எப்படியாவது தலைவராகணும் ::)
''நாலடி உயரம் இருக்கிற நான் பஞ்சாயத்து தலைவர்கூட ஆக முடியாது போலிருக்கு ,அதனாலே ... !''
''என்ன செய்யலாம்னு இருக்கீங்க ?''
மனைவி சொன்னால் அதில் நியாயம் இருக்கும் !
''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்ட்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன் ?''
''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியல ....நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு கிண்டல் பண்றாளே !''
இட்லி மாவிலே உருட்டுக் 'கல்லை'யும் சேர்த்து ஆட்டுவாங்களோ !
''பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர்
திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''
திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''
நல்லவர்கள் எண்ணிக்கையில் அடங்கி விட்டார்கள்,ஆனால் ......?
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...
கடைந்தெடுத்த அயோக்கியர்களும் வாழ்கிறார்கள் !
கடைந்தெடுத்த அயோக்கியர்களும் வாழ்கிறார்கள் !
அம்பாளடியாள் வலைத்தளம்29 April 2014 at 02:06
அட அந்த சர்வருக்கு திமிர் மட்டும் இல்ல கூடவே கொஞ்சம் மூளையும் இருக்கு என்று நிரூபித்து விடார் சகோதரா :))
Bagawanjee KA29 April 2014 at 08:18
ஆமாம் ..அவருக்கு இருக்கிற மூளைக்கு ,பொங்கல்லே கல் இல்லையென்றாலும் கல்லைப் போட்டுக் கொண்டு வருவார் முந்திரி பருப்புக்குப் பதிலாய் !
K Gopaalan29 April 2014 at 20:54
அந்தக் கட மொதலாளி இன்னும் வெவரம். கல்லுக்குள் ஈரம் (படம்) பாத்ருப்பீங்க. நம்ம கடேலதான் ஈரத்துக்குள் கல் பாக்றீங்கன்னாரம்.
Bagawanjee KA29 April 2014 at 21:09
அவர் அப்படித்தான் சொல்வார் ,ஏன்னா ...எல்லோரும் கல்லுலே இட்லி மாவை ஆட்டுவாங்க ,இவர் மாவுலே கல்லைப் போட்டு ஆட்டுவறாச்சே !
|
|
Tweet |
1)எட்டடி கட் அவுட் வைத்தால்
ReplyDelete2)எட்டாத இடத்துக்கு போகலாமே?
3)கொசுவுக்கு பதிலாய் கிஸ் என்று வைத்திருந்தால்? இது எப்படி இருக்கு?
4)செங்கல்லோட சாப்பிட போனால் தெரியும் சர்வர் கதி?
எண்ணிக்கையில் அடங்காத அசுத்தங்கள் அவர்கள்§
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
1&2,நாலடி மனுஷனுக்கு எட்டடி கட் அவுட் ..ஹா ஹா ,நீங்களும் நல்லாத்தான் யோசிக்கிறீங்க :)
Deleteபோகலாம் ,திரும்பி வர முடியணுமா :)
3 கிஸ்ஸிங் சென்டர் ?
4.சர்வமும் ஒடுங்கி விடுமா ,சர்வருக்கு:)
நோய் கிருமிகள் போன்றா :)
நம்ம இந்திய நீதிபதிகள் சட்டம் படிப்பதற்கு பதிலாக இப்படி நன்றாக கடைவது எப்படி என்று கற்றுக் கொண்டிருந்தாலாவது அயோக்கியர்களை அடையாளம் கண்டு கொண்டு தீர்ப்பு வழங்கலாம் அது தெரியாமல் சட்டத்தை குடைந்து கொண்டிருப்பதால் அது மூலம் அயோக்கியர்கள் தப்பி விடுகின்றனர்
ReplyDeleteஇந்த குடைச்சல் இன்னும் எத்தனை நாளைக்கு ,முடிவுதான் நெருங்கியாச்சே :)
Deleteகட்டை பஞ்சாயத்து தலைவர் வேற
ReplyDeleteநெட்டை பஞ்சாயத்து தலைவர் வேற
ஆளுகளா? - அப்ப
உண்மையான பஞ்சாயத்து தலைவர் யாரு?
சொல்லப் போனால் ,கட்ட பஞ்சாயத்துக்கு பண்றதுக்குகூட ஆஜானுபாகுவாக இருந்தால் தானே முடியும் :)
Delete1) ஹா...ஹா...ஹா... ரொம்ப நெட்டையாக இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?
ReplyDelete2) ஹா...ஹா...ஹா... கொசு புண்ணியம் கட்டிக் கொள்கிறது!
3) ஹா...ஹா...ஹா... அப்போ மைசூர்ப் பாகுல மைசூரைக் காட்டச் சொல்லுங்கள்!
4) உண்மை!
1.எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள் :)
Delete2.உணமையை உரக்கச் சொல்கிறது :)
3.கல்கத்தா ரசகுல்லாவில்கூட கல்லைக் காட்டுவார் :)
4.தினசரி செய்திகளே சாட்சி :)
வணக்கம்
ReplyDeleteஜி
கட்டைப்பஞ்சாயத்து நகைச்சுவையை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அடடா ,நீங்கள் ரசித்ததை ரசிக்காமல் ,அடுத்த கமெண்டுக்கு சென்று விட்டேனே :)
Delete//மனைவி சொன்னால் அதில் நியாயம் இருக்கும்//
ReplyDeleteஇருந்துதானே ஆகணும். இல்லன்னு சொல்ற தைரியம் யாருக்காவது இருக்கா?
தைரியம் இல்லாததால் நியாயம் இருக்குன்னு சொல்ற மாதிரி இருக்கே :)
Deleteநியாயம் இருக்கு ஜி...! ஹா... ஹா...
ReplyDeleteகட்டியவளே இப்படி 'அவ' நம்பிக்கையாய் பேசினால் அவர் என்ன செய்வார் :)
Deleteஅப்ப...கட்டையில போறவருன்னு சொல்லுங்க...!
ReplyDeleteஜார்ஜ் தீர்ந்து போச்சுன்னு தெரியல...! சும்மா மூடிட்டு போங்கன்னு சொல்றா...!
நல்ல வேளை பொங்‘கள்’ இல்லாமப் போச்சு...!
இவர்கள் இருந்ததால்தான் அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடிகிறது...!
த.ம. 7.
கட்டையில் போனதெல்லாம் அந்த காலம் ,இப்போ அலங்கார ரத மெத்தையில் போகிறார்களே :)
Deleteஎந்த சார்ஜ் ,மீண்டும் சார்ஜ் ஏறாதா :)
தண்ணீருக்குப் பதிலாய் பீரை ஊற்றி ஆக்கினால் பொங்'கள்' தானே :)
இவர்கள் ஏழு பேர்தான் என்பதால் எண்ணிவிட முடிகிறது :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 8
இனிமேல்தான் உங்க பதிவை நான் ரசிக்கப் போறேன் :)
Deleteநெட்டையாக இருந்தால்----நெட்டைப் பஞ்சாயத்து?!!!!! அஹஹஹ்
ReplyDeleteஹ்ஹஹஹ் கொசு பேட்....டென்னிஸ் அருமை....
இட்லி மாவுல உருட்டுக் கல்லுனா இட்லி கல்லுனு சொல்லுங்க ஜி...அஹஹஹஹ்
நொட்டை பஞ்சாயத்து நடக்காமல் போனால் சரிதான் :)
Deleteஅருமைன்னு ரசிக்க இதென்ன சானியா டென்னிசா ,சனியன் கொசு டென்னிஸ் ஆச்சே :)
'கல்லு இட்லின்னா ,பூ போன்ற இட்லியில் என்ன இருக்குமோ :)
கட்டப் பஞ்சாயத்து! இரசித்தேன்!
ReplyDeleteகட்ட பஞ்சாயத்தயுமா :)
Deleteபஞ்சாயத்துத் தலைவர்னா உயரத்தில் இருந்து பார்க்க வேண்டாமா.?பொங்கல்ல கல் கேட்டதுதான். ஆனால் இட்லி மாவு எங்கேயிருந்து வந்தது.கொசு பாட்டை உபயோகிக்கத் தெரியாதவர் டென்னிஸ் கோச்சா. மனைவி சரிதானே. எல்லாம் ரசித்தேன்
ReplyDeleteஅவருக்கு தனியா உயரமான ஆசனம் போட்டால் நல்லாவா இருக்கும் :)
Deleteஇட்லி மாவு பருப்பு ,அரிசியில் இருந்து தானே வந்தது :)
அது வேறு ஆட்டமாச்சே ,பந்து அளவிலா கொசு இருக்கிறது :)
ஹாஹாஹா! கட்டை பஞ்சாயத்து தலைவரா? குட்டை பஞ்சாயத்து தலைவரா? ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல இடத்திலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே தலைவராய் இருக்கிறார்கள் :)
Delete01. இதுவும் பொருத்தமா நல்லாத்தான் இருக்கு.
ReplyDelete02. மானஸ்தன்.
03. நல்லவேளை எந்திரிச்சு வெளியே போங்கள்’’னு சொல்லமப் போனான்.
04. இது ஸூப்பரு.
1 தொடரட்டுமா பஞ்சாயத்து :)
Delete2.அடிக்க முடியலைன்னு வருத்தப் படுகிறாரோ :)
3.சொல்லி இருந்தால் ,தூக்கி அடிச்சு இருப்பாரோ :)
4 உலகம் அழியும் வரை ஏழு வள்ளல்கள்தானா:)