15 April 2015

வீடுகள் தோறும் 'மீனாக்ஷி 'ஆட்சிதானா :)

------------------------------------------------------------------------------

நமக்கு தெரிந்தது நாய்க்கும் தெரியுமா ?

               ''சும்மா உள்ளே வாங்க,குரைக்கிற நாய் கடிக்காதுன்னு உங்களுக்குத்தான் தெரியுமே ?''

             ''கடிக்கக் கூடாதுன்னு  குரைக்கிற உங்க நாய்க்கும் தெரியணுமே !''

ரஜினிக்கும் முந்தைய நிஜ கோச்சடையான்கள் !

       ''மதுரைக்காரங்கதான் உண்மையில் கோச்சடையான்கள்னு 
சொல்றீங்களே ,ஏன் ?''
     ''அவங்க குடிக்கிற தண்ணி கோச்சடையில் இருந்துதானே வருது !''
Seeni15 April 2014 at 00:57
அட...
Bagawanjee KA15 April 2014 at 12:4
வைகை ஆற்றுத் தண்ணீர் கோச்சடை என்ற இடத்தில் சுத்திகரிக்கப்பட்டு மதுரை நகருக்கு விநியோகம் செய்யப் படுகிறது ,அதனாலே நானும் கோச்சடையான்தானே ?


சைதை அஜீஸ்15 April 2014 at 07:0015 April 2014 at 07:00
அப்போ சென்னைகாரங்க எல்லாம் சாக்கடையானா?
ஏன்னா, பாதி நாள் இங்கே தண்ணிக்கு பதிலா சாக்கடைதான் வருது !






  1. ஹாஹாஹாஹ மிகவும் ரசித்தோம்! Timely wit!
  2. அஜீஸ் ஜி ,சென்னைக்காரங்களை கூவம் வென்ற வீரர்களா நினைத்து இருந்தேன் ,சாக்கடையாணுமா?
    நன்றி
  3. துளசிதரன் ஜி ,பாலக்காடுக்கு வர்ற மலம்புழா டேம் தண்ணியைக் குடிக்கிற மலம்புழா மைந்தன் ஆச்சே நீங்க !டேஸ்டான தண்ணியைக் குடிக்கிற உங்களுக்கு சிரிக்கத்தான் தோன்றும் !
    நன்றி
  4. அஜீஸ் சார் !!செம செம!!
  5. மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் !

               ''செத்துப் போன உங்க நண்பர் 'ஆப் பாயில்'னா 
  6. விரும்பிச் சாப்பிடுவாரா ?'' 
  7.       ''ஆமா, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
  8.          ''பாடி முழுசா எரியறதுக்குள்ளே கரெண்ட் 
  9. போயிடுச்சே !''


  10. வீடுகள் தோறும் 'மீனாக்ஷி 'ஆட்சிதானா ?



    நீ பாதி நான் பாதி யென 
    ஆரம்பித்த  தாம்பத்யம் ...
    பிள்ளைகள் இரண்டு ஆனபின் 
    முக்காலும் காலும் ஆனது ...
    கணவன் மனைவி உருவிலும் கூட !  
     


27 comments:

  1. 1. முதலில் சொல்வது நாய் லாஜிக். அதையும் மீறிக் கடிச்சுட்டா..... ஸ்டார்ட் மீஜிக்!

    2. அதைவிட கோச்சடையிலேயே வசிப்பவர்கள்தான் இன்னும் ஒரிஜினல் கோச்சடையான்கள்!

    3. ஆஃப் பாயில்... கொடூரமான ஜோக்கா
    இருக்கே!

    4. அச்சச்சோ... விடுங்க... முழுசும் காணாப் போகலே இல்லே!

    ReplyDelete
    Replies
    1. 1.அவ்வ்வ்வவ்வ்வ்வ்னு மீஜிக் பாடிக்கிட்டே இருக்க வேண்டியதுதானா :)

      2.அவர்கள் மண்ணின் மைந்தர்கள் ,நாம் தண்ணீரின் மைந்தன்களா :)

      3.அவரோட ஆன்மா பார்த்து சிரித்ததாம் ..காலமெல்லாம் அரைவேக்காடை சாப்பிட்ட உனக்கு இந்த கதி தேவைதான் என்று :)

      4.முதலில் கால் போகுமா முக்கால் போகுமான்னு தெரியலை :)

      Delete
  2. நாய்கள் ....ஜாக்கிரதை...! அங்கே ஒன்னு குரைச்சுக்கிட்டே இருக்கு...!

    நிஜம் நிழலாயிடுச்சுன்னு சொல்லுங்கோ...!

    ‘போனால் போகட்டும் போடா...! இந்த பூமியில் நிலையாய் எரிந்தவர் யாரடா...?’ பாட்டு கேக்குதே...!

    முக்காபு(ல்)லான்னா இதுதானா...?

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. 1.அந்த ரெண்டு கால் நாய்தானே :)

      2.கோச்சடையானை ரஜினிதான் உலகத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டியிருக்கு :)

      3.நிலையாய் இருந்தவருமில்லை ,எரிந்தவரும் இல்லையோ :)

      4.பலா,தோல் முக்கால் ,பழம் கால் என்றும் சொல்லலாம்:)

      Delete
  3. Replies
    1. மதுரையில் இருந்து கொண்டு... என்னவொரு தைரியம் ஜி...! ஹா.... ஹா....

      Delete
    2. தைரியமா ?'மீனாக்ஷி' ஆட்சி இல்லேன்னா சொன்னேன் :)

      Delete
  4. மதுரை என்றோ சிதம்பரம் என்றோ ஏன் நினைக்கவேண்டும்.அது சரி முக்கால் யார் கால யார்.?

    ReplyDelete
    Replies
    1. நினைக்கவே வேண்டாம் ,மீனாக்ஷி ஆட்சிதானே நடக்கப் போகிறது :)
      இந்த முக்கால் ,கால் தம்பதிகளில் நீங்கள் விதிவிலக்கு அய்யா ,மதுரை பதிவர் சந்திப்பில் உங்களை நேரில் பார்த்ததால் சொல்கிறேன் அய்யா :)

      Delete
  5. நமக்கு தெரிந்தது நாய்க்கும் தெரியுமா ?.... அதுக்கும் டாஸ்மாக்கை ஊத்திவிட்டால் தெரிஞ்சிட்டு போகுது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசனை , அந்த கண்றாவியை குடிக்க வைச்சா நாய் வாந்தி எடுத்துருமே :)

      Delete
  6. அத்துனையும் அருமை. சூப்பர் ஜி,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்து துணையும் எப்பவும் வேணும் :)

      Delete
  7. 01. நல்ல கேள்விதான்.
    02. அஜீஸ் ஜி கேள்வி ரசிக்க வைத்தது.
    03. முழுசாக எரிஞ்சவங்க, ஆம்லெட் விரும்புறவங்களா ?
    04. எல்லோர் வீட்டிலும் இப்பவுமா ? ரெண்டு

    ReplyDelete
    Replies
    1. 1.நல கேள்விக்கு அந்த நாய் பதில் சொல்லக் காணாமே :)
      2.சென்னைச் சாக்கடையான் என்று FB குரூப் ஆரம்பிக்கலாம் போலிருக்கே :)
      3.ஆம்லெட்டை சாப்பிடாதவங்க எரியவே மாட்டாங்களா :)
      4.பிள்ளைகள் இரண்டுன்னா பெண்டாட்டிக் கூட வேண்டாம் என்று சொல்ல மாட்டாளே :)

      Delete
  8. //15 April 2014 at 07:00
    அப்போ சென்னைகாரங்க எல்லாம் சாக்கடையானா?
    ஏன்னா, பாதி நாள் இங்கே தண்ணிக்கு பதிலா சாக்கடைதான் வருது!
    //

    சைதை அஜீஸ் அவர்களின் ஃபோட்டோதான் இருக்கு;
    அவர் பெயரைக் காணோமே?

    ReplyDelete
    Replies
    1. அவர்தான் பிரபலமாச்சே ,போட்டோவைப் பார்த்து கண்டு பிடிக்க முடியாதவர்களுக்காக இதோ பெயரை போட்டாச்சு :)

      Delete
  9. கல
    கல
    கல
    கல
    -ன்னு
    இருக்குது
    அத்தனையும்...

    ReplyDelete
    Replies
    1. உங்க கமெண்ட்டும்


      க்

      லாயிருக்கே :)

      Delete
  10. வணக்கம்
    ஜி
    கலகலப்பான தத்துவங்கள்... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இதுவா தத்துவம் ,அவ்வ்வ்வ் :)

      Delete
  11. நகைப்பணி தொடர்க... தம +

    ReplyDelete
    Replies
    1. செய்கூலி ,சேதாரமில்லாமல் தொடரும் நகைப் பணி :)

      Delete
  12. அட ஆமாம்ல! நாய்க்குக் கடிக்கக் கூடாதுனு எப்படித் தெரியும்...கூடாதுனு தெரியற மனுஷனே அதைத்தானே செஞ்சுட்டுருக்கான்...

    ஹ்ஹ்ஹ்ஹ் ஜி பாலக்காட்டுல கூட தண்ணிக் கஷ்டம் உண்டு ஜி. என்ன சாக்கடை வராது அவ்வளவுதான்....வந்துச்சுனா கூவக்காரங்க கூவுராங்களோ இல்லையோ நாங்க கொடி பிடிச்சுக் கூவிப்புடுவோம்...



    ReplyDelete
    Replies
    1. குத்துச் சண்டை வீரர் கூட கடிப்பதில் இருந்து விதிவிலக்காய் இல்லைஎன்பது உண்மைதான் :)

      கூவக்காரங்கன்னா யாரு :)

      Delete
  13. அனைத்தையும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாளான 'பழசை 'யும் ரசித்ததற்கு நன்றி :)

      Delete