16 April 2015

ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா :)

---------------------------------------------------------------------------------

நண்பனின் மனம் அறிந்த நண்பேண்டா  :)

               ''பக்கத்துக்கு தெருவிலே இருக்கிற அந்த ராசியான மருத்துவமனையின் பெயரும் ,டாக்டரின் பெயரும் ஞாபகத்தில்  வரவே மாட்டேங்குதே.....!''

                ''சரி ,சரி ..நர்ஸோட பெயரைச் சொல்லு,நான் போய் பார்த்துக்கிறேன் !''
 

ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா ?

                 ''உன் மனைவி பெயர் கலாவதிதானே ,காலாவதின்னு ஏன் சொல்றே ?''
           ''ஓடிப் போனவளை வேற எப்படி சொல்றது?''
சைதை அஜீஸ்16 April 2014 at 06:58
காலாவிதி !
கணவனுக்கு தண்ணி காட்டிட்டு போனதால் காலாபானின்னும் சொல்லலாமோ :)
வலிப் போக்கன்17 April 2014 at 20:42
ஓடியா... போயிருப்பாங்க...
பிறகென்ன ,புருஷனா மறு வீட்டுக்கு அனுப்பி இருப்பார் ?

போலிகள் நிறைந்த உலகமடா !

      ''நீங்க போலி டாக்டர்னு பேசிக்கிறாங்க ,நீங்க தர்ற 
மாத்திரையும் போலின்னா எப்படி குணமாகும் ?''
     ''ஸ்கேனைப் பார்த்து நான்  சொன்ன நோயும் போலிதான் ,டோன்ட் ஒர்ரி !''

ஒரு தலைக் காதல் ஜெயிக்குமா :)

நீ விரும்புவதோ அவளை ...
அவள் விரும்புவதோ அவனை ...
மூணு சீட்டிலேயே  உன்னால் ஜெயிக்க முடியாது !
முக்கோண காதலில் ...?நோ சான்ஸ் !


32 comments:


  1. 1) ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா ?
    மனைவி பெயர் மாறிடும்! அதே சமயம்
    புருஷன் பெயர் நாறிடும் பகவான் ஜி!

    2) மயிலுன்னு பேர் வச்சா அது பறந்துடுமா? பகவான் ஜி!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. 1.நம் சமூகத்தில் அப்படி புருஷன் நாறுகிற மாதிரி தெரியலை ,கலாவதி போனால் ரூபாவதி கிடைத்து விடுகிறாளே :)

      2 .சப்பாணியைப் பார்த்து வேண்டுமானால் மயிலு பறக்கும் :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    ஓடிப்போன மனைவியின் பெயர் நிச்சயம் மாறி விடும்.... (தாசி ஆவாள்)
    அதாவது நான் மலேசியா வந்த போது. போலி கிளினிக் என்ற வார்த்தை எழுதியிருந்தார்கள்.. நான் நினைத்தேன் வேறு ஏதாவது இருக்கும் என்று.... தங்களின் நகைச்சுவை நினைவுக்கு வந்த போது நினைவு வந்தது. மற்றவைகளை இரசித்தேன் த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாசி ஆவாள் என்பதைப் படித்ததும் அதிர்ந்து போனேன் ,அவ்வளவு மோசமாக எல்லோரையும் நினைக்க வேண்டியது இல்லை ,கணவன் கூட 'கணவனாக 'இல்லாமல் இருக்கலாம் அல்லவா :)
      poly கிளினிக் என்பதை தமிழில் போலி கிளினிக் ஆக்கி விட்டார்களா :)

      Delete
  3. 1. புத்திசாலி நண்பன்!

    2. ஜோக்கும் சூப்பர். பின்னூடமும் சூப்பர்!

    3. நோயாளியை கள்ள நோட்டை ஃபீஸா தரச் சொல்லுங்க!

    4. பாவம்!

    ReplyDelete
    Replies
    1. 1.உன் நண்பனைச் சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்று சும்மாவா சொன்னார்கள் :)

      2.காலா பானியும்தானே:)

      3.அவருக்கு ஏமாற்ற மட்டும்தான் தெரியும் :)

      4.ஒரு தலை ராகம் ,வேறு ரூபம் எடுக்காவிட்டால் சரிதான் :)

      Delete
  4. Replies
    1. தங்களின் பண்ணாராய்ச்சி வித்தகர் பதிவை நானும் ரசித்தேன் நண்பரே :)

      Delete
  5. அவளத்தான் செவிலித்தாயாக்கிட்டியே...!

    அப்ப காலாவதி... இப்ப கால்மிதியா...?

    கூட்டம் சேர்க்கிறதுக்கு... நா செஞ்ச ஏற்பாடுதான்... அவரும் போலி நோயாளிதான் ... ஒன்னும் பயம் வேண்டாம்! உண்மை நோயாளி வரட்டும்... அப்பத்தான் உண்மை தெரியும்...!


    எனது காதல் இலக்கியக் காதல் என்று சொல்லுங்கோ...! ‘கைக்கிளை’ என்பது ஒருதலைக் காதல் ஆகும்...! இனி அப்படிச் சொன்னாத்தான் பெருமையா இருக்கும்.... வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு அழகு...!

    நன்றி.

    த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. செவிலித் தாய் என்றாலும் ,சிஸ்டர் என்றாலும் ஜொள்ளை நிறுத்த முடியலையே :)

      கால்மிதி இருக்க வேண்டியது இடம் வாசலுக்கு வெளியில்தானே :)

      எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்கன்னு தெரியலியே :)

      கைக்கிளை ,மரக் கிளை என்றால் இப்போ யாருக்குப் புரியுது :)

      Delete
  6. காதல் சூதாட்டம் ஆனால் தேறாது ஜி...

    ReplyDelete
    Replies
    1. சூதாட்டம் நடத்துறவங்களுக்கு தேறும்தானே:)

      Delete
  7. ரெண்டு சீட்டிலே பிடிக்க முடியாததை மூனு சீட்டில் பிடித்துவார் என்றே எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பஸ்ஸில் வேண்டுமென்றால் பிடிப்பார்:)

      Delete
  8. தம +

    நகைப்பணி தொடர்க

    ReplyDelete
    Replies
    1. தொடரும் உங்களின் ஆதரவுக்கு நன்றி :)

      Delete
  9. Replies
    1. உங்களின் த ம தசமும் அருமை :)

      Delete
  10. ஹாஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன்! காலாவதி டைமிங்கில் அசத்துகிறது!

    ReplyDelete
    Replies
    1. கலாவதி போனதும் நல்ல டைம்தான் போலிருக்கே :)

      Delete
  11. மூணு சீட்டு ஆட்டம் போலக் காதலும் சூதாட்டமா?நர்ஸின் பெயர் கேட்கும் நண்பனுக்கேற்ற நண்பன்

    ReplyDelete
    Replies
    1. காதலில் பணம் இழப்பு உண்டுதானே :)
      நர்ஸ் பெயர் மட்டும் நாக்கிலேயே நிற்கும் என்பதால் கேட்கிறான் :)

      Delete
  12. 01. நண்பேன்டா....
    02. புருஷன் பேரு கலாநிதியா ?
    03. இருந்தாலும் இந்த நகைச்சுவை போலியில்லை.
    04. ஜி இடையில் நான் முயற்சிக்கலாமா ?

    ReplyDelete
    Replies
    1. 1.அவனும் அந்த நர்சின் FAN னா இருப்பானோ :)
      2.பொருத்தமாப் படலையே:)
      3.உண்மையான நகைச் சுவை ?நன்றி :)
      4.நிறைய காசு பணம் சேர்த்துகிட்டு முயற்சி பண்ணுங்க :)

      Delete
  13. காதல், முக்கோண காதல்,
    நர்ஸின் பெயர் ,சூப்பர் நண்பன்,
    ஓடிப்போன மனைவி பெயர்,,,,,,,,,
    அத்துனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. கீழிருந்து மேலாக சொல்லும் கருத்தும் அருமை :)

      Delete
  14. ஆஸ்பத்திரினாலே டாக்டருங்க பெயரை விட நர்சுங்க பெயர்தான் எடுபடுமோ..

    ஓடிப்போன கலாவதி கலாஅவதிதானே!

    பின்னூட்டங்கள் அருமை ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஸ்பெசலிஸ்ட் என்று நர்ஸ் பெயரையும் எழுதிப் போட்டு விடலாமா :)

      அவதி யாருக்கு என்று இனிமேல்தான் தெரியும் :)

      ஊட்டம் தரும் பின்னூட்டங்கள் ஆச்சே :)

      Delete
  15. நர்சின் பெயர் கமடிதான் ஜீ!

    ReplyDelete
    Replies
    1. kamadi இல்லை kamini ஆகியிருக்கும் :)

      Delete
  16. நர்ஸ் பேரு சொன்னாலே தெரிஞ்சுடும்! அதானே!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பேருகூட வேண்டாம் ...:)

      Delete