30 April 2015

கஞ்சப்பிசினாறிக்கு ஏற்ற மனைவி:)

 ஓட வைத்தவரை ,தொப்பை  ஓட வைக்குதே :)                

           ''அதோ ,அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் அவரைக் கண்டாலே  ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?''

                  ''அதுக்குக் காரணம் ,அவரது தொப்பைதான் !''


கஞ்சப்பிசினாறிக்கு  ஏற்ற மனைவி:)

              ''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?''
        ''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும்    பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''
ஹா..ஹா...

100கிராம் பேஸ்ட்டில் எக்ஸ்பைரி டேட் இரண்டு வருசம்னு போட்டிருக்கு..அந்த பேஸ்ட்டை ரெண்டு வருஷம் பயன் படுத்தணும்னா ...டெய்லி மூடியை திறந்து வைத்து மூடலாம் !
இப்பத்தான் புரியுது. செல பேர் நாள் பூரா நியூஸ்பேபர கைலவச்சிக்கிட்டே ஒக்கந்துருப்பாங்க.

கொஞ்ச நாளா மதவாதி மோதிக்கு வக்காலத்து வாங்கியே நேரம் போய்ருச்சு. அதுதான் இந்தப் பக்கம் வரமுடியல

Bagawanjee KA30 April 2014 at 18:39
ஆமா ,அடுத்த நாள் பேப்பர் வர்ற வரைக்கும் படிக்கணும்னு தானே தேதி போட்டிருக்கு !

ஓ..அந்த மோடி மஸ்தான் வேலையை வேற செய்றீங்களா ?


பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

           ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு

மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''


              ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம்

மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !


மழை அளவு குறைவு தரும் பாடம் ?
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

26 comments:

  1. 01. ஏன் முன்னாலே தாதா வாக இருந்தாரோ ?
    02. ஹோட்டல்ல போயி தோசை கேட்டாலுமா ?
    03. மட்டமான பொண்ணு அப்படினு சொல்லிடப்போறாங்கே...
    04. அந்க ஆளை துபாய்க்கு அனுப்பி வைங்க மழை வருதானு பார்ப்போம் ?

    ReplyDelete
    Replies
    1. 1.இனிமேலும் டிரிம் தாதாவாக இருக்க நினைக்கிறார் :)
      2.தோசைக்கும் உண்டோ சாகும் தேதி :)
      3.அதை சொல்லாத வரைக்கும் நல்லதே :)
      4.அங்கே நல்ல நாள்லயே மழைப் பெய்யாதே:)

      Delete
  2. வணக்கம்
    ஜி.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் நன்றாக உள்ளது இரசித்தேன். ஜி பகிர்வுக்கு நன்றி த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கடிக்கு கடி ஒரு விதம் அப்படித்தானே :)

      Delete
  3. 1) கொழுப்பு கூடக் காரணமாயிருக்கலாம்!

    2) என்ன பயன்?

    3) அல்லது காரத்துல ஸ்வீட்டையும் ஸ்வீட்ல உப்பையும் கலந்து கொடுத்துடலாம்.

    4) நான் அப்படி நினைப்பதில்லை பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. 1.கொழுப்பு குறைந்தால் உடலும் வற்றி விடுமே :)
      2.சீக்கிரம் தீர்ந்து விடும் ,கணவர் திட்ட மாட்டாரே :)
      3.பேஷ்,பேஷ்,டிபெரன்ட் டேஸ்ட்,இன்னொரு ரவுண்டு கொடுங்கன்னு கேட்டுடப் போறாங்க :)
      4. உங்களுக்கு அவ்வளவு நல்ல மனசு இருக்கப் போய்தான் இங்கே மழை பெய்கிறதோ :)

      Delete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகவான்ஜி!

    ReplyDelete
    Replies
    1. முதல் வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீ ராம் ஜி :)

      Delete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  6. அருமை அய்யா தொடருங்கள்
    சிறக்கட்டும் உங்கள் நகைப்பணி

    ReplyDelete
    Replies
    1. நான் தொடர்கிறேன் (அடுத்த மறுமொழியை தொடருங்கள் :)

      Delete
  7. Replies
    1. நீங்களும் இதைத் தொடருங்கள் :)

      Delete
  8. Replies
    1. உங்களின் சன்னா நல்லூர் பதிவை நானும் ரசித்தேன் ஜி :)

      Delete
  9. ஓடினான்...ஓடினான்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்...!

    பலசரக்கு கடையில வேலைபார்க்கிறாரா பழைய சரக்கை மட்டுமே வீட்டுக்காரார்...!

    ‘வாம்மா... மின்னல்’ வரச்சொல்லி ஓர் இடியைக் கொடுக்க வேண்டியதுதானே...!

    மழை வருது ... மழை வருது... குடை கொண்டு வா... மானே உன் மாராப்பிலே...!

    த.ம. 7.

    ReplyDelete
    Replies
    1. இல்லையே,கடலோரம் அல்லவா தினசரி ஓடிக்கிட்டு இருக்கார் :)

      பலசரக்கில் எது பழசு :)

      குடிக்கவும் ,கடிக்கவுமே இப்படி அலைகிறவர்கள்மேல் இடியை இறக்கலாம் :)

      மாராப்பு , குடை செய்கிற வேலையை செய்யுமா :)

      Delete
  10. ஓட்டுபவரே ஓடிம் காலம் தொப்பைக்கு ஜே.இனிமேல் ஸ்வீட் காரம் காப்பியும் பிடிக்கலை என்று சொல்வார்கள்சில நேரங்களில் உபயோகிப்பவரே எக்ஸ்பைர் ஆகலாம் உங்களுக்குப் பிறந்த நாளா. பிடியுங்கள் பூங்கொத்தை, வாழ்த்துக்கள். வயதைச் சொல்லலாமா

    ReplyDelete
    Replies
    1. ஓட வைக்கும் தொப்பைக்கு ஜே :)
      ஒண்ணும் பிடிக்கலேன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே :)
      பேஸ்ட்டும் வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு நினைச்சா இப்படித்தான் :)
      பதினெட்டு வருசம்தான் ,உங்கள் வயதை விட குறைவு :)

      Delete
  11. தொப்பை குறைய ஓடுகிறாரா? அவர் ஓட்டியவர்கள் ஓட வைக்கிறார்களோ? ரொம்ப கருமியான ஆசாமிபோலிருக்கு! மட்டமான ஸ்வீட் கூட இவங்களுக்குத் தரக்கூடாது! பலர் நினைப்பு இப்படித்தான்! சுவையான நகைச்சுவைகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது சரிதானே :)

      Delete
  12. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உழைக்கும் வர்க்கத்தில் பதிவர்கள் நாமும் உண்டுதானே :)

      Delete
  13. தொப்பை எப்படியெல்லாம் படுத்துது பாருங்க! :)

    ReplyDelete