளத்திலயும் இதேதான் நீங்க சொன்னதும்....நேற்று வர இயலவில்லை...அதான் டிலே....
ReplyDeleteஹஹ் அப்படினா கல்யாணம் ஆனப்புறம்தான் எல்லாருமே ஜோக் எழுதுவாங்களா ஜி?!!!
நன்றி உள்ள ஜீவன் கள்....பாவம்...
இப்பல்லாம் படம் பார்க்கணும்னா...ஹஹஹ் காந்தி சொன்ன மூணு குரங்கைத்தான் ஃபாலோ பண்ணனும்......அப்ப படம்??!!!
.மூணு குரங்கை ரசிக்கலாம் ,குரங்காய் நாம் மாறி படத்தை ரசிக முடியுமா :)
Deleteஞாயிற்றுக் கிழமைகளில் சீரியல் பார்க்காமல் அழுவதில்லை.... ஹா ஹா.... அன்னிக்கு அழுகைக்கு ஹாலிடே!
ReplyDelete:)
ReplyDelete