24 April 2014

அஞ்சு ,பத்மாவுக்கு பின்னாலே பையன் அலைஞ்சா ,அப்பன் ?

''அப்பன் ,மகன் ரெண்டு பேருமே  அஞ்சு ,பத்துக்கு அலையிறாங்களா,என்ன சொல்றே ?''
''அப்பன் கையிலே காசில்லாம அலையிறார் ,மகன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானே!''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை கொடுத்திருக்காளா,எப்படி ?''
''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காமே ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !''

'சிரி'கவிதை!வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் !

ஒருசேரப் பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''


38 comments:

  1. உங்க ஊரில இதைத் தான் இரட்டைக் குடியுரிமை என்று சொல்லுவாங்களா ?..:))))
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
    Replies
    1. டாஸ்மாக் திறந்த பின்னாலே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பெருத்து விட்டார்கள் ,இன்னிக்கு நடக்கிற தேர்தலில் இரண்டு வோட்டு போட எங்களுக்கு உரிமை உண்டுன்னு வேற ரகளை செய்வதாக தகவல் !
      நன்றி

      Delete
  2. இரட்டைக் குடியுரிமைக்கு இப்படி வேற அர்த்தமா? கஷ்டம்டா சாமி!!!!

    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப தேவையான குடியுரிமை இல்லையா ?
      நன்றி

      Delete
  3. ஓஹோ
    அஞ்சுக்கும் பத்துக்கும் அப்படி ஒரு
    அர்த்தம் இருக்கா ?
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க அலைஞ்சதில்லை போலிருக்கே !
      நன்றி

      Delete
  4. விரைவில் டிக்கெட்டுக்கு ஏற்பாடு....?

    ReplyDelete
    Replies
    1. இவங்க எல்லாம் 'தக்கல்'லே போக நினைக்கிறவங்களாச்சே !
      நன்றி

      Delete
  5. 'சிரி சிரி சிரி' என்று சிரித்தேன்! (3 ஜோக்ஸ் போட்டிருப்பதால் 3 சிரி!)

    DD Comment சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிரி,....சாரி ,ஸ்ரீ ராம் !
      DDஅவர்கள் கமெண்ட் திலகமாச்சே ,அவர் கமெண்டுக்கு சொல்லவா வேண்டும் ?
      நன்றி

      Delete
  6. அஞ்சு பத்து.... - நல்ல அப்பா மகன்.....

    ReplyDelete
    Replies
    1. அதுதான் நம்ம (கீழே )துரை செல்வராஜு ஸார், நல்லா ஆசிர்வாதம் பண்ணி இருக்காரே !
      நன்றி

      Delete
  7. அஞ்சுக்கும், பத்துக்கும் சான்சே இல்ல!
    டீ நல்ல இருக்கே!:))

    ReplyDelete
    Replies
    1. நீங்களே இப்படி சொன்னா அவர் எங்கே போவார் ?
      சுகர் வராத வரைக்கும் டீ இனிக்கத்தான் செய்யும் !
      நன்றி

      Delete
  8. அஞ்சுவும் பத்துவும்[பத்மா] பொண்ணுக ஆனதால அதுகளுக்குப் பின்னால மகன் அலையுறான். என்ன தப்பு?

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா மகன் அலைவதில் தப்பே இல்லே ,அப்பன் அலைவதுதான் தப்பு ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  9. தகவலுக்கு மிக்க நன்றி நிகண்டு !

    ReplyDelete
  10. வெளங்கிடும் ஐயா.. வீடு நல்லாவே வெளங்கிடும்!..
    மகனுக்கு ஒரு சாத்து..ன்னா - அப்பனுக்கு ரெண்டு சாத்து!...
    இப்படி ஒரு புள்ளய வேலை மெனக்கெட்டு பெத்ததுக்கு!...

    ReplyDelete
    Replies
    1. ஊருபூரா இப்படி அப்பனும் ,பயபுள்ளைங்களும் தானே இருக்காக ,சாத்த ஆரம்பிச்சா நம்ம கைதானே வலிக்கும் ?
      நன்றி

      Delete
  11. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. மறுபடியுமா ?விட மாட்டீங்க போலிருக்கே !

      Delete
    2. விடாது... கருப்பு..!?....

      Delete
    3. இந்த கருப்புகிட்டே இருந்து தப்பவே முடியாது போலிருக்கே !
      நன்றி

      Delete
  12. இரட்டைக் குடியுரிமை கேரளாவில் அனைத்து ஆண்களுக்கும் உண்டுங்க!

    ReplyDelete
    Replies
    1. அங்கே மினரல் வாட்டர் மாதிரி இல்லே அதைக் குடிச்சிக்கிட்டு இருக்காக ?படிச்சவங்க நிறைந்த மாநிலம்தானான்னு நம்ப முடியலே !ஒரு வேளை கடவுளின் தேசம்ங்கிறது அப்படித்தான் இருக்குமோ ?
      நன்றி

      Delete
  13. வணக்கம்
    தலைவா..

    நகைச்சுவை அருமையாக உள்ளது ......இனி வருகை தொடரும் தலைவா...
    த.ம 6வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சிறிய இடைவெளிக்கு பின் வந்தமைக்கு நன்றி ,தொடர்ந்து வருவேன் என்று வாக்குறுதி தந்தமைக்கு இன்னொரு நன்றி ரூபன் ஜி !

      Delete
  14. அஞ்சுக்கும். பத்துக்கும் அலையறாங்களா?
    அல்லார் கைலேயும் ஐநூறும். ஆயிரமும் புறளுது ஜி!
    இன்னிக்கு ஆறு மணிக்கு பிறகு டாஸ்மாக்-ல் ஸெம யாவாரம் நடக்கும்.
    சீனி போட்டு ஒரு டீ!
    பலருக்கு வயித்துலே புளி கரைத்துவிட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இன்று காலையில் இட்லி மாவு விற்கும் அம்மா ,இன்னைக்குவியாபாரம் டல் என்றார் ,ஏனென்று கேட்டேன் ...இன்னைக்கு ஓசி பிரியாணி கிடைச்சுருக்கும் என்றார் !உண்மைதான் ,இன்னைக்கு ஐநூறும்,ஆயிரமும் புரளலாம் ,விடிஞ்சதும் டாஸ்மாக்கிலே கரைச்சிட்டு அஞ்சு ,பத்துக்கு அலையத்தான் போறாங்க !
      சீனி டீக்குகூட கண்ணு பட்டுரும் போலிருக்கு !
      நன்றி

      Delete
  15. மூன்றுமே கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நிஜமாத்தான் சொல்றீங்களா ,இல்லை டெம்பிளேட் எதுவும் வச்சுக்கிட்டு இருக்கீங்களா சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  16. அலையிறதிற்கென்றே
    அப்பன் ,மகன் ஆனார்களோ

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வாங்க ,பையனுக்கு வயசுக் கோளாறு,அப்பனோ உலகமயக் கொள்கையால் பாதிக்கப் பட்டுள்ளார் ...ஒரு பத்து ரூபாயைக் கூட பையிலே வைச்சுக்க முடியலே ,செல்போன் ரீசார்ஜ்ன்னு பிடுங்கிக்கிறானுங்களே!
      நன்றி

      Delete
  17. Replies
    1. நடப்பைப் பார்த்தால் அப்படித்தானே இருக்கு ,முரளிதரன் ஜி !
      நன்றி

      Delete
  18. சிலர் சிரிப்பார்ன்னு சொல்லுவாங்க ,அதிலே நீங்க ஒருத்தர் போலிருக்கு !
    நன்றி

    ReplyDelete