6 August 2015

கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் :)

----------------------------------------------------------------------------------------------------------------

அகலக்கால் வைச்சா  சிக்கல்தான் :) 

             ''ஓடுற பஸ்ஸிலே ,கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
            ''அகலக்கால் வைச்சு டிக்கெட் கிழிச்சு கொடுத்து இருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி போட்டுகிட்டாராமே!''

இவருக்கு பேய் பயம் இருக்கும் போலிருக்கே !

                     ''என்னங்க ,இந்த லாட்ஜிலே அறைகள் சுத்தமாத் தானே இருக்கு ...ஏன் இங்கே தங்க வேண்டாம்னு சொல்றீங்க ?''

                        ''எல்லா அறைகளிலும் சீலிங் ப்பேன்களைக் கழற்றிவிட்டு பெடஸ்டல் ப்பேன்களை மாட்டி இருக்கிறதைப் பார்த்தால்,விபரீதமா ஏதோ நடந்த மாதிரி தோணுதே !''


கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் !

            ''நான்  காதலிச்சு  கல்யாணம் செய்துக்கிட்டது  ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
        ''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு 
பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !''



தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் !

திருமணமானவுடன் ஆணின் வாழ்க்கை ...
வால் கிளாக் பெண்டுலம் போல் 
அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைகிறது ...
இரு பெண்மணிகளின் தயவால் !



  1. ஸ்ரீராம்.Wed Aug 06, 12:13:00 p.m.
    - அவங்க முன் எச்சரிக்கையா இருக்காங்க... ஏன் பயப்படறீங்க?

    - தனித்தனியா மொழியா... பேஷ்! அப்புறம் தாத்தா மொழி, பாட்டி மொழி எல்லாம் வரும் போல! :))))

    - வெகு சீக்கிரமே ஒருபக்கமே நின்றும் விடுகிறது!!!!!






    1. Bagawanjee KAWed Aug 06, 08:02:00 p.m.
      மின் விசிறியைப் பார்த்தாலே இப்படி பயந்து சாகிறவரா முன் எச்சரிக்கை ஆசாமி ?

      கீப்பு மொழி உருவாகாமல் இருந்தால் சரிதான் !

      பெண்டுலம் ,இளம்பெண் பக்கம் சாய்ந்து ஆண்டுலம் ஆகிவிடுமா ?
    2. ஸ்ரீராம்.Wed Aug 06, 08:10:00 p.m.
      //ஆண்டுலம் ஆகிவிடுமா ?//

      ஹா..ஹா..ஹா...
    3. வாழையடி வாழையாய் குலம் தொடர ,தான் ஆண் என்பதை உலகத்திற்கு காட்ட அந்த பக்கம் ஆண்டுலம் சாய்ந்து தானே ஆகணும் ?



39 comments:

  1. காசு வாங்கி காசிக்கு வர்றதா வேண்டுதலையாம்...!

    பேய்... பேன் வடிவில நின்னு கொல்லுமுன்னு நினைக்கீறிங்களா...?


    தாயைப் போல் பிள்ளை...!


    வள்ளி, தெய்வானை ஒத்துப்போய்விட்டார்களே...! உ(ம்)மாவதியா...?

    நன்றி.
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. இவனுக்கு பேர்தான் தறுதலையாம்:)

      அவர் நினைப்பு அப்படித்தான் :)

      இவனுக்கு பிறக்கிற குழந்தை என்ன மொழி பேசப் போவுதோ :)

      யாரந்த மூன்றாம் உ(ம்)மாவதி :)

      Delete
  2. அட நம்ம கவுண்டமணி பாணியில் வேலை செய்திருக்கிறார்!

    ஹா...ஹா... முன்ஜாக்கிரதை முத்தண்ணா!

    பையன் சரியான உண்மை விளம்பியா இருப்பான் போல!!

    பெண்டுலம் நின்று போகாத வரை சரி!!!!

    ReplyDelete
    Replies
    1. அவரோட 'பாடி லாங்குவேஜ் ' பொருத்தமாய் தான் இருக்கும் :)

      இருப்பது நல்லதுதானே :)

      இதிலென்ன அவமானம் :)

      கீ கொடுத்தாலும் ஓடாதோ :)

      Delete
  3. பெண்டுலம் ஆடும்; ஆண்டுலம் ஆடாது!
    புரிந்ததா?

    ReplyDelete
    Replies
    1. ஏதோ கொஞ்சமா புரியுது :)

      Delete
  4. ஆகா திகில் ஜோக்கு ஒன்று இருக்கே
    தம +

    ReplyDelete
    Replies
    1. மின் விசிறியில் ,தூக்கு போட்டுக்கிட்ட ஒரு உருவம் கண்ணுக்குத் தெரியுதா :)

      Delete
  5. Replies
    1. நடத்துனர் அகலக்கால் வைத்த அழகைத் தானே ரசீத்தீர்கள் :)

      Delete
  6. எண்ட ஓமனக் குட்டியைத்தானே :)

    ReplyDelete
  7. பெண்டுலம் ஆண்டுலம் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. பெண்டுலத்துக்கு ஒரு சக்தி உள்ளதாக சொல்லப் படுகிறதே ,உங்களுக்குத் தெரியுமா அய்யா :)

      Delete
  8. Replies
    1. இந்த கமெண்ட்டை போன பதிவுக்கு கொண்டு போயிட்டீங்க ,சரியா ரூபன் ஜி :)

      Delete
  9. வணக்கம்
    ஜி

    சொல்விளையாட்டுக்கள் துள்ளி விளையாடுது.... இரசித்தேன் ஜி.த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆண்டுலம் என்ற புதிய சொல்லை அகராதியில் சேர்த்துக்கலாமா .ரூபன் ஜி :)

      Delete
  10. பெண்டுலம்,ஆண்டுலம்! சூப்பர்!

    ReplyDelete
  11. வணக்கம்,
    அனைத்தும் அருமை ஜீ,,,,,,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடனே புரிந்திருக்காதே :)

      Delete
  12. பெண்டுலம் தத்துவம் சூப்பர் ஜீ..

    ஃபேன் ஜோக்தான் புரிய சற்று நேரமாச்சு.

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. தத்துவம் கூட புரிந்து விட்டது ,ஃபேன் புரிய தாமதமாக காரணம் ,மது ஜி சொன்னது போல் ,அது திகில் ஜோக்காச்சே :)

      Delete
  13. ஹஹஹஹஹ் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. கேரளா என்றால்தான் வருவீங்க போலிருக்கு :)

      Delete
  14. அனைத்தும் அருமை ஜி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  15. அனைத்தும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  16. மொழி வழி தெரிந்த உண்மை! நன்று!

    ReplyDelete
    Replies
    1. இவன் மொழி இரண்டையும் விட அழகு :)

      Delete
  17. 01. பஸ்ஸுல ஏறுனவங்கள்ட்டதானே காசு வாங்கினார் இதிலென்ன தப்பு ?
    02. சீலிங் இல்லாத லாட்ஜுல தங்கினால் நல்லதுதான் பூகம்பம் வந்தாலும் மேலே விழாது.
    03. அப்படினாக்கா ? இவண் தமிழாளியா ?
    04. திருமணம் முடிந்தவுடன்தான் இவணுக்கு மொத்தமாவே ஆடித்தானே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. 1.வசூல் டாஸ்மாக்குக்கு போச்சே :)
      2..அப்படின்னா மொட்டை மாடிதான் பெஸ்ட்:)
      3.அப்படியே போட்டுக்கச் சொல்லிடலாம் :)
      4.தள்ளுபடி ஆடி வந்தா ,இன்னும் ஆடிப் போவான் :)

      Delete
  18. கரிக்கிடடாதான் பையன் எழுதி இருக்கான். தாய்-தந்தை மொழிகள்னு...!!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,தாய்நாடு ,தந்தை நாடுன்னு சொல்லாம போனான் :)

      Delete
  19. ''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு
    பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !''

    நல்ல தமாஷ்

    ReplyDelete
    Replies
    1. உண்மை விளம்பிக்கு உடனே வேலைக் கிடைத்து இருக்குமே :)

      Delete
  20. அதானே..

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்று சும்மாவா சொன்னார் பாரதி?

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் இந்த பாரதியின் பேரன் நிரூபித்து கொண்டிருக்கிறானோ :)

      Delete