22 April 2015

மனைவி இப்படியும் சோதிக்கலாமா :)

----------------------------------------------------------------------------------------

உண்மையை சொன்ன உண்மை நண்பன் :)

             '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி  ,பாங்கிலே மாட்டு லோன் கேட்டா ,தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
            ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சு போயிருக்கும் !''
           

கன்னம் என்ன 'இச் ' கொடுக்கவும் வாங்கவும்தானா ?

     ''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு 
அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா  ,ஏன்  !''
    ''இதை கப்பல் உரிமையாளர் யாரிடமாவது சொல்ல உனக்கு 
தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''

சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தானோ ?

         ''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''

         ''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாம் !''

 கோவை ஆவி23 April 2014 at 07:02
ஷுகர் மேட்டர் சூப்பர்!
சுகரைக் குறைத்தால் அதற்குப் பதிலாய் சுகர் ப்ரீ மாத்திரையை கொடுப்பார்களா !
          டிபிஆர்.ஜோசப்23 April 2014 at 16:51
சுகர் இருக்கறவங்களுக்கெல்லாம் ரேஷன் சர்க்கரை இல்லைன்னு சொல்லியிருந்தா அரசாங்கத்துக்கு நிறைய சர்க்கரை மிச்சமாயிருக்கும் :))__
Bagawanjee KA23 April 2014 at 22:22
மிச்சமாகிற அந்த காசில் இன்சுலின் ,மருந்து மாத்திரைகளை இலவசமா கொடுத்தால் நல்லாயிருக்குமே ?

மனைவி இப்படியும் சோதிக்கலாமா ?

மனைவி என்னைப் பற்றி  நல்ல அபிப்பிராயம் 
வைத்திருப்பது தெரிகிறது  ...
அழகான வேலைக் காரியை வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !



23 comments:

  1. 01. இதுக்குத்தான் ஓவர் ஆக்டிங் கூடாது,
    02. நீ வெத்து வேட்டுனு காமிட்டிச்சியா ?
    03. புத்திசாலிக் கவர்ண்மெண்ட்.
    04. மனைவிக்கு பிறவியிலேயே கண்ணு இல்லையோ......

    ReplyDelete
    Replies
    1. 1.அடுத்து ஒருத்தர்,நான் நைசா மாவாட்டுவேன் என்று லோன் கேட்பதாக தகவல் :)
      2.வெத்துவேட்டுன்னு சொல்லாமல் சொன்னால் கோபம் வரத்தானே செய்யும் ?
      3. கவர் 'மண்டு '?:)
      4.இப்படி அநியாயமா கேட்கிறீங்களே ,நியாயமா:)

      Delete
  2. பால்காரரே!
    காளை மாட்டுக்கிட்ட (bank) உமது கைத் திறமை வேலைக்கு ஆகாது அய்யா!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நானும் 'ரிசர்வ் பாங்க்'கின் முன் புறம் காளைமாட்டு சிலையைப் பார்த்திருக்கிறேன்,நீங்க சொன்ன பிறகுதான் அதற்கான காரணம் புரிந்தது :)

      Delete
  3. மனைவியின் நம்பிக்கையைக் காப்பாற்றணும்!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கையை நிறைவேற்றுவாரா ,பத்து மாதம் பொறுத்திருந்து பார்ப்போம் :)

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அபிப்பிராயம் வேறு மாதிரி ஆகப் போகுது ஜி...!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் என் சந்தேகமும் ,தலைப்பைப் பார்த்தீங்களா :)

      Delete
  6. சீனியின் அளவை குறைத்து குமுற வைப்பதைவிட, சுகர் இருப்பதால் இல்லையென்று கடையை இழுத்து மூடிவிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. சீனி தேவைபடுபவர்கள் குமுறி விடுவார்களே :)

      Delete
  7. பால் கறப்பவரிடம் பணம் கறக்க முடியாதோ.?நகைச்சுவைத் துணுக்குகளின் தலைப்பு அதிகம் ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாரையும் அப்படி சொல்லி விட முடியாது ,நம்மாளு அப்படி :)
      நீங்கள் பார்க்க வேண்டிய கோணத்தில் ,நானே தலைப்பைச் சொல்லிவிடுகிறேன் ,அப்படித்தானே :)

      Delete
  8. கன்னம் என்ன இச் கொடுக்கவும் வாங்கவும் தானா, புது கண்டுபிடிப்பு,
    ரேஷன் கடை இதையும் இல்லை என்று சொல்லவா?
    மனைவியின் வேறு,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடிப்புக்கு என்ன தருவதாய் உத்தேசம் (கையில் ):)

      சொல்ல மாட்டார்கள் பலன் அனுபவிப்பவர்கள் :)

      மனைவியின் வேறு,,,,,,, என்று நீங்கள் 'கமா'க்கள் போட்டிருப்பதைப் பார்த்தால் ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே :)

      Delete
  9. ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும்... பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்... எடுத்துச் சொன்னா எடுத்துக் கொடுத்துட்டுப் போறாரு... அதுவும் முடியாதுன்னா... எங்க ஊரு பாட்டுக்காரன கூப்பிட்டு ஒரு பாட்ட எடுத்து நா விடவான்னு கேக்க வேண்டியதுதானே...!

    அவரு கன்னத்தில கைவக்க மாட்டாரு... தலையில கைவச்சுட்டு ஒக்காந்திட்டாரு...!

    கொஞ்சம் அவுங்கள்ளட்ட எடுத்துச் சொல்லி... பிரஷர் டெஸ்ட் பண்ணச் சொல்லுங்க... அப்பத்தான் இனி உப்பு அளவைக் குறைப்பாங்க... ஏன்னா உப்பிட்டவரை உள்ளவும் நெனச்சுக்கிட்டு இருப்பாங்கல்ல...!


    வேலைக்காரிக்கும் தெரியுமே வீட்டுக்காரர் அழகில்லாதவரென்று...!


    நன்றி.
    த.ம.9.

    ReplyDelete
    Replies
    1. எப்படி ஆடினாலும் பாடினாலும் இவர்கிட்டே இருந்து பணத்தை வசூல்பண்ண முடியாது என்று வங்கியாளர் புரிந்து வைத்துள்ளாரே :)

      தலையிலே கையைதானே வச்சுக்க முடியும் :)

      உள்ள வரையும் நினைச்சுகிட்டு இருக்கிற மாதிரி பிரசரையும் செக் பண்ணச் சொல்லிடலாம் :)

      அழகில்லாதவர் கண்ணில் எதுவும் அழகாய் படாதா :)

      Delete
  10. வணக்கம்
    மாட்டு லோன் எடுத்தால் அவனால் கட்ட முடியும் எனக்கு ஒரு டவுட்டு பக்கத்து வீட்டு காரன் சொல்லியிருப்பானோ.
    மற்றவைகளை இரசித்தேன் ஜி.த.ம 10
    என்னகாரணம் என்றால் தங்களின் 4 பதிவுகள் படிக்க முடியவில்லைஏன் என்றால் Reading list இல் வர வில்லை. எதுக்கும் சென்று பார்க்கலாம் என்று திறந்தால் புதிய பதிவு உள்ளது. தாமதத்துக்கு மன்னித்து விடுங்கள் ஜி..........

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அவருக்கு கியாரண்டியா , லோன் கிடைக்கும் :)

      பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு ,நம்ம கடைப் பக்கம் தினசரி தலையைக் காட்டுங்க ரூபன் ஜி :)

      Delete
  11. Replies
    1. சோதனை மேல் சோதனை ,இப்படியுமா :)

      Delete
  12. பேங்க் காரங்களுக்கு என்னவொரு சந்தேகம்!

    சுகர் இருக்கறவங்களுக்கு சுகர் கிடையாது - அடடா அரசாங்கத்துக்கு இப்படி ஒரு ஐடியா குடுத்துட்டீங்களே!

    ReplyDelete
    Replies
    1. கோடீஸ்வரன்களுக்கு கடனை அள்ளி விடுவாங்க ,ஏழை பாழைகள் கடன் கேட்டா ,கட்டையைப்போடுவதுதானே வங்கிகளின் கொள்கை :)

      Delete